லூக்கா 20 : 1 (RCTA)
ஒருநாள் அவர் கோயிலில் மக்களுக்குப் போதித்து நற்செய்தியை அறிவிக்கும்போது, தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பர்களோடு அங்கு வர நேர்ந்தது.
லூக்கா 20 : 2 (RCTA)
"எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்? அல்லது உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் என்று எங்களுக்குச் சொல்லும்" என அவரைக் கேட்டனர்.
லூக்கா 20 : 3 (RCTA)
அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்.
லூக்கா 20 : 4 (RCTA)
அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார்.
லூக்கா 20 : 5 (RCTA)
அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாவது: "' வானகத்திலிருந்து வந்தது' என்போமாயின், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.
லூக்கா 20 : 6 (RCTA)
'மனிதரிடமிருந்து வந்தது' ¢எனபோமாயின், மக்கள் அனைவரும் நம்மைக் கல்லால் எறிந்து கொல்வர். ஏனெனில், அருளப்பரை இறைவாக்கினர் என்று நம்பியிருக்கின்றனர்,"
லூக்கா 20 : 7 (RCTA)
எனவே, அவருக்கு மறுமொழியாக, "எங்கிருந்து வந்ததெனத் தெரியாது" என்றார்கள்.
லூக்கா 20 : 8 (RCTA)
அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.
லூக்கா 20 : 9 (RCTA)
பின்னும் அவர் இவ்வுவமையை மக்களுக்குச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் வெளியூர் சென்றிருந்தான்.
லூக்கா 20 : 10 (RCTA)
பருவகாலத்தில் தோட்டத்துப் பலனைக் குடியானவர்கள் தனக்குக் கொடுக்கும்படி, ஊழியன் ஒருவனை அனுப்பினான். குடியானவரோ அவனை அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர்.
லூக்கா 20 : 11 (RCTA)
மீண்டும் ஓர் ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து இழிவுபடுத்தி வெறுங்கையாய் அனுப்பினார்கள்.
லூக்கா 20 : 12 (RCTA)
மூன்றாம் முறையாக ஒருவனை அனுப்பினான். அவனையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினார்கள்.
லூக்கா 20 : 13 (RCTA)
திராட்சைத் தோட்டத்துக்குரியவன், 'இனி என்ன செய்வது? என் அன்பார்ந்த மகனை அனுப்புவேன். அவனையாவது அவர்கள் மதிக்கக்கூடும்' என்றான்.
லூக்கா 20 : 14 (RCTA)
குடியானவர்கள் அவனைக் கண்டதும், 'இவனே சொத்துக்குரியவன். சொத்து நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோம்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு,
லூக்கா 20 : 15 (RCTA)
அவனைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். "அப்படியானால், தோட்டத்துக்குரியவன் அவர்களை என்ன செய்வான்?
லூக்கா 20 : 16 (RCTA)
அவன் வந்து, அக்குடியானவர்களை ஒழித்து, தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்." இதைக் கேட்ட அவர்கள், "ஐயோ, வேண்டாமே! ', என்றனர்.
லூக்கா 20 : 17 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன?
லூக்கா 20 : 18 (RCTA)
அக்கல்லின் மேல் விழுபவன் எவனும் நொறுங்கிப்போவான். அது எவன்மேல் விழுமோ, அவன் தவிடுபொடியாவான்." என்றார்.
லூக்கா 20 : 19 (RCTA)
தங்களைக் குறித்தே இவ்வுவமையை அவர் கூறினார் என்று உணர்ந்து, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அப்போதே அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சினர்.
லூக்கா 20 : 20 (RCTA)
ஆகையால் அவர்கள் சமயம்பார்த்து வேவுகாரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு அவரைக் கையளிக்கும்படி, நேர்மையானவர்களைப்போல நடித்து, அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கப் பார்த்தனர்.
லூக்கா 20 : 21 (RCTA)
" போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் சரியே. முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும்.
லூக்கா 20 : 22 (RCTA)
செசாருக்கு நாங்கள் வரிகொடுப்பது முறையா, இல்லையா?" என்று அவரைக் கேட்டனர்.
லூக்கா 20 : 23 (RCTA)
அவர் அவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டுகொண்டு,
லூக்கா 20 : 24 (RCTA)
"ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். அதிலுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர்.
லூக்கா 20 : 25 (RCTA)
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொன்னார்.
லூக்கா 20 : 26 (RCTA)
மக்கள் முன்னிலையில் அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல், அவருடைய மறுமொழியைக் கேட்டு வியந்து பேசாதிருந்தனர்.
லூக்கா 20 : 27 (RCTA)
பின்னர், உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறும் சதுசேயருள் சிலர் அவரை அணுகி,
லூக்கா 20 : 28 (RCTA)
"போதகரே, மனைவியுள்ள ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.
லூக்கா 20 : 29 (RCTA)
இவ்வாறிருக்க, சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறின்றி இறந்தான்.
லூக்கா 20 : 30 (RCTA)
இரண்டாம், மூன்றாம் சகோதரரும் அவளை மணந்தனர்.
லூக்கா 20 : 31 (RCTA)
இவ்வறே எழுவரும் பிள்ளையின்றி இறந்தனர்.
லூக்கா 20 : 32 (RCTA)
இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள்.
லூக்கா 20 : 33 (RCTA)
உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே! " என்றனர்.
லூக்கா 20 : 34 (RCTA)
இயேசு அவர்களிடம், "இவ்வுலகிள் மக்கள் பெண்கொண்டும் கொடுத்தும் வருகின்றனர்.
லூக்கா 20 : 35 (RCTA)
மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்குத் தகுதியுள்ளவராக எண்ணப்படுவோர் அங்கே பெண்கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை.
லூக்கா 20 : 36 (RCTA)
ஏனெனில், இனி, அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள். மேலும் உயிர்த்த மக்களாயிருப்பதால் கடவுளின் மக்களாயும் இருப்பார்கள்.
லூக்கா 20 : 37 (RCTA)
இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை, மோயீசனும் முட்செடியைப்பற்றிய பகுதியில் வெளிப்படுத்தினார். அதில் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று குறிப்பிடுகிறார்.
லூக்கா 20 : 38 (RCTA)
அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார்.
லூக்கா 20 : 39 (RCTA)
அதற்கு மறைநூல் அறிஞர் சிலர், "போதகரே, நன்றாய்ச் சொன்னீர்" என்றனர்.
லூக்கா 20 : 40 (RCTA)
இதற்குப் பின்னர் அவரை எதுவும் கேட்க அவர்கள் துணியவில்லை.
லூக்கா 20 : 41 (RCTA)
மேலும் அவர் அவர்களிடம், "மெசியாவைத் தாவீதின் மகன் என்று எப்படிக் கூறலாம்?
லூக்கா 20 : 42 (RCTA)
ஏனெனில், 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது,
லூக்கா 20 : 43 (RCTA)
நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார்.
லூக்கா 20 : 44 (RCTA)
ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாகமட்டும் இருப்பது எப்படி?" என்று வினவினார்.
லூக்கா 20 : 45 (RCTA)
மக்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தம் சீடரிடம்,
லூக்கா 20 : 46 (RCTA)
"மறைநூல் அறிஞர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாட விரும்புகிறார்கள். பொது இடங்களில் வணக்கத்தையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், விருந்துகளில் முதல் இடங்களையும் பெற ஆசிக்கிறார்கள்.
லூக்கா 20 : 47 (RCTA)
கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: