லூக்கா 10 : 1 (RCTA)
இதற்குப்பின், ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.
லூக்கா 10 : 2 (RCTA)
அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.
லூக்கா 10 : 3 (RCTA)
செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்.
லூக்கா 10 : 4 (RCTA)
பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம்.
லூக்கா 10 : 5 (RCTA)
நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், 'இவ்வீட்டுக்குச் சமாதானம்' என்று வாழ்த்துங்கள்.
லூக்கா 10 : 6 (RCTA)
சமாதானத்துக்குரியவன்அங்கு இருந்தால், உங்கள் சமாதானம் அவனிடம் தங்கும்; இல்லையேல் உங்களிடம் திரும்பிவிடும்.
லூக்கா 10 : 7 (RCTA)
அவர்களிடம் உள்ளதை உண்டு குடித்து அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன். வீடு வீடாய்ச் செல்லவேண்டாம்.
லூக்கா 10 : 8 (RCTA)
நீங்கள் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுகிறதை உண்டு,
லூக்கா 10 : 9 (RCTA)
அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.
லூக்கா 10 : 10 (RCTA)
மாறாக, நீங்களும் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தெருவில் சென்று,
லூக்கா 10 : 11 (RCTA)
'எங்கள் காலில் ஒட்டிய உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிப்போடுகிறோம்; இருப்பினும் கடவுளின் அரசு நெருங்கியுள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.
லூக்கா 10 : 12 (RCTA)
அந்நாளில் சோதோமுக்கு நேரிடுவது அவ்வூருக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது என உங்களுக்குக் கூறுகிறேன்.
லூக்கா 10 : 13 (RCTA)
" கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
லூக்கா 10 : 14 (RCTA)
ஆனால், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது.
லூக்கா 10 : 15 (RCTA)
கப்பர்நகூமே, வானளாவ உயர்வாயோ ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய்.
லூக்கா 10 : 16 (RCTA)
" உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான். என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."
லூக்கா 10 : 17 (RCTA)
பின்பு, எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் வந்து, "ஆண்டவரே, உம் பெயரால் பேய்கள்கூட எங்களுக்கு அடங்குகின்றன" என்றனர்.
லூக்கா 10 : 18 (RCTA)
அதற்கு அவர், " வானத்தினின்று மின்னலைப்போலச் சாத்தான் விழக் கண்டேன்.
லூக்கா 10 : 19 (RCTA)
இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வலிமையை வெல்லவும் உங்களுக்கு வல்லமை அளித்தேன்.
லூக்கா 10 : 20 (RCTA)
எதுவும் உங்களுக்குத் தீங்கு இழைக்காது. ஆயினும் ஆவிகள் உங்களுக்கு அடங்கி இருக்கின்றன என்று மகிழவேண்டாம். ஆனால் உங்கள் பெயர் வானகத்தில் எழுதியுள்ளது என்றே மகிழுங்கள்" என்றார்.
லூக்கா 10 : 21 (RCTA)
அந்நேரத்தில் இயேசு பரிசுத்த ஆவியினால் அக்களிப்புற்றுக் கூறியதாவது: " தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன். ஆம், தந்தாய், இதுவே உமது திருவுள்ம்.
லூக்கா 10 : 22 (RCTA)
என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்."
லூக்கா 10 : 23 (RCTA)
அவர் தம் சீடர்பக்கம் திரும்பி அவர்களுக்கு மட்டும் தனிமையாகக் கூறியதாவது: "நீங்கள் காண்பதைக் காணும் கண்கள் பேறுபெற்றவை.
லூக்கா 10 : 24 (RCTA)
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், அரசர் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை."
லூக்கா 10 : 25 (RCTA)
சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்க, "போதகரே, முடிவில்லாத வாழ்வு பெற, நான் செய்யவேண்டிய தென்ன?" என்று வினவினார்.
லூக்கா 10 : 26 (RCTA)
அதற்கு அவர், " திருச் சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது? அதில் என்ன வாசிக்கிறீர் ?" என்றார்.
லூக்கா 10 : 27 (RCTA)
அவர் மறுமொழியாக, "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் முழு மனத்தோடும் அன்புசெய்வாயாக. உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக" என்றார்.
லூக்கா 10 : 28 (RCTA)
அவரோ, "சரியாய்ப் பதில்சொன்னீர்; இப்படியே செய்யும்; வாழ்வீர் " என்றார்.
லூக்கா 10 : 29 (RCTA)
அவர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்.
லூக்கா 10 : 30 (RCTA)
அதற்கு இயேசு, "யெருசலேமிலிருந்து யெரிக்கோவுக்கு ஒருவன் இறங்கிச் செல்லுகையில், கள்வர்கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் ஆடைகளைப் பறித்துக்கொண்டு அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள்.
லூக்கா 10 : 31 (RCTA)
அதே வழியாக ஒரு குருவும் இறங்கிச் செல்ல நேர்ந்தது. அவர் அவனைக் கண்டும் விலகிச்சென்றார்.
லூக்கா 10 : 32 (RCTA)
அவ்வாறே லேவியன் ஒருவனும் அவ்விடத்துக்கு வந்து அவனைக் கண்டு விலகிச்சென்றான்.
லூக்கா 10 : 33 (RCTA)
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அவனருகில் வந்து, அவனைக் கண்டு, மனமிரங்கினான்.
லூக்கா 10 : 34 (RCTA)
அவனை அணுகி எண்ணெயும் திராட்சை இரசமும் வார்த்து, அவன் காயங்களைக் கட்டித் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கண்காணித்தான்.
லூக்கா 10 : 35 (RCTA)
மறுநாள் இரு வெள்ளிக்காசுகளை எடுத்துச் சாவடிக்காரனிடம் கொடுத்து, 'இவனைக் கண்காணித்துக் கொள். இதற்குமேல் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுவேன்' என்றான்.
லூக்கா 10 : 36 (RCTA)
கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது ?" என்றார்.
லூக்கா 10 : 37 (RCTA)
அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார். இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.
லூக்கா 10 : 38 (RCTA)
அவர்கள் போகும்பொழுது ஓர் ஊருக்குள் வர, மார்த்தாள் என்னும் பெண் ஒருத்தி தன் வீட்டில் அவரை வரவேற்றாள்.
லூக்கா 10 : 39 (RCTA)
அவளுக்கு மரியாள் என்னும் சகோதரி இருந்தாள். அவள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
லூக்கா 10 : 40 (RCTA)
மார்த்தாளோ பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள். அவள் வந்து, "ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா ? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்" என்றாள்.
லூக்கா 10 : 41 (RCTA)
அதற்கு ஆண்டவர், " மார்த்தா, மார்த்தா, நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
லூக்கா 10 : 42 (RCTA)
ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42

BG:

Opacity:

Color:


Size:


Font: