லூக்கா 2 : 1 (RCTA)
அந்நாளில் உலக முழுமையும் மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்தது.
லூக்கா 2 : 2 (RCTA)
முதலாவதான இக்கணக்கு சீரியா நாட்டைக் கிரேனியு ஆண்ட காலத்தில் எடுக்கப்பட்டது.
லூக்கா 2 : 3 (RCTA)
அதன்படி அனைவரும் பெயரைப் பதிவுசெய்யத் தத்தம் ஊருக்குச் சென்றனர்.
லூக்கா 2 : 4 (RCTA)
சூசையும் கருப்பவதியாயிருந்த மனைவி மரியாளோடு பெயரைப் பதிவுசெய்யக் கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,
லூக்கா 2 : 5 (RCTA)
யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்.
லூக்கா 2 : 6 (RCTA)
அவர்கள் அங்கிருந்தபொழுது, அவளுக்குப் பேறுகாலம் வந்தது.
லூக்கா 2 : 7 (RCTA)
அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். ஏனெனில், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
லூக்கா 2 : 8 (RCTA)
அதே பகுதியில் இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.
லூக்கா 2 : 9 (RCTA)
ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
லூக்கா 2 : 10 (RCTA)
வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2 : 11 (RCTA)
இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
லூக்கா 2 : 12 (RCTA)
குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்" என்றார்.
லூக்கா 2 : 13 (RCTA)
உடனே வானோர் படைத்திரள் அத்தூதரோடு சேர்ந்து,
லூக்கா 2 : 14 (RCTA)
" உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே அவர் தயவுபெற்றவர்க்கு அமைதி ஆகுக! " என்று கடவுளைப் புகழ்ந்தது.
லூக்கா 2 : 15 (RCTA)
தூதர்கள் அவர்களை விட்டு வானகம் சென்றபின், இடையர் ஒருவரையொருவர் நோக்கி, " வாருங்கள், பெத்லெகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்த இந்நிகழ்ச்சியைக் காண்போம் " என்று சொல்லிக் கொண்டு,ஃ
லூக்கா 2 : 16 (RCTA)
விரைந்து சென்று, மரியாளையும் சூசையையும், முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டனர்.
லூக்கா 2 : 17 (RCTA)
கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்.1
லூக்கா 2 : 18 (RCTA)
கேட்ட யாவரும் தங்களுக்கு இடையர் கூறியதுபற்றி வியப்படைந்தனர்.
லூக்கா 2 : 19 (RCTA)
மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருந்திச் சிந்தித்து வந்தாள்.
லூக்கா 2 : 20 (RCTA)
இடையர் தாம் கண்டது கேட்டதெல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திப் புகழ்ந்துகொண்டே திரும்பினார். அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது.
லூக்கா 2 : 21 (RCTA)
எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த ' இயேசு ' என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.
லூக்கா 2 : 22 (RCTA)
மோயீசன் சட்டப்படி அவர்களுக்குச் சுத்திகார நாள் வந்தபோது குழந்தையை யெருசலேமுக்குக் கொண்டுபோயினர்.
லூக்கா 2 : 23 (RCTA)
'தலைப்பேறான எந்த ஆணும் ஆண்டவருடைய உரிமையாகக் கருதப்படும்' என்று ஆண்டவருடைய சட்டத்தில் எழுதியிருந்தபடி அதனை ஆண்டவர் திருமுன் நிறுத்தவும்,
லூக்கா 2 : 24 (RCTA)
அச்சட்டத்திலே கூறியுள்ளபடி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டியிருந்தது.
லூக்கா 2 : 25 (RCTA)
அப்போது யெருசலேமிலே சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நீதிமான், கடவுள் பக்தர். இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர். பரிசுத்த ஆவி அவர்மீது இருந்தார்.
லூக்கா 2 : 26 (RCTA)
ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்குமுன் தாம் சாவதில்லை என்று பரிசுத்த ஆவியால் அறிவிக்கப்பெற்றிருந்தார்.
லூக்கா 2 : 27 (RCTA)
அவர் தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்தார். திருச்சட்ட முறைமைப்படி குழந்தைக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுவதற்குப் பாலன் இயேசுவைப் பெற்றோர் கொண்டு வந்தபோது,
லூக்கா 2 : 28 (RCTA)
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு,
லூக்கா 2 : 29 (RCTA)
"ஆண்டவரே, இப்போது உம் அடியானை அமைதியாகப் போகவிடும். ஏனெனில், உமது வாக்கு நிறைவேறிற்று.
லூக்கா 2 : 30 (RCTA)
மக்கள் அனைவரும் காண நீர் ஆயத்தம் செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
லூக்கா 2 : 31 (RCTA)
இதுவே புறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி.
லூக்கா 2 : 32 (RCTA)
இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமை" என்று கடவுளைப் போற்றினார்.
லூக்கா 2 : 33 (RCTA)
குழந்தையைக் குறித்துக் கூறியவற்றைக் கேட்டு அதன் தாயும் தந்தையும் வியந்து கொண்டிருந்தனர்.
லூக்கா 2 : 34 (RCTA)
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.
லூக்கா 2 : 35 (RCTA)
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்-- இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும்" என்றார்.
லூக்கா 2 : 36 (RCTA)
அன்றியும், ஆசேர் குலத்தைச் சார்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்றொருத்தி இருந்தாள். அவள் இறைவாக்குரைப்பவள்.
லூக்கா 2 : 37 (RCTA)
வயதில் மிக முதிர்ந்தவள்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தபின், கைம்பெண் ஆனாள். ஏறக்குறைய எண்பத்து நான்கு வயதானவள். கோயிலை விட்டு நீங்காமல் நோன்பாலும் செபத்தாலும் அல்லும் பகலும் பணிபுரிந்து வந்தாள்.
லூக்கா 2 : 38 (RCTA)
அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.
லூக்கா 2 : 39 (RCTA)
ஆண்டவருடைய சட்டப்படி எல்லாம் நிறைவேற்றியபின், அவர்கள் கலிலேயாவில் உள்ள தம் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.
லூக்கா 2 : 40 (RCTA)
பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்; ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்; கடவுள் அருளும் அவர்மீது இருந்தது.
லூக்கா 2 : 41 (RCTA)
ஆண்டுதோறும் அவருடைய பெற்றோர் பாஸ்காத் திருவிழாவுக்காக யெருசலேமுக்குப் போவார்கள்.
லூக்கா 2 : 42 (RCTA)
அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது திருவிழாவின் முறைப்படி யெருசலேமுக்குச் சென்றனர்.
லூக்கா 2 : 43 (RCTA)
திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
லூக்கா 2 : 44 (RCTA)
யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர் உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.
லூக்கா 2 : 45 (RCTA)
அவரைக் காணாததால் தேடிக்கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.
லூக்கா 2 : 46 (RCTA)
மூன்று நாளுக்குப்பின் அவரைக் கோயிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.
லூக்கா 2 : 47 (RCTA)
கேட்டவர் அனைவரும் அவருடைய மறுமொழிகளில் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு திகைத்துப்போயினர்.
லூக்கா 2 : 48 (RCTA)
அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய தாய் அவரைப் பார்த்து, " மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே! " என்றாள்.
லூக்கா 2 : 49 (RCTA)
அதற்கு அவர், " ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.
லூக்கா 2 : 50 (RCTA)
அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.
லூக்கா 2 : 51 (RCTA)
பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.
லூக்கா 2 : 52 (RCTA)
இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: