லூக்கா 11 : 1 (RCTA)
அவர் ஒருநாள் ஓரிடத்தில் செபம் செய்துகொண்டிருந்தார். அது முடிந்தபின், சீடருள் ஒருவர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, அருளப்பர் தம் சீடருக்குச் செபிக்கக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.
லூக்கா 11 : 2 (RCTA)
அதற்கு அவர், "நீங்கள் செபிக்கும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: 'தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக, உமது அரசு வருக;
லூக்கா 11 : 3 (RCTA)
எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,
லூக்கா 11 : 4 (RCTA)
எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் " ' என்றார்.
லூக்கா 11 : 5 (RCTA)
மேலும் "உங்களுள் ஒருவன் தன் நண்பனிடமே நள்ளிரவில் சென்று, ' நண்பா, எனக்கு மூன்று அப்பம் கடன்கொடு.
லூக்கா 11 : 6 (RCTA)
ஏனெனில், பயணம்செய்யும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்லுகிறான் என வைத்துக் கொள்வோம்.
லூக்கா 11 : 7 (RCTA)
அவனும் உள்ளிருந்து மறுமொழியாக, ' என்னைத் தொந்தரவுசெய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்கமுடியாது ' என்று சொல்லுகிறான்.
லூக்கா 11 : 8 (RCTA)
நண்பனோ கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால், அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவனுடைய தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவனுக்கு எத்தனை தேவையோ அத்தனையும் கொடுப்பான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 11 : 9 (RCTA)
"மேலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
லூக்கா 11 : 10 (RCTA)
ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
லூக்கா 11 : 11 (RCTA)
உங்களில் ஒருவன் தன் தந்தையிடம் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லையா கொடுபபான்? மீன் கேட்டால், மீனுக்குப் பதிலாகப் பாம்பையா கொடுப்பான் ?
லூக்கா 11 : 12 (RCTA)
முட்டை கேட்டால், தேளையா கொடுப்பான் ?
லூக்கா 11 : 13 (RCTA)
ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.
லூக்கா 11 : 14 (RCTA)
ஒருநாள் அவர் பேய் ஓட்டிக்கொண்டிருந்தார். அது ஊமைப்பேய். பேயை ஓட்டி விடவே, ஊமையன் பேசினான். மக்கள் வியப்படைந்தனர்.
லூக்கா 11 : 15 (RCTA)
அவர்களுள் சிலர், " பேய்கள் தலைவனான பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய் ஓட்டுகிறான்" என்றனர்.
லூக்கா 11 : 16 (RCTA)
வேறு சிலர் அவரைச் சோதிக்க, வானிலிருந்து அருங்குறி ஒன்று காட்டும்படி கேட்டனர்.
லூக்கா 11 : 17 (RCTA)
அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசுவோ, "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப் போம்; வீடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுந்தழியும்.
லூக்கா 11 : 18 (RCTA)
பெயல்செபூலைக்கொண்டு நான் பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லுகிறீர்களே; தனக்கு எதிராகத் தானே பிரியும் சாத்தானின் அரசு எப்படி நிலைக்கும்?
லூக்கா 11 : 19 (RCTA)
நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள். எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.
லூக்கா 11 : 20 (RCTA)
நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் விரலால் என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.
லூக்கா 11 : 21 (RCTA)
வலியவன் போர்க்கோலம் பூண்டு தன் அரண்மனையைப் பாதுகாத்தால், அவன் உடைமைகள் பத்திரமாக இருக்கும்.
லூக்கா 11 : 22 (RCTA)
அவனிலும் வலியவன் ஒருவன் எதிர்த்துவந்து அவனை வென்றால், அவன் நம்பியிருந்த போர்க்கருவிகளையெல்லாம் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவான்.
லூக்கா 11 : 23 (RCTA)
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
லூக்கா 11 : 24 (RCTA)
"அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களிலெல்லாம் சுற்றி அலைந்து, இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், 'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது.
லூக்கா 11 : 25 (RCTA)
திரும்பி வந்து, அவ்வீடு கூட்டி அழகுபடுத்தியிருப்பதைக் காண்கிறது.
லூக்கா 11 : 26 (RCTA)
மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களை அழைத்துவர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம்மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று" என்றார்.
லூக்கா 11 : 27 (RCTA)
அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி, "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று குரலெடுத்துக் கூறினாள்.
லூக்கா 11 : 28 (RCTA)
அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
லூக்கா 11 : 29 (RCTA)
கூட்டம் பெருகப் பெருக, அவர் கூறலானார்: "இத்தலைமுறை பொல்லாத தலைமுறை. அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறை வாக்கினரின் அருங்குறியேயன்றி வேறெந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.
லூக்கா 11 : 30 (RCTA)
எவ்வாறு யோனாஸ் நினிவே மக்களுக்கு அருங்குறியாய் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் இத்தலைமுறைக்கு அருங்குறியாய் இருப்பார்.
லூக்கா 11 : 31 (RCTA)
தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறையின் மக்களுக்கு எதிராக எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் கடையெல்லையிலிருந்து வந்தாள். சாலோமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
லூக்கா 11 : 32 (RCTA)
தீர்வையின்போது, நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
லூக்கா 11 : 33 (RCTA)
' எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான்.
லூக்கா 11 : 34 (RCTA)
உன் கண்தான் உடலுக்கு விளக்கு. உன் கண் தெளிவாக இருந்தால், உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும். உன் கண் கெட்டிருந்தால், உடல் இருண்டிருக்கும்.
லூக்கா 11 : 35 (RCTA)
எனவே. உன்னிலுள்ள ஒளி இருளாயிருக்கிறதா என்றுபார்.
லூக்கா 11 : 36 (RCTA)
இருள் சிறிதுமின்றி உன் உடல் முழுவதும் ஒளியாயிருந்தால், விளக்கு தன் கதிரால் உனக்கு ஒளிச்செய்வதுபோல், உன் உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும்."
லூக்கா 11 : 37 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்.
லூக்கா 11 : 38 (RCTA)
உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு பரிசேயன் வியப்படைந்தான்.
லூக்கா 11 : 39 (RCTA)
ஆண்டவர் அவனை நோக்கி, "நீங்களோ, பரிசேயரே, கிண்ணத்தையும் உணவுப் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன.
லூக்கா 11 : 40 (RCTA)
அறிவிலிகளே, வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?
லூக்கா 11 : 41 (RCTA)
பாத்திரத்தில் உள்ளதைப் பிச்சைகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் தூயதாய் இருக்கும்.
லூக்கா 11 : 42 (RCTA)
ஆனால் பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதாப்பு, காய்கறி முதலியனவற்றுள் பத்திலொரு பாகம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.
லூக்கா 11 : 43 (RCTA)
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்.
லூக்கா 11 : 44 (RCTA)
உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அடையாளம் தெரியாத சவக்குழிகள் போல் இருக்கிறீர்கள். அவற்றை அறியாமல் மனிதர் அவற்றின்மேல் நடந்துபோகிறார்கள் " என்றார்.
லூக்கா 11 : 45 (RCTA)
சட்ட வல்லுநருள் ஒருவன் அவரிடம், "போதகரே, இப்படிப் பேசி எங்களையும் அவமானப்படுத்துகிறீர் " என்றான்.
லூக்கா 11 : 46 (RCTA)
அவர் கூறியதாவது: "சட்டவல்லுநரே, உங்களுக்கும் ஐயோ கேடு! ஏனெனில், தாங்கமுடியாத சுமையை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ அச்சுமையை ஒரு விரலாலும் தொடுவதில்லை.
லூக்கா 11 : 47 (RCTA)
"இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுகிற உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் முன்னோரே அவர்களைக் கொன்றவர்கள்.
லூக்கா 11 : 48 (RCTA)
உங்கள் முன்னோரின் செயல்களுக்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்பதற்கு, இவ்வாறு சாட்சி அளிக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் முன்னோர் அவர்களைக் கொலைசெய்தனர்; நீங்களோ அவர்களுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள்.
லூக்கா 11 : 49 (RCTA)
"அதனால் தான் கடவுளின் ஞானம் இங்ஙனம் கூறியது: 'இறைவாக்கினர்களையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடம் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொல்லுவார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.'
லூக்கா 11 : 50 (RCTA)
ஆபேலுடைய இரத்தம்முதல், பீடத்திற்கும் புனித இல்லத்திற்கும் இடையே மடிந்த சக்கரியாசின் இரத்தம்வரை, உலகம் தோன்றியது முதல் சிந்தப்பட்ட இறைவாக்கினர்கள் அனைவரின் இரத்தத்திற்காக இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.
லூக்கா 11 : 51 (RCTA)
ஆம், உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.
லூக்கா 11 : 52 (RCTA)
"சட்டவல்லுநரே. உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அறிவின் திறவுகோலைக் கைப்பற்றிக்கொண்டு நீங்களும் நுழையவில்லை; நுழைவோரையும் தடுத்தீர்கள்."
லூக்கா 11 : 53 (RCTA)
அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவர்மீது சீறி எழுந்து,
லூக்கா 11 : 54 (RCTA)
அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்.
❮
❯