லேவியராகமம் 7 : 1 (RCTA)
குற்ற நிவர்த்தியாக ஒப்புக்கொடுக்கப்படும் பலியின் ஒழுங்கு முறையாவது: அது மிகவும் பரிசுத்தமானது.
லேவியராகமம் 7 : 2 (RCTA)
ஆகையால் தகனப் பலி மிருகம் கொல்லப்படும் இடத்திலேயே குற்ற நிவர்த்திப் பலிமிருகமும் வெட்டப்படும். அதன் இரத்தம் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றப்படும்.
லேவியராகமம் 7 : 3 (RCTA)
அதன் வாலும், குடல்களை மூடிய கொழுப்பும்,
லேவியராகமம் 7 : 4 (RCTA)
இரண்டு சிறுநீரகங்களும், விலாவை அடுத்த கொழுப்பும், ஈரலின் மேலும் சிறுநீரகங்களின் மேலும் இருக்கிற சவ்வும் படைக்கப்படும்.
லேவியராகமம் 7 : 5 (RCTA)
குரு அவற்றைப் பலிபீடத்தின் மேல் எரிக்கக் கடவார். அது குற்ற நிவர்த்தியின் பொருட்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்படும் நறுமணமுள்ள தகனப் பலியாம்.
லேவியராகமம் 7 : 6 (RCTA)
இது மிகவும் பரிசுத்தமானதால் இதன் இறைச்சியைக் குரு குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டும், பரிசுத்த இடத்தில் வைத்து உண்பார்கள்.
லேவியராகமம் 7 : 7 (RCTA)
பாவ நிவாரணப் பலி போன்றே குற்ற நிவர்த்திப்பலியும். அவ்விரண்டிற்கும் ஒழுங்கு முறை ஒன்றே. அவற்றைப் படைக்கும் குருவுக்கே அவை சொந்தம்.
லேவியராகமம் 7 : 8 (RCTA)
தகனப் பலிமிருகத்தை ஒப்புக்கொடுக்கிற குரு அதன் தோலைத் தமக்காக வைத்துக் கொள்வார்.
லேவியராகமம் 7 : 9 (RCTA)
அடுப்பிலே ஏற்றிச் சமைக்கப் படும் மிருதுவான மாவின் பலியும், இரும்புத் தட்டின் மேலும் சட்டியிலும் சமைக்கப் பட்டவை எல்லாமும் அததைச் செலுத்துகிற குருவுக்குச் சொந்தமாகும்.
லேவியராகமம் 7 : 10 (RCTA)
எண்ணெயில் பிசைந்ததும் சமைக்கப் படாததுமானவை ஆரோனின் புதல்வரெல்லாருக்கும் சரிபாகமாகப் பங்கிடப்படும்.
லேவியராகமம் 7 : 11 (RCTA)
ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற சமாதானப் பலியைச் சார்ந்த ஒழுங்கு முறையாவது:
லேவியராகமம் 7 : 12 (RCTA)
ஒருவன் நன்றிக் கடனிற்காகப் பலி ஒப்புக் கொடுப்பதாயிருந்தால், அவன் எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளியாத பணியாரங்களையும், சமைக்கப்பட்ட மிருதுவான மாவையும், எண்ணெய் கலந்த பலகாரங்களையும் ஒப்புக்கொடுப்பானாக.
லேவியராகமம் 7 : 13 (RCTA)
நன்றியறிதலாகச் செலுத்தப்படும் சமாதானப் பலியின் போது அவன் புளித்த மாவினால் செய்யப்பட்ட அப்பங்களையும் சேர்த்து ஒப்புக்கொடுக்கட்டும்.
லேவியராகமம் 7 : 14 (RCTA)
இந்தப் படைப்புக்களில் ஒவ்வொன்று முதற் பலனாக ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது பலியின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவைச் சேரும்.
லேவியராகமம் 7 : 15 (RCTA)
அதன் இறைச்சியோ அதே நாளில் உண்ணப்பட வேண்டும். அதில் யாதொன்றையும் விடியற்காலை வரை வைத்திருக்கக் கூடாது.
லேவியராகமம் 7 : 16 (RCTA)
ஒருவன் நேர்ச்சியின் பொருட்டோ, தன் சொந்த விருப்பத்தினால் உந்தப்பட்டோ பலி செலுத்தினால், அதுவும் அதே நாளில் உண்ணப்படும். மீதி ஏதேனும் இருக்குமாயின் மறுநாள் உண்ணலாம்.
லேவியராகமம் 7 : 17 (RCTA)
ஆனால், மூன்றாம் நாள் அதில் ஏதாவது மீதியிருக்குமானால், அதுவெல்லாம் சுட்டெரிக்கப்படவேண்டும்.
லேவியராகமம் 7 : 18 (RCTA)
ஒருவன் சமாதானப் பலியின் இறைச்சியில் மீதியானதை மூன்றாம் நாள் உண்பானாயின், அந்தக் காணிக்கை வீணாகி, அதைச் செலுத்தினவனுக்குப் பலனின்றிப் போய்விடும். அதனோடு இத்தகைய இறைச்சியால் தன்னையே தீட்டுப்படுத்தும் எவனும் குற்றவாளியாவான்.
லேவியராகமம் 7 : 19 (RCTA)
தீட்டான எந்தப் பொருளிலேனும் பட்ட இறைச்சி உண்ணப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக் கடவது. மற்ற இறைச்சியை, தூய்மையாயிருக்கிறவன் உண்ணலாம்.
லேவியராகமம் 7 : 20 (RCTA)
தீட்டுள்ளவனாய் இருக்கிறவன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சமாதானப் பலியின் இறைச்சியை உண்டால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
லேவியராகமம் 7 : 21 (RCTA)
அப்படியே மனிதனுடைய தீட்டையோ மிருகத்தினுடைய தீட்டையோ, அல்லது தீட்டுப்படுத்தக் கூடிய வேறெந்தப் பொருளின் தீட்டையோ, தொட்டபின் (மேற்சொன்ன) இறைச்சியை உண்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
லேவியராகமம் 7 : 22 (RCTA)
மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி:
லேவியராகமம் 7 : 23 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது:ஆடு, மாடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
லேவியராகமம் 7 : 24 (RCTA)
தானாய்ச் செத்த மிருகத்தினுடைய கொழுப்பையும் கொடிய மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தினுடைய கெழுப்பையும் நீங்கள் பலவிதமாய்ப் பயன்படுத்தலாம்.
லேவியராகமம் 7 : 25 (RCTA)
ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கொழுப்பை உண்டவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
லேவியராகமம் 7 : 26 (RCTA)
பறவையானாலும் சரி, மிருகமானாலும் சரி. நீங்கள் யாதொரு உயிரினத்தின் இரத்தத்தையும் உண்ணலாகாது.
லேவியராகமம் 7 : 27 (RCTA)
எவனேனும் இரத்தத்தை உண்டிருந்தால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
லேவியராகமம் 7 : 28 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 7 : 29 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ஆண்டவருக்குச் சமாதானப்பலி செலுத்துபவன் அதனுடன் சொந்தப் பலியாகிய பானபோசனப் பலியையும் செலுத்தக்கடவான்.
லேவியராகமம் 7 : 30 (RCTA)
அவன் பலிமிருகத்தினுடைய கொழுப்பையும் மார்பையும் கைகளில் ஏந்திக்கொண்டு, அவ்விரண்டையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த பின் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.
லேவியராகமம் 7 : 31 (RCTA)
இவர் கொழுப்பைப் பலிப் பீடத்தின் மேல் எரிப்பார். மார்போ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் உரியதாகும்.
லேவியராகமம் 7 : 32 (RCTA)
சமாதானப்பலி மிருகங்களுடைய வலது முன்னந் தொடை புதுப்பலனாகக் குருவுக்குச் சொந்தமாகும்.
லேவியராகமம் 7 : 33 (RCTA)
ஆரோனின் புதல்வரில் இரத்தத்தையும் கொழுப்பையும் ஒப்புக் கொடுப்பவனுக்கு வலது முன்னந்தொடை சொந்தமாகும்.
லேவியராகமம் 7 : 34 (RCTA)
ஏனென்றால் இஸ்ராயேல் மக்களுடைய சமாதானப் பலிகளில், எழுச்சியாகிய மார்பையும், பிரித்தலாகிய முன்னந் தொடையையும் நாமே எடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளோம். இது இஸ்ராயேல் குடிகள் அனைவராலும் மாறாத கட்டளையாய் அனுசரிக்கப்பட வேண்டியது என்றருளினார்.
லேவியராகமம் 7 : 35 (RCTA)
மேயீசன் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் குருத்துவ அலுவலுக்கென அபிசேகம் செய்த நாளில், அவர்களுக்குத் திருமறைச் சடங்குகளிலே ஏற்பட்ட பலனும் அதுவே.
லேவியராகமம் 7 : 36 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் மாறாத கட்டளையாய்த் தலைமுறை தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளையிடப் பட்டதும் அதுவே.
லேவியராகமம் 7 : 37 (RCTA)
பாவப் பரிகாரமாகவும் குற்ற நிவர்த்திக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படும் பலி, அபிசேகப் பலி, சமாதானப் பலி ஆகிய பலிகளுக்கடுத்த ஒழுங்கு முறையும் அதுவே.
லேவியராகமம் 7 : 38 (RCTA)
சீனாய்ப் பாலைநிலத்திலிருந்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் காணிக்கைகளை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டுமென்று ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட போதே அதைச் சீனாய் மலையில் திட்டப்படுத்தி அருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38