லேவியராகமம் 3 : 1 (RCTA)
ஒருவன் சமாதானப் பலியைப் படைக்கக் கருதி, மாட்டு மந்தையில் ஒன்றை எடுத்துச் செலுத்த வந்தால் அது காளையாயிருந்தாலும் சரி, பசுவாயிருந்தாலும் சரி, மறுவற்றிருப்பதையே ஆண்டவர் முன்னிலையில் செலுத்தக் கடவான்.
லேவியராகமம் 3 : 2 (RCTA)
அவன் தன் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்தபின் சாட்சியக் கூடாரத்துக்கு முன்பாக அதனை வெட்டக் கடவான். பின்பு ஆரோனின் புதல்வர்களாகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்க்கக்கடவார்கள்.
லேவியராகமம் 3 : 3 (RCTA)
சமாதானப் பலியிலே குடல்களைச் சுற்றியிருக்கிற கொழுப்பையும், குடல்களின் உள்ளிருக்கிற கொழுப்பு முழுவதையும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார்கள்.
லேவியராகமம் 3 : 4 (RCTA)
இரண்டு சிறு நீரகங்களையும் விலாப்புறத்திலிருக்கிற கொழுப்பையும், சிறு நீரகங்களையும், கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் ( எடுத்து விடுவார்கள் ).
லேவியராகமம் 3 : 5 (RCTA)
அவைகளைப் பீடத்தின் மேலுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்புப் பற்ற வைத்து எரித்து ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையாகச் செலுத்தக் கடவார்கள்.
லேவியராகமம் 3 : 6 (RCTA)
அவன் ஆட்டைச் சமாதானப் பலியாகச் செலுத்த வரும் போதும் அது, ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, மறுவற்றதாய் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 3 : 7 (RCTA)
அவன் ஆட்டுக்குட்டியை ஆண்டவர் முன்னிலையில் ஒப்புக் கொடுத்தால்,
லேவியராகமம் 3 : 8 (RCTA)
அவன் தன் பலிப்பொருளின் தலைமீது கையை வைத்து, அதைச் சாட்சியக் கூடாரத்து மண்டபத்தில் வெட்டிக் கொல்லக் கடவான். பிறகு ஆரோனின் புதல்வர்கள் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
லேவியராகமம் 3 : 9 (RCTA)
சமாதானப் பலியிலே கொழுப்பையும் முழுவாலையும் ஆண்டவருக்குப் பலியிட்டுக் காணிக்கையாய் ஒப்புக் கொடுப்பார்கள்.
லேவியராகமம் 3 : 10 (RCTA)
அன்றியும், குரு, சிறு நீரகங்களையும், வயிறு முதலிய எல்லா உயிருறுப்புக்களையும் மூடியுள்ள கொழுப்பையும், விலாவை மூடியுள்ள கொழுப்பையும், இரு சிறு நீரகங்களையும் கல்லீரலையும் சேர்ந்த சவ்வையும் (எடுத்து)
லேவியராகமம் 3 : 11 (RCTA)
அவைகளைப் பீடத்தின் மேலுள்ள நெருப்பிலே போட்டு, நெருப்புக்கும், ஆண்டவருக்கு இடும் காணிக்கைக்கும் உணவாகச் சுட்டெரிப்பார்.
லேவியராகமம் 3 : 12 (RCTA)
அவன் வெள்ளாட்டை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாலோ,
லேவியராகமம் 3 : 13 (RCTA)
அவன் பலிமிருகத்துத் தலையின்மீது தன் கையை வைத்து அதைச் சாட்சியக் கூடாரவாயிலில் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து,
லேவியராகமம் 3 : 14 (RCTA)
அதிலே ஆண்டவருடைய நெருப்புக்கு இரையாக வயிறு முதலிய உறுப்புக்களையும் மூடுகிற கொழுப்பையும்,
லேவியராகமம் 3 : 15 (RCTA)
இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறு நீரகங்களோடிருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
லேவியராகமம் 3 : 16 (RCTA)
நறுமணப்பலியாக இவைகளைக் குரு பீடத்தின் மீதுள்ள நெருப்பில் சுட்டெரிக்கக்கடவார்.
லேவியராகமம் 3 : 17 (RCTA)
கொழுப்பானதெல்லாம் ஆண்டவருக்கு உரியது. இது உங்கள் தலைமுறைதோறும், நீங்கள் வாழும் இடம் தோறும் மாறாத சட்டமாய் இருக்கும். அன்றியும், இரத்தத்தையாவது கொழுப்பையாவது நீங்கள் உண்ணலாகாது என்றருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17