லேவியராகமம் 6 : 1 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 6 : 2 (RCTA)
யாரேனும் ஒருவன் பாவியாகி ஆண்டவரைப் பழித்து, அயலான் தன்னை நம்பித் தன் பொறுப்பில் ஒப்புவித்த பொருளைத் தான் வாங்கவில்லை என்று மறுத்தோ, ஏதேனும் பொருளை வலக்காரமாய்ப் பறித்தோ தன் அயலானுக்கு ஆள் மாறாட்டம் செய்தோ,
லேவியராகமம் 6 : 3 (RCTA)
காணாமற்போன பொருளைக் கண்டடைந்தும், 'இல்லை' என மறுத்து அதைக் குறித்துப் பொய்யுரைத்தோ அல்லது மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பற்பல பாவங்களில் யாதொன்றையோ செய்திருப்பானாயின்,
லேவியராகமம் 6 : 4 (RCTA)
அவன் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்ட பின்,
லேவியராகமம் 6 : 5 (RCTA)
அவன் வஞ்சகமாய்க் கைக்கொள்ளத் தேடியவற்றையெல்லாம் முழுதுமே திருப்பிக் கொடுக்க வேண்டியது. அன்றியும், அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகக் கூட்டி, நட்டம் அடைந்த உரிமையாளனுக்கும் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
லேவியராகமம் 6 : 6 (RCTA)
மேலும் தனது பாவ மன்னிப்புக்காகச் செய்த குற்றத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்து, அதைக் குருவிடம் ஒப்புக் கொடுப்பான்.
லேவியராகமம் 6 : 7 (RCTA)
இவர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக மன்றாட, அவன் குற்றமெல்லாம் மன்னிக்கப்படும் என்றார்.
லேவியராகமம் 6 : 8 (RCTA)
ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 6 : 9 (RCTA)
நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: தகனபலிக்கடுத்த ஒழுங்கு ஏனென்றால்: தகனப்பலி இரவு முழுவதும் விடியற்காலை வரையிலும் பீடத்தின் மேல் எரிய வேண்டியதுமன்றி, அதன் நெருப்பு அதே பீடத்தின் நெருப்பாய் இருக்கவும் வேண்டும்.
லேவியராகமம் 6 : 10 (RCTA)
குரு, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட அங்கியையும் சல்லடத்தையும் அணிந்தவராய் நெருப்பில் எரிந்த தகனப் பலியின் சாம்பலை எடுத்துப் பீடத்தண்டையில் கொட்டக்கடவார்.
லேவியராகமம் 6 : 11 (RCTA)
பின், முந்தின உடைகளைக் கழற்றி வேறு ( உடைகளை ) அணிந்து கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், மிகத் தூய்மையான இடத்திலே ( கொட்டி ), அது புழுதியாய் மாறிப்போக விடுவார்.
லேவியராகமம் 6 : 12 (RCTA)
நெருப்போ எப்பொழுதும் பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும். குரு நாள் தோறும் காலையில் விறகுகளை இட்டு, அதன் மீது தகனப் பலியையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் வைத்து எரிக்கக்கடவார்.
லேவியராகமம் 6 : 13 (RCTA)
அந்நெருப்போ, ஒருபொழுதும் அணைந்து போகாமல், எப்பொழுதும் பீடத்தின் மேல் இருக்க வேண்டியதாம்.
லேவியராகமம் 6 : 14 (RCTA)
ஆரோனின் புதல்வர்கள் ஆண்டவருக்கு முன்னும் பலி பீடத்திற்கு முன்னும் படைக்க வேண்டிய பலிக்கும், பானபோசனப் பலிகளுக்குமடுத்த சட்டமாவது:
லேவியராகமம் 6 : 15 (RCTA)
குரு, எண்ணெய் தெளிக்கப்பட்ட மிருதுவான மாவில் ஒரு கைப்பிடி எடுத்து, அதையும், மாவின் மேல் வைக்கப்பட்டிருக்கும் தூப வகைகள் யாவையும் பீடத்தின் மேல் ஆண்டவருக்கு மிக்க நறுமணத்தின் அடையாளமாக எரிக்கக்கடவான்.
லேவியராகமம் 6 : 16 (RCTA)
மாவில் மீதியானதையோ ஆரோனும் அவன் புதல்வர்களும் புளிப்பில்லாமல் உண்பார்கள். கூடார மண்டபமாகிய பரிசுத்த இடத்திலே அதை உண்பார்கள்.
லேவியராகமம் 6 : 17 (RCTA)
அது புளிப்பில்லாதிருக்க வேண்டியது. அதில் ஒரு பாகம் ஆண்டவருக்குத் தகனப்பலியாகப் படைக்கப்படுகின்றதினாலே, அது பாவ நிவாரணப் பலியைப் போலும், குற்ற நிவாரணப் பலியைப் போலும், மிகப் புனிதமானது.
லேவியராகமம் 6 : 18 (RCTA)
ஆரோன் குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டுமே அதை உண்பார்கள். ஆண்டவருக்குப் பலி செலுத்தும்போது நீங்கள் என்றும் தலைமுறை தலைமுறையாய் அனுசரிக்க வேண்டிய விதி இதுவாம். அதைத் தொடுகிற எவனும் புனிதமடைவான் என்றருளினார்.
லேவியராகமம் 6 : 19 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 6 : 20 (RCTA)
ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் அபிசேக நாளில் ஆண்டவருக்குப் படைக்க வேண்டிய காணிக்கை என்னவென்றால், ஏப்பி அளவில் பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைக் காலையில் பாதியாகவும் மாலையில் பாதியாகவும் தொடர்ந்த பலியாய்ச் செலுத்தக் கடவார்கள்.
லேவியராகமம் 6 : 21 (RCTA)
அது எண்ணெய் தெளிக்கப்பட்டுச் சட்டியிலே பொரிக்கப்படும். அதை ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகப் படைக்க வேண்டியவன்,
லேவியராகமம் 6 : 22 (RCTA)
தன் தகப்பனின் இடத்திலே உரிமையோடு அபிசேகம் செய்யப் பட்ட குருவேயாம். மேற்சொன்ன காணிக்கையோ பீடத்தின்மேல் முழுவதும் எரிக்கப்படக்கடவது.
லேவியராகமம் 6 : 23 (RCTA)
ஏனென்றால் குருக்களின் பலியெல்லாம் நெருப்பிலே எரிபடுமே தவிர, அவை எவனாலும் உண்ணப்பட மாட்டாது என்றருளினார்.
லேவியராகமம் 6 : 24 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 6 : 25 (RCTA)
நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியதாவது: பாவநிவாரணப் பலியின் ஒழுங்கு முறையாவது; தகனப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் இடத்திலேயே பாவநிவாரணப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
லேவியராகமம் 6 : 26 (RCTA)
இது மிகவும் பரிசுத்தமானது, ஒப்புக்கொடுக்கிற குரு கூடார மண்டபத்தில் பரிசுத்த இடத்தில் இதை உண்பார்.
லேவியராகமம் 6 : 27 (RCTA)
இதன் இறைச்சியைத் தொடுவன எல்லாம் பரிசுத்தமுள்ளதாகும். இதன் இரத்தத்தில் சிறிது ஒர் ஆடையில் தெறித்ததாயின் அந்த ஆடை ஒரு பரிசுத்தமான இடத்தில் கழுவப்பட வேண்டும்.
லேவியராகமம் 6 : 28 (RCTA)
இது சமைக்கப்பட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்டதாயின் அது விளக்கப்பட்டுத் தண்ணீரால் கழுவப்பட வேண்டும்.
லேவியராகமம் 6 : 29 (RCTA)
குருகுலத்தைச் சேர்ந்த ஆடவர் யாவரும் இதன் இறைச்சியை உண்பார்கள். ஏனென்றால், இது மிகவும் பரிசுத்தமானது.
லேவியராகமம் 6 : 30 (RCTA)
ஆனால் பாவ நிவாரணப் பலியின் இரத்தத்திலே சிறிது, பாவப் பரிகாரத்தின் பொருட்டுப் பரிசுத்த இடத்தினுள் சாட்சியக் கூடாரத்தில் கொண்டு வரப்படும். அந்தப் பலிப்பொருள் உண்ணப்படலாகாது; மாறாக நெருப்பிலே எரிக்கப்பட வேண்டும்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30