லேவியராகமம் 26 : 1 (RCTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலை உருவங்களையும் செய்துகொள்ளாமலும், நினைவுத்தூண் முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான சிறப்புள்ள கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
லேவியராகமம் 26 : 2 (RCTA)
நமது ஓய்வு நாட்களை அனுசரியுங்கள். நமது பரிசுத்த இடத்தின் மீது பயபக்தியாய் இருங்கள்.
லேவியராகமம் 26 : 3 (RCTA)
நாமே ஆண்டவர். நீங்கள் நமது கட்டளைப்படி நடந்து, நமது சட்டங்களையும் காத்து வருவீர்களாயின், உங்களுக்குப் பருவகாலங்களிலே மழை பொழியச் செய்வோம். நிலமும் தன் பலனை விளைவிக்கும்.
லேவியராகமம் 26 : 4 (RCTA)
மரங்களும் கனி கொடுக்கும்.
லேவியராகமம் 26 : 5 (RCTA)
விளைச்சலைப் போரடித்து முடியுமுன்பே திராட்சைப்பழம் பறிக்கும் காலம் வரும். திராட்சைப்பழம் பறிக்கும் காலம் முடியுமுன்பே விதைப்புக் காலம்வரும். நீங்கள் நிறைவோடு உண்டு, ஓர் அச்சமுமின்றி நாட்டில் குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 26 : 6 (RCTA)
நாம் உங்கள் எல்லைகளில் சமாதானத்தைத் தந்தருள்வோம். உங்களை அச்சுறுத்தி உங்கள் தூக்கத்தைக் குலைத்து விடுவோர் இரார். கொடிய விலங்குகளையும் நீக்கி விடுவோம். வாளும் உங்கள் எல்லைகளை அணுகுவதில்லை.
லேவியராகமம் 26 : 7 (RCTA)
உங்கள் பகைவர்களைத் துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன் விழுவார்கள்.
லேவியராகமம் 26 : 8 (RCTA)
உங்களில் ஐவர் நூறு அந்நியரையும், உங்களில் நூறுபேர் அவர்களுள் பத்தாயிரம் பேரையும் துரத்துவார்கள். உங்கள் பகைவர்கள் உங்கள் முன்னிலையில் வாளால் வெட்டுண்டு விழுவார்கள்.
லேவியராகமம் 26 : 9 (RCTA)
நாம் உங்கள் மேல் கருத்தாயிருந்து உங்களைப் பலுகிப் பெருகச் செய்வோம். நீங்கள் விருத்தியடைவீர்கள். நமது உடன்படிக்கையையும் உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.
லேவியராகமம் 26 : 10 (RCTA)
பழைய தானியங்களை உண்டு, புதிய தானியங்களுக்கு இடம் உண்டாகும்படி பழையதை விலக்குவீர்கள்.
லேவியராகமம் 26 : 11 (RCTA)
உங்கள் நடுவில் நமது உறைவிடமாகிய கூடாரத்தை நிறுவுவோம். நாம் உங்களை வெறுப்பதில்லை.
லேவியராகமம் 26 : 12 (RCTA)
உங்கள் கடவுளாகிய நாம் உங்கள் நடுவில் எப்போதும் இருப்போம். நீங்கள் நமது குடிகளாக இருப்பீர்கள்.
லேவியராகமம் 26 : 13 (RCTA)
நீங்கள் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி, அவர்கள் நாட்டிலிருந்து உங்களை விடுதலையாக்கி, உங்கள் கழுத்து விலங்குகளை முறித்தெறிந்து, உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்த உங்கள் கடவுளாகிய் ஆண்டவரே நாம்.
லேவியராகமம் 26 : 14 (RCTA)
ஆனால், நீங்கள் நமக்குச் செவிகொடாமலும், நமது கட்டளையெல்லாம் அனுசரியாமலும்,
லேவியராகமம் 26 : 15 (RCTA)
நமது சட்டங்களைப் பொருட்படுத்தாது நமது நீதிமுறைகளையும் புறக்கணித்து நம்மாலே கட்டளையிடப்பட்டவைகளை நிறைவேற்றாமலும் நமது உடன்படித்தையை வீணாக்குவீர்களாயின்,
லேவியராகமம் 26 : 16 (RCTA)
நாம் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்: உடனே வறுமையால் உங்களை வாட்டி வருத்தி, உங்கள் கண்களை எரித்து, உயிரை அழித்துவிடும் காய்ச்சலால் தண்டிப்போம்; நீங்கள் விதைக்கும் விதை வீணாய்ப்போகும்; உங்கள் பகைவர்கள் அதன் வலனை உண்பார்கள்.
லேவியராகமம் 26 : 17 (RCTA)
உங்களுக்கு விரோதமாய் நம்முடைய முகத்தைத் திருப்புவோமாகையால் உங்கள் பகைவர் முன் விழுவீர்கள்; உங்கள் பகைவரோ உங்களை அடிமைப்படுத்தி ஆள்வார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் நீங்கள் ஓடிப்போவீர்கள்.
லேவியராகமம் 26 : 18 (RCTA)
இவையெல்லாம் நாம் செய்தும் இன்னும் நீங்கள் நமக்குக் கீழ்ப்படியாவிட்டால், உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை நாம் ஏழு மடங்கு அதிகமாகத் தண்டித்து,
லேவியராகமம் 26 : 19 (RCTA)
உங்கள் கல்நெஞ்சத்தின் ஆணவத்தை அடக்குவோம். உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவோம்.
லேவியராகமம் 26 : 20 (RCTA)
வீணிலே வேலை செய்வீர்கள். பூமி பலன் தராது. மரங்களும் கொடா.
லேவியராகமம் 26 : 21 (RCTA)
நீங்கள் நமக்குச் செவி கொடுக்க மனமில்லாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களேயாகில், நாம் உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களுக்கு ஏழு மடங்கு துன்பம் உங்கள் மேல் வரச் செய்வோம்.
லேவியராகமம் 26 : 22 (RCTA)
உங்களுக்கு எதிராய் கொடிய மிருகங்களை ஏவிவிடுவோம். அவை உங்களையும் உங்கள் மந்தைகளையும் தின்று, உங்கள் மிருகங்களையும் குறைந்து போகச் செய்யும். உங்கள் வழிகளும் பாழாய்ப் போகும்.
லேவியராகமம் 26 : 23 (RCTA)
அப்படி நாம் செய்யும் தண்டனையினாலும் நீங்கள் குணமாகாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களாயின்,
லேவியராகமம் 26 : 24 (RCTA)
நாமே உங்களை எதிர்த்து, உங்கள் பாவங்களின் பொருட்டு உங்களை ஏழுமடங்கு அதிகமாய்த் தண்டிப்போம்.
லேவியராகமம் 26 : 25 (RCTA)
( எங்ஙனமென்னால் ) நமது உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் வாளை உங்கள் மேல் வரச்செய்வோம். நீங்கள் நகர்களில் ஒதுங்கின பின்னும் கொள்ளை நோயை உங்கள் நடுவில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் பகைவர் கைவசமாவீர்கள்.
லேவியராகமம் 26 : 26 (RCTA)
அதற்கு முன்பே உங்கள் அப்பம் என்னும் ஊன்று கோலை நாம் முறித்துப் போட்டிருப்போமாதலால், பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பங்களைச் சுட்டு, உங்களுக்கு அவற்றை நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் உண்டும் நிறைவு கொள்ள மாட்டீர்கள்.
லேவியராகமம் 26 : 27 (RCTA)
இன்னும் நீங்கள் இவைகளாலும் குணப்படாமல் நம் பேச்சை உதறித் தள்ளி நமக்கு விரோதமாக நடப்பீர்களாயின்,
லேவியராகமம் 26 : 28 (RCTA)
நாம் கடும் கோபத்துடன் உங்களுக்கு விரோதியாகி, உங்கள் பாவங்களின் பொருட்டு ஏழுவகைத் துன்பங்களால் உங்களைத் தண்டிப்போம்.
லேவியராகமம் 26 : 29 (RCTA)
அப்போது நீங்கள் உங்கள் புதல்வர் புதல்வியருடைய மாமிசத்தை உண்பீர்கள்.
லேவியராகமம் 26 : 30 (RCTA)
மேடை குன்றுகளின் மேல் நீங்கள் கட்டிய கோயில்களையும் அழிப்போம். அவற்றில் இருக்கும் விக்கிரகங்களையும் தவிடுபொடியாக்குவோம்.
லேவியராகமம் 26 : 31 (RCTA)
அதனால் நாம் உங்கள் நகர்களைக் காடாக்கி உங்கள் ஆலயங்களைப் பாழாக்கி, உங்கள் மிக்க நறுமணத்தூப வகைகளின் வாசனையையும் இனி முகராதிருப்போம்.
லேவியராகமம் 26 : 32 (RCTA)
உங்கள் நாட்டைப் பாழாக்குவோம். உங்கள் பகைவர்கள் அதில் குடியேறின பின் இதுபற்றி வியப்புறுவர்.
லேவியராகமம் 26 : 33 (RCTA)
உங்களையோ நாம் புறவினத்தாரிடையே சிதறடித்து, உங்கள் பிறகாலே வாளை உருவி, உங்கள் நாட்டைக் காடாக்கி, உங்கள் நகர்களை நாசமாக்குவோம்.
லேவியராகமம் 26 : 34 (RCTA)
( நீங்கள் பகைவருடைய நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டபோது ) ஆள் நடமாட்டமில்லாத உங்கள் நாடு பாழாய்க் கிடக்கிற நாளெல்லாம் ஓய்வு கொண்டாடிக் களிகூரும்.
லேவியராகமம் 26 : 35 (RCTA)
நீங்கள் அதில் வாழ்ந்து வந்த போது அது உங்கள் ஓய்வு நாட்களிலே இளைப்பாறவில்லையே; இப்போது அது சும்மா இருந்து ஓய்வு கொண்டாடும்.
லேவியராகமம் 26 : 36 (RCTA)
உங்களில் உயிரோடு தப்பியிருப்பவர்கள் பகைவர்களின் நாட்டிலே குடியிருக்கும் போது திகிலடையும்படியாய் அவர்கள் மனத்திலே அச்சம் ஆட்கொள்ளச் செய்வோம். பறக்கும் இலையின் சத்தம் கேட்டு அவர்கள் அஞ்சி, வாளோ ( என்னவோ ) என்று வெருண்டு மிரண்டோடி, துரத்துவார் இல்லாமலே தரையில் விழுவார்கள்.
லேவியராகமம் 26 : 37 (RCTA)
வாளுக்கு முன் அஞ்சி ஓடுவதுபோல் அவர்கள் ஓடி, தங்கள் சகோதரர்மேல் தாக்கி மோதி விழுவார்கள். உங்கள் பகைவர்களை எதிர்த்து நிற்க உங்களுக்குத் துணிவு இராது.
லேவியராகமம் 26 : 38 (RCTA)
புறவினத் தாரிடையே நீங்கள் பிழைக்க மாட்டீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கி விடும்.
லேவியராகமம் 26 : 39 (RCTA)
இவர்களில் சிலர் உயிர் தப்பினால், அவர்கள் பகைவர்களின் நாட்டில் தங்கள் தீச் செய்ல்கள் என்னும் தீயில் வாடி வதங்கி, தங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டும் முன்னோர் செய்த பாவங்களின் பொருட்டும் துன்பப்படுவார்கள்.
லேவியராகமம் 26 : 40 (RCTA)
அவர்கள் நமக்கு விரோதமாய்த் துரோகம் செய்து கட்டிக் கொண்ட தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் முன்னோரின் அக்கிரமத்தையும் அறிக்கையிடும் வரை வருந்துவார்கள்.
லேவியராகமம் 26 : 41 (RCTA)
ஆகையால், தங்களுடைய விருத்தசேதன மில்லாத மனதைப்பற்றி அவர்கள் நாணிவெட்கம் அடையும் வரை நாம் அவர்களுக்கு எதிரியாகி, அவர்களைப் பகைவர்களின் நாட்டிற்குக் கொண்டு போவோம். அப்போது தங்கள் அக்கிரமங்களின் பொருட்டு அவர்கள் செபம் செய்வார்கள்.
லேவியராகமம் 26 : 42 (RCTA)
அந்நேரத்தில் நாம் யாக்கோபு, ஈசாக், அபிராகம் ஆகியோருடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நாட்டையும் நினைவு கூர்வோம்.
லேவியராகமம் 26 : 43 (RCTA)
அவர்களாலே விடப்பட்ட பின் நாடு அவர்களின் பொருட்டுப் பாழடைந்த தன் நிலையக் குறித்துத் துக்கப்பட்டாலும், அது தன் ஓய்வு நாளைக் கொண்டாடும். அவர்களோ நம்முடைய கட்டளைகளை மீறி நமது சட்டங்களை அலட்சியப்படுத்திச் செய்த பாவங்களைப்பற்றி மன்றாடுவார்கள்.
லேவியராகமம் 26 : 44 (RCTA)
அவர்கள் தங்கள் பகைவர் நாட்டில் இருக்கும்போது கூட நாம் அவர்களை முற்றிலும் வெறுக்கவுமில்லை; அவர்கள் முழுதும் அழிந்துபோகும் படிக்கும், நாம் அவர்களோடு செய்த உடன்படிக்கை வீணாய்ப் போகும்படிக்கும் நாம் அவர்களைக் கைவிடவுமில்லை. ஏனென்றால், நாம் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரல்லவா ?
லேவியராகமம் 26 : 45 (RCTA)
அவர்களுடைய கடவுளாக இருக்கும் பொருட்டுப் புறவினத்தார் பார்த்து (வியப்படைய) அவர்களை நாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்படச் செய்தபோது, அவர்கள் முன்னோருடன் நாம் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்வோம். நாம் ஆண்டவர் (என்றார்).
லேவியராகமம் 26 : 46 (RCTA)
(45b) ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் (உடன்படிக்கை செய்து) மோயீசன் வழியாய் விதித்தருளிய நீதிகளும் கட்டளைகளும் சட்டதிட்டங்களும் இவைகளேயாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46