லூக்கா 17 : 1 (RCTA)
மேலும், இயேசு தம் சீடரை நோக்கி, "இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!
லூக்கா 17 : 2 (RCTA)
அவன் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, அவன் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.
லூக்கா 17 : 3 (RCTA)
எச்சரிக்கையாயிருங்கள். " உன் சகோதரன் குற்றம் செய்தால் அவனைக் கடிந்துகொள். மனம் வருத்தினால் அவனை மன்னித்துவிடு.
லூக்கா 17 : 4 (RCTA)
அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, 'நான் மனம் வருந்துகிறேன்' என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.
லூக்கா 17 : 5 (RCTA)
பின்பு அப்போஸ்தலர்கள், "எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" என்று ஆண்டவரைக் கேட்டார்கள்.
லூக்கா 17 : 6 (RCTA)
ஆண்டவரோ, "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இம்முசுக்கட்டை மரத்தை நோக்கி, 'வேருடன் பெயர்ந்து கடலில் ஊன்றிக்கொள்' என்பீர்களாகில், உங்களுக்கு அது கீழ்ப்படியும்.
லூக்கா 17 : 7 (RCTA)
"உழுவதற்கோ மேய்ப்பதற்கோ உங்களிடம் ஓர் ஊழியன் இருந்தால், அவன் வயலிலிருந்து திரும்பி வரும்பொழுது, 'நீ உடனே என்னோடு வந்து சாப்பிடு' என்று உங்களுள் எவனாவது சொல்லுவானா?
லூக்கா 17 : 8 (RCTA)
மாறாக, 'எனக்குச் சாப்பாடு ஆயத்தம்செய். உன் இடையை வரிந்துகட்டிக்கொண்டு நான் உண்டு குடிக்குமளவும் எனக்குப் பணிவிடைசெய்; பின்பு நீ உண்டு குடிக்கலாம்' என்று சொல்லமாட்டானா?
லூக்கா 17 : 9 (RCTA)
தான் கட்டளையிட்டதைச் செய்ததற்காகத் தன் ஊழியனுக்கு நன்றி சொல்வானா?
லூக்கா 17 : 10 (RCTA)
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்தபின், 'நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்" என்றார்.
லூக்கா 17 : 11 (RCTA)
அவர் யெருசலேமுக்குப் போகையில், சமாரியா, கலிலேயா நாடுகள்வழியாகச் சென்றார்.
லூக்கா 17 : 12 (RCTA)
ஓர் ஊருக்குள் வரும்பொழுது, தொழுநோயாளிகள் பத்துப்பேர் அவருக்கு எதிரே வந்தனர். தொலைவில் நின்றுகொண்டே,
லூக்கா 17 : 13 (RCTA)
"குருவே, இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்" என்று உரக்கக்கூவினர்.
லூக்கா 17 : 14 (RCTA)
அவர்களைக் கண்டதும், "நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் " என்றார். அவ்வாறே செல்லும்போது அவர்கள் குணமடைந்தனர்.
லூக்கா 17 : 15 (RCTA)
அவர்களுள் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டு உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு, திரும்பி வந்து,
லூக்கா 17 : 16 (RCTA)
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான். அவனோ சமாரியன்.
லூக்கா 17 : 17 (RCTA)
இயேசு அவனைப் பார்த்து, 'பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
லூக்கா 17 : 18 (RCTA)
திரும்பி வந்து கடவுளை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத்தவிர வேறு ஒருவரையும் காணோமே! " என்றார்.
லூக்கா 17 : 19 (RCTA)
மேலும், "எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று அவனிடம் கூறினார்.
லூக்கா 17 : 20 (RCTA)
கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் வினவ, அவர் மறுமொழியாக, "கடவுளின் அரசு கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
லூக்கா 17 : 21 (RCTA)
'இதோ இங்கே! அதோ அங்கே! 'என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.
லூக்கா 17 : 22 (RCTA)
மேலும் அவர் சீடர்களிடம் மனுமகனுடைய நாட்களில் ஒன்றையாவது காண வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆனால் காண மாட்டீர்கள்.
லூக்கா 17 : 23 (RCTA)
உங்களிடம், 'இதோ இங்கே! அதோ அங்கே!' என்பார்கள். நீங்களோ போகவேண்டாம்; அவர்கள்பின் ஓடவேண்டாம்.
லூக்கா 17 : 24 (RCTA)
மின்னல் வானத்தின் ஒரு முனையில் மின்னி எதிர்முனைக்குப் பாய்வதுபோலவே, மனுமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
லூக்கா 17 : 25 (RCTA)
ஆனால் முதலில் அவர் மிகவும் பாடுபட்டு இந்தத் தலைமுறையால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
லூக்கா 17 : 26 (RCTA)
நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மனுமகன் வரும் காலத்திலும் நடக்கும்.
லூக்கா 17 : 27 (RCTA)
நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை மக்கள் உண்டு குடித்ததும், பெண் கொண்டு கொடுத்தும் வந்தனர். பெருவெள்ளம் வந்து அனைவரையும் அழித்தது.
லூக்கா 17 : 28 (RCTA)
அவ்வாறே, லோத்தின் காலத்திலும் நடந்தது: உண்டு குடித்தனர்; விற்று வாங்கினர்; நட்டனர். கட்டினர்.
லூக்கா 17 : 29 (RCTA)
லோத்து சோதோமை விட்டுச் சென்ற நாளில், வானிலிருந்து தீயும் கந்தகமும் பெய்து எல்லாரையும் அழித்தது.
லூக்கா 17 : 30 (RCTA)
மனுமகன் வெளிப்படும் நாளிலும் அவ்வாறே இருக்கும்.
லூக்கா 17 : 31 (RCTA)
"அந்நாளில் கூரைமேல் இருப்பவன், வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுப்பதற்கு இறங்கவேண்டாம். அப்படியே வயலில் இருப்பவன் திரும்பி வரவேண்டாம்.
லூக்கா 17 : 32 (RCTA)
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
லூக்கா 17 : 33 (RCTA)
தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
லூக்கா 17 : 34 (RCTA)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அந்த இரவில் ஒரே படுக்கையில் இருவர் இருப்பர், ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.
லூக்கா 17 : 35 (RCTA)
இரு பெண்கள் சேர்ந்து மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்."
லூக்கா 17 : 36 (RCTA)
அதற்கு அவர்கள், "எங்கே ஆண்டவரே?" என்றார்கள்.
லூக்கா 17 : 37 (RCTA)
அவரோ, "பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: