லூக்கா 21 : 1 (RCTA)
அவர் ஏறெடுத்துப் பார்க்கையில், பணக்காரர் தம் காணிக்கைகளை உண்டியலில் போடுவதைக் கண்டார்.
லூக்கா 21 : 2 (RCTA)
வறுமைமிக்க கைம்பெண் ஒருத்தியும் இரண்டு செப்புக்காசுகளைப் போடுவதைக் கண்டு,
லூக்கா 21 : 3 (RCTA)
" இந்த ஏழைக்கைம்பெண் மற்றெல்லாரையும்விட அதிகம் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21 : 4 (RCTA)
ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து கடவுளுக்குக் காணிக்கை போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" என்றார்.
லூக்கா 21 : 5 (RCTA)
கோயிலைப்பற்றிச் சிலர் பேசிக்கொணடிருக்கையில், அது நல்ல கற்களாலும் பொருந்தனைக் கொடைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது என்றபோது அவர்,
லூக்கா 21 : 6 (RCTA)
"ஒருநாள் வரும்: நீங்கள் காணும் இதெல்லாம், கல்லின்மேல் கல் இராதபடி இடிபடும்" என்றார்.
லூக்கா 21 : 7 (RCTA)
"போதகரே, இவை எப்பொழுது நடக்கும்? இவை நடைபெறவிருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன?" என்று அவர்கள் அவரை வினவினர்.
லூக்கா 21 : 8 (RCTA)
அதற்கு அவர், "ஏமாறாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பலர் என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர், குறித்த காலம் நெருங்கிவிட்டது' என்பார்கள். அவர்கள்பின்னே போகாதீர்கள்.
லூக்கா 21 : 9 (RCTA)
போர்களைப் பற்றியும் குழப்பங்களைப்பற்றியும் கேள்விப்படும்போது திகிலடையாதீர்கள். இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது" என்றார்.
லூக்கா 21 : 10 (RCTA)
மேலும் அவர் சொன்னதாவது: "நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும்.
லூக்கா 21 : 11 (RCTA)
பற்பல இடங்களில் கொடிய நிலநடுக்கமும் கொள்ளைநோய்களும் பஞ்சமும் உண்டாகும்; அச்சமூட்டும் நிகழ்ச்சிகளும் வானத்தில் பெரிய அறிகுறிகளும் தோன்றும்.
லூக்கா 21 : 12 (RCTA)
"இதற்கெல்லாம் முன்னதாக என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்.
லூக்கா 21 : 13 (RCTA)
எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.
லூக்கா 21 : 14 (RCTA)
எனவே, என்னபதில் அளிக்கலாம் என்று முன்னதாகவே எண்ணிப்பார்க்க வேண்டாம்; இதை உள்ளத்தில் இருத்துங்கள்.
லூக்கா 21 : 15 (RCTA)
உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்.
லூக்கா 21 : 16 (RCTA)
உங்கள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினரும் நண்பரும் உங்களைக் காட்டிக்கொடுப்பர். 'உங்களுள் சிலர் கொல்லப்படுவர்
லூக்கா 21 : 17 (RCTA)
என்பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பர்.
லூக்கா 21 : 18 (RCTA)
ஆயினும் உங்கள் தலைமயிர் ஒன்றுகூட விழவேவிழாது.
லூக்கா 21 : 19 (RCTA)
நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்.
லூக்கா 21 : 20 (RCTA)
"யெருசலேமைப் படைகள் முற்றுகையிடக் காணும்போது, அதன் அழிவு நெருங்கி விட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
லூக்கா 21 : 21 (RCTA)
அப்போது யூதேயாவிலிருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். நகருக்குள் இருப்பவர்கள் வெளியேறட்டும். நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நகருக்குள்ளே வராதிருக்கட்டும்.
லூக்கா 21 : 22 (RCTA)
தண்டனையின் காலம் அது. எழுதியுள்ளதெல்லாம் அப்போது நிறைவேற வேண்டும்.
லூக்கா 21 : 23 (RCTA)
அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்! ஏனெனில், நாட்டிலே மிகுந்த நெருக்கடியும், இம்மக்களின்மேல் தேவகோபமும் உண்டாகும்.
லூக்கா 21 : 24 (RCTA)
இவர்கள் வாள்முனையில் மடிவார்கள்; புறநாடுகளுக்கெல்லாம் அடிமைகளாகக் கொண்டுசெல்லப் படுவார்கள். புறவினத்தாரின் காலம் நிறைவேறுமட்டும் யெருசலேம் புறவினத்தாரால் மிதிபடும்.
லூக்கா 21 : 25 (RCTA)
"கதிரவனும் நிலாவிலும் விண்மீன்களிலும் அறிகுறிகள் தென்படும். மண்ணுலகில் கடற்கொந்தளிப்பின் முழக்கத்தினால் நாடுகள் குழப்பமடைந்து இடுக்கண் உறும்.
லூக்கா 21 : 26 (RCTA)
உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்.
லூக்கா 21 : 27 (RCTA)
வானத்தின் படைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகத்தின்மீது வருவதைக் காண்பார்கள்.
லூக்கா 21 : 28 (RCTA)
இவை நிகழத்தொடங்கும்போது, தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
லூக்கா 21 : 29 (RCTA)
மேலும், அவர் அவர்களுக்குச் சொன்ன உவமையாவது: "அத்திமரத்தையும் மற்ற மரங்களையும் பாருங்கள்.
லூக்கா 21 : 30 (RCTA)
அவை தளிப்பதைப் பார்க்கும்பொழுது, இதோ! கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று அறிந்து கொள்ளுகிறீர்கள்.
லூக்கா 21 : 31 (RCTA)
அவ்வாறே, நீங்களும் இதெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது கடவுளின் அரசு அண்மையில் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்.
லூக்கா 21 : 32 (RCTA)
இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21 : 33 (RCTA)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
லூக்கா 21 : 34 (RCTA)
"களியாட்டத்தாலும் குடிவெறியாலும் உலகக் கவலையாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடையாதபடியும், அந்நாள் எதிர்பாராமல் கண்ணிபோல் உங்களைச் சிக்கவைக்காதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்.
லூக்கா 21 : 35 (RCTA)
ஏனெனில், மண்ணுலகெங்கும் வாழும், அனைவர்மேலும் அந்நாள் வந்து விடியும்.
லூக்கா 21 : 36 (RCTA)
நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
லூக்கா 21 : 37 (RCTA)
அவர் பகலிலே கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குப் போய் வெட்டவெளியில் தங்குவார்.
லூக்கா 21 : 38 (RCTA)
பொழுது விடிந்ததும், கோயிலில் அவர் சொல்வதைக்கேட்க மக்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள்.
❮
❯