லூக்கா 19 : 1 (RCTA)
அவர் யெரிக்கோவுக்கு வந்து அதனூடே போய்க்கொண்டிருந்தார்.
லூக்கா 19 : 2 (RCTA)
அங்கே சக்கேயு என்னும் ஒருவன் இருந்தான். அவன் தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன்.
லூக்கா 19 : 3 (RCTA)
இயேசு யாரென்று பார்க்க வழிதேடினான். கூட்டமாயிருந்ததாலும், அவன் குள்ளானயிருந்ததாலும் அவரைப் பார்க்கமுடியவில்லை.
லூக்கா 19 : 4 (RCTA)
அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், அவர் அவ்வழியே வரவிருந்தார்.
லூக்கா 19 : 5 (RCTA)
இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.
லூக்கா 19 : 6 (RCTA)
அவன் விரைவாய் இறங்கி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.
லூக்கா 19 : 7 (RCTA)
இதைக் கண்ட அனைவரும், "பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தனர்.
லூக்கா 19 : 8 (RCTA)
ஆனால் சக்கேயு எழுந்து, "ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.
லூக்கா 19 : 9 (RCTA)
அதற்கு இயேசு, " இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.
லூக்கா 19 : 10 (RCTA)
இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.
லூக்கா 19 : 11 (RCTA)
மக்கள் இதைக் கேட்டுக்கொண்டிருக்கையில் அவர் யெருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், கடவுளின் அரசு உடனே வெளிப்படும் என்று அவர்கள் எண்ணியதாலும்,
லூக்கா 19 : 12 (RCTA)
அவர் தொடர்ந்து ஓர் உவமை சொன்னார்: "பெருங்குடி மகன் ஒருவன் அரசபதவி பெற்றுதரத் தொலைநாட்டிற்குப் புறப்பட்டான்.
லூக்கா 19 : 13 (RCTA)
தன் ஊழியர் பத்துப்பேரை அழைத்து பத்துப் பொற்காசுகளை அவர்களுக்குக் கொடுத்து, 'நான் வரும்வரை வாணிகம் செய்யுங்கள்' என்றான்.
லூக்கா 19 : 14 (RCTA)
அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்தனர். ஆகையால், 'இவனை எங்கள் அரசனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று சொல்லும்படி அவனுக்குப்பின் தூதுவிடுத்தனர்.
லூக்கா 19 : 15 (RCTA)
"அரச பதவி பெற்றுத் திரும்பி வந்தபின், பணம் வாங்கிய ஒவ்வொருவனும் சம்பாதித்தது எவ்வளவு என்று அறிய அவ்வூழியரைத் தன்னிடம் அழைத்துவரச் சொன்னான்.
லூக்கா 19 : 16 (RCTA)
முதல் ஊழியன் வந்து, 'அரசே, உமது பொற்காசு பத்துப் பொற்காசுகளைச் சம்பாதித்துள்ளது' என்றான்.
லூக்கா 19 : 17 (RCTA)
அவனோ, ' நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தால், பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரு' என்றான்.
லூக்கா 19 : 18 (RCTA)
வேறொருவன் வந்து, 'அரசே, உமது பொற்காசு ஐந்து பொற்காசுகளை ஆக்கியுள்ளது' என்றான்.
லூக்கா 19 : 19 (RCTA)
அவனிடமும் அரசன், 'நீ ஐந்து நகர்களுக்குத் தலைவனாய் இரு' என்றான்.
லூக்கா 19 : 20 (RCTA)
இன்னொருவன் வந்து, 'அரசே, இதோ! உமது பொற்காசு. உமக்கு அஞ்சி இதை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்தேன்.
லூக்கா 19 : 21 (RCTA)
ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர்; வைக்காததை எடுப்பவர், விதைக்காததை அறுப்பவர்' என்றான்.
லூக்கா 19 : 22 (RCTA)
அரசன் அவனைப் பார்த்து, 'கெட்ட ஊழியனே உன்வாய்ச் சொல்லைக்கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்புள்ளவன், வைக்காததை எடுப்பவன், விதைக்காததை அறுப்பவன் என்பதை அறிந்தும்,
லூக்கா 19 : 23 (RCTA)
நீ ஏன் என் பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்துவைக்கவில்லை? நான் வந்து வட்டியோடு திரும்பப்பெற்றிருப்பேனே' என்றான்.
லூக்கா 19 : 24 (RCTA)
பின், சூழநின்றவர்களை நோக்கி, 'இவனிடமிருந்து பொற்காசைப் பிடுங்கி, பத்துப் பொற்காசுகள் உடையவனுக்குக் கொடுங்கள்' என்றான்.
லூக்கா 19 : 25 (RCTA)
அதற்கு அவர்கள், 'அரசே, அவனிடம் பத்துப் பொற்காசுகள் உள்ளனவே! ' என்றார்கள்.
லூக்கா 19 : 26 (RCTA)
அரசனோ, 'உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 19 : 27 (RCTA)
"அன்றியும் என்னைத் தங்கள் அரசனாக ஏற்க விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டுவந்து, என்முன் வெட்டி வீழ்த்துங்கள்' என்றான்."
லூக்கா 19 : 28 (RCTA)
இதெல்லாம் சொன்ன பின்பு, அவர் யெருசலேமை நோக்கி அவர்களுக்கு முன்னால் நடந்துபோனார்.
லூக்கா 19 : 29 (RCTA)
அவர் ஒலிவத்தோப்புமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபோது, சீடருள் இருவரை அழைத்து,
லூக்கா 19 : 30 (RCTA)
"எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழையும்போது இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
லூக்கா 19 : 31 (RCTA)
'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், அவரிடம், 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.
லூக்கா 19 : 32 (RCTA)
அனுப்பப்பட்டவர்கள் சென்று, அவர் சொன்னபடியே கண்டனர்.
லூக்கா 19 : 33 (RCTA)
அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்த்தபொழுது அதற்கு உரியவர்கள், 'கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்க,
லூக்கா 19 : 34 (RCTA)
" இது ஆண்டவருக்குத் தேவை என்றனர்.
லூக்கா 19 : 35 (RCTA)
அக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏறச் செய்தனர்.
லூக்கா 19 : 36 (RCTA)
அவர் செல்லும்போது வழியில் தங்கள் போர்வைகளை விரித்தனர்.
லூக்கா 19 : 37 (RCTA)
அவர் ஒலிவமலைச் சாரலை நெருங்கியதும், சீடர் கூட்டமெல்லாம் தாங்கள் கண்ட புதுமைகள் அனைத்தையும்பற்றி மகிழ்ச்சியோடு, உரத்த குரலில்,
லூக்கா 19 : 38 (RCTA)
'ஆண்டவர் பெயரால் அரசராக வருகிறவர் வாழி! வானகத்தில் அமைதியும் உன்னதங்களில் மகிமையும் உண்டாகுக!' என்று கடவுளைப் புகழத் தொடங்கியது.
லூக்கா 19 : 39 (RCTA)
கூட்டத்திலிருந்த பரிசேயர் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்" என்றனர்.
லூக்கா 19 : 40 (RCTA)
அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால், கற்களே கூவும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
லூக்கா 19 : 41 (RCTA)
அவர் நகரை நெருங்கியபோது அதைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டுப் புலம்பியதாவது:
லூக்கா 19 : 42 (RCTA)
"சமாதானத்திற்கான வழியை நீயும் இந்நாளில் அறிந்திருக்கலாகாதா? இப்பொழுதோ, அது உன் கண்ணுக்கு மறைந்துள்ளது.
லூக்கா 19 : 43 (RCTA)
ஒருநாள் வரும், அன்று உன் பகைவர் உன்னைச் சுற்றிலும் அரண் எழுப்பி உன்னைச் சூழ்ந்துகொண்டு எப்பக்கத்திலிருந்தும் நெருக்கி,
லூக்கா 19 : 44 (RCTA)
உன்னைனயும் உன்னிடமுள்ள உன் மக்களையும் நொறுக்கித் தரைமட்டமாக்கி, உன்னிடம் கல்லின்மேல் கல் இராதபடி செய்வார்கள். -- ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறியவில்லை." வியாபாரிகளை விரட்டுதல்
லூக்கா 19 : 45 (RCTA)
பின்பு அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களைத் துரத்தத் தொடங்கி,
லூக்கா 19 : 46 (RCTA)
அவர்களை நோக்கி, "'என் வீடு செபவீடாகும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
லூக்கா 19 : 47 (RCTA)
அவர் நாடோறும் கோயிலில் போதித்து வந்தார். தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மக்களுள் பெரியோர்களும் அவரைத் தொலைக்கப்பார்த்தனர்.
லூக்கா 19 : 48 (RCTA)
ஆனால் எப்படித் தொலைப்பதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், மக்கள் எல்லாரும் அவர்சொல்வதைக் கேட்டு அவர்வசப்பட்டிருந்தனர்.
❮
❯