லேவியராகமம் 25 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் சீனாய் மலையில் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 25 : 2 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்களுக்கு அளிக்கவிருக்கிற நாட்டில் நீங்கள் புகுந்த பின்னர் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக ஓய்வு ( நாளைக் ) கொண்டாடக் கடவீர்கள்.
லேவியராகமம் 25 : 3 (RCTA)
ஆறு ஆண்டு உன் வயலை விதைத்து, உன் திராட்சைக் கொடிகளின் கிளைகளைக் கழித்து, அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.
லேவியராகமம் 25 : 4 (RCTA)
ஏழாம் ஆண்டோ நிலத்திற்கு ஓய்வு. இது ஆண்டவர் எடுத்த ஓய்வுக்கு ஏற்றபடி ( அனுசரிக்ப்படும் ). அந்த ஆண்டில் உன் வயலை விதைக்கவும், உன் திராட்சைத் தோட்டத்துச் செடிகளின் கிளைகளைக் கழிக்கவும் வேண்டாம்.
லேவியராகமம் 25 : 5 (RCTA)
நிலங்களில் தானாய் விளைந்ததை நீ விளைச்சல் என்று அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். உன் புதுப்பலனின் திராட்சைப் பழங்களை நீ சாதாரணப் பலனைப் போல் அறுத்துச் சேர்க்கவும் வேண்டாம். ஏனென்றால், நிலத்துக்கு அது ஓய்வு ஆண்டு.
லேவியராகமம் 25 : 6 (RCTA)
ஆனால், அவை உங்களுக்கு உணவாய் இருப்பனவாக. உனக்கு உன் வேலைக்காரனுக்கும், உன் கூலிக்காரனுக்கும்,
லேவியராகமம் 25 : 7 (RCTA)
உன்னிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனுக்கும், உன் ஆடு மாடுகளுக்கும், தானாய் விளைந்திருப்பதெல்லாம் உணவாய் இருக்கும்.
லேவியராகமம் 25 : 8 (RCTA)
மேலும், ஏழு ஆண்டு வாரங்களை--அதாவது; ஏழு தடவை ஏழாக, நாற்பத் தொன்பது ஆண்டுகளை--எண்ணுவாய்.
லேவியராகமம் 25 : 9 (RCTA)
நாடெங்கும் பரிகார காலமாகிய ஏழாம் மாதத்தின் பத்தாம் நாளில் எக்காளம் முழங்கச் செய்யவேண்டும்.
லேவியராகமம் 25 : 10 (RCTA)
ஐம்பதாம் ஆண்டைப் பரிசுத்தமாக்கி, உன் நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் மன்னிப்பென்று கூறுவாய். ஏனென்றால், அது ( மகிழ்ச்சி எனப்படும் ) ஜுபிலி ஆண்டு. அதிலே உங்களில் ஒவ்வொரு மனிதனும் தன் தன் சொத்துக்களைத் திரும்ப அடைவான்; தன் தன் முந்தின குடும்பத்திற்குத் திரும்பிப் போவான்.
லேவியராகமம் 25 : 11 (RCTA)
ஏனென்றால், அது ஜுபிலி ஆண்டும், ஐம்பதாம் ஆண்டுமாம். அப்போது நீங்கள் விதைப்பதுமில்லை; வாயில் தானாய் விளைந்திருப்பதை அறுத்துச் சேர்ப்பதுமில்லை; . திராட்சைகளின் புதுப்பலனாகிய பழங்களை அறுத்துச் சேர்ப்பதுமில்லை.
லேவியராகமம் 25 : 12 (RCTA)
அதற்குக் காரணம், ஜுபிலி ஆண்டின் பரிசுத்தத் தன்மையே. (அந்த ஆண்டில் ) வயல் வெளிகளில் அகப்படுவதை நீங்கள் உண்ண வேண்டும்.
லேவியராகமம் 25 : 13 (RCTA)
ஜுபிலி ஆண்டிலே யாவரும் தங்கள் சொத்துக்களைத் திரும்ப அடைவார்கள்.
லேவியராகமம் 25 : 14 (RCTA)
உன் ஊரானுக்கு நீ எதையேனும் விற்றாலும், அல்லது அவனிடமிருந்து பெற்றாலும், உன் சகோதரனைத் துன்பப்படுத்தாமல், ஜுபிலி ஆண்டுக்குப் பின் வரும் ஆண்டுகளின் தொகைக்கு ஏற்றபடியே நீ அவனிடமிருந்து வாங்குவாய்.
லேவியராகமம் 25 : 15 (RCTA)
அவனும் பலனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைப் படியே உனக்கு விற்பான்.
லேவியராகமம் 25 : 16 (RCTA)
ஜுபிலி ஆண்டிற்குப் பின்வரும் ஆண்டுகளின் தொகை எவ்வளவு ஏறுமோ அவ்வளவு விலையும் ஏறும். ஆண்டுகளின் தொகை எவ்வளவு குறையுமோ வாங்குகிற விலையும் அவ்வளவு குறையும். எனென்றால், பலனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்தே அவன் உனக்கு விற்பான்.
லேவியராகமம் 25 : 17 (RCTA)
உங்கள் இனத்தாரை நீங்கள் துன்பப்படுத்தாதீர்கள். உங்கள் கடவுளுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 25 : 18 (RCTA)
நீங்கள் நமது கட்டளைகளின்படி செய்து, நமது நீதி நெறிகளைக் கைக்கொண்டு, அவைகளை நிறைவேற்றக் கடவீர்கள். இப்படிச் செய்வீர்களாயின், நீங்கள் ஓர் அச்சமுமின்றி நாட்டில் குடியிருப்பதற்கும்,
லேவியராகமம் 25 : 19 (RCTA)
பூமி ஏராளமாய் உங்களுக்குத் தன் பலனைத் தருவதற்கும், ஒருவனுடைய கொடுமைக்கு அஞ்சாமல் நீங்கள் நிறைவாய் உண்டு நலமாயிருப்பதற்கும் தடையில்லை.
லேவியராகமம் 25 : 20 (RCTA)
ஏழாம் ஆண்டில் எதை உண்போம் ? நாங்கள் விதை விதைக்காமலும் விளைந்ததைச் சேர்க்காமலும் சும்மாவிருக்க வேண்டுமே என்று நீங்கள் சொல்வீர்களாயின்,
லேவியராகமம் 25 : 21 (RCTA)
நாம் ஆறாம் ஆண்டிலே உங்களுக்கு நமது ஆசீரை அருள்வோம். அது உங்களுக்கு மூன்றாண்டுகளின் பலனைத் தரும்.
லேவியராகமம் 25 : 22 (RCTA)
நீங்கள் எட்டாம் ஆண்டில் விதைத்து, ஒன்பதாம் ஆண்டு வரை பழைய பலனையே உண்பீர்கள். புதுப்பலன் விளையுமட்டும் பழைய பலனையே உண்பீர்கள்.
லேவியராகமம் 25 : 23 (RCTA)
மேலும், நாடு நம்முடையதாகையாலும், நீங்களோ அந்நியர்களும் இரவற் குடிகளுமாகையாலும், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம்.
லேவியராகமம் 25 : 24 (RCTA)
ஆதலால், உங்கள் உடைமையான நாடெங்கும்: பிறகு மீட்டுக்கொண்டாலும் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்து நிலங்களை விற்கலாமே தவிர மற்றப்படியல்ல.
லேவியராகமம் 25 : 25 (RCTA)
உன் சகோதரன் வறுமையால் நெருக்கப்பட்டுத் தன் குறைந்த சொத்தை விற்றானாயின், பின் அவன் இனத்தாரில் ஒருவன் வந்து அது தனக்கு வேண்டுமென்றால், தன் சகோதரன் விற்றதை அவன் மீட்கலாம்.
லேவியராகமம் 25 : 26 (RCTA)
அதை மீட்கத் தன் இனத்தாரில் ஒருவனும் இல்லாமல், தானே மீட்கத் தக்கவனாயினால்,
லேவியராகமம் 25 : 27 (RCTA)
அதை விற்றபின் கடந்த ஆண்டுகளின் தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்துத் தன் சொத்தைத் திருப்புவான்.
லேவியராகமம் 25 : 28 (RCTA)
ஆனால், விலையைக் கொடுக்கத் திறனற்றவனாகில், அவன் விற்றது வாங்கினவன் கையிலே ஜுபிலி ஆண்டு வரை இருக்கும். ஜுபிலி ஆண்டிலேயோ, விற்கப்பட்டதெல்லாம் முன்பு அவற்றிற்கு உரிமையாயிருந்தவனுக்கே திரும்பவும் போகும்.
லேவியராகமம் 25 : 29 (RCTA)
நகர மதில்களுக்கு உள்ளிருக்கிற தன் வீட்டை விற்றிருப்பவன் விற்ற ஓராண்டிற்குள்ளே அதை மீட்டுக் கொள்ளலாம்.
லேவியராகமம் 25 : 30 (RCTA)
ஓராண்டிற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தாலோ, அந்த வீடு ஜுபிலி ஆண்டிலே முதலாய் மீட்கப்பட முடியாது. அதை வாங்கினவனுக்கும் அவன் சந்ததியாருக்குமே அது தலைமுறைதோறும் உரியதாகும்.
லேவியராகமம் 25 : 31 (RCTA)
மதில் சூழப்படாத கிராமத்திலுள்ள வீடோ நாட்டு நிலங்களுக்கடுத்த சட்டப்படி விற்கப்படும். முன்பு மீட்கப்பட வில்லையாயின், ஜுபிலி ஆண்டில் ( முந்தின ) உரிமையாளனுக்குத் திரும்பும்.
லேவியராகமம் 25 : 32 (RCTA)
லேவியர்களின் (உடைமையாகிய ) நகரங்களிலுள்ள வீடுகளோ என்றும் மீட்கப்படப் கூடும்.
லேவியராகமம் 25 : 33 (RCTA)
இஸ்ராயேல் மக்களுக்குள்ளே லேவியர்களுக்கு இருக்கிற வீடுகள் அவர்களுடைய சொத்துக்களைப் போலாகையால், அவை மீட்கப்படவில்லையாயின், ஜுபிலி ஆண்டிலே அவை உரிமையாளருக்குத் திரும்பவும் வந்து சேரும்.
லேவியராகமம் 25 : 34 (RCTA)
மேலும், நகரங்களுக்கடுத்த அவர்களுடைய வெளிவயல் முதலியன விற்கப்படலாகாது. அவை அவர்களுக்கு நித்திய சொத்து.
லேவியராகமம் 25 : 35 (RCTA)
வறுமையால் நலிந்து, வலுவிழந்த உன் சகோதரனை அந்நியனென்றேனும் அகதியென்றேனும் நீ ஏற்றுக்கொண்டு, அவன் உன்னோடு கூடத் தங்குவானாயின்,
லேவியராகமம் 25 : 36 (RCTA)
அவனிடமிருந்து, வட்டியாவது அல்லது அவனுக்கு நீ கொடுத்ததற்கு அதிகமாவது வாங்காதே. உன் சகோதரன் உன்னை அண்டிப் பிழைக்கும்படி உன் கடவுளுக்கு அஞ்சிநட.
லேவியராகமம் 25 : 37 (RCTA)
அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தாணியத்தை இலாபத்திற்கும் கொடாதிருப்பாயாக.
லேவியராகமம் 25 : 38 (RCTA)
உங்களுக்குக் கானான் நாட்டை அளிக்கும்படிக்கும், உங்கள் கடவுளாய் இருக்கும்படிக்கும் உங்களை எகிப்து நாட்டினின்று விடுதலை செய்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
லேவியராகமம் 25 : 39 (RCTA)
உன் சகோதரன் வறுமையால் வருந்தி உனக்கு விலைப்பட்டானாயின், அவனை அடிமை போல் நடத்தாதே.
லேவியராகமம் 25 : 40 (RCTA)
அவன் கூலிக்காரனைப் போலவும் தங்க வந்தவனைப் போலவும் உன்னோடு இருந்து, ஜுபிலி ஆண்டுவரை உன்னிடம் வேலை செய்வான்.
லேவியராகமம் 25 : 41 (RCTA)
பின் அவன் தன் பிள்ளைகளோடு கூட உன்னை விட்டு நீங்கித் தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முன்னோர்களின் உடைமைக்கும் திரும்பிப் போவான்.
லேவியராகமம் 25 : 42 (RCTA)
உண்மையில் அவர்கள் நமக்கே அடிமைகளாய் இருக்கிறார்கள். நாம் எகிப்து நாட்டிலிருந்து அவர்களை விடுதலையாக்கினோம். ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
லேவியராகமம் 25 : 43 (RCTA)
நீ அவனைக் கொடுமையாய் நடத்தவேண்டாம்.
லேவியராகமம் 25 : 44 (RCTA)
உன் கடவுளுக்குப் பயந்து நட. சுற்றிலுமிருக்கிற புறவினத்தாரைச் சேர்ந்த ஆணும் பெண்ணுமே உங்களுக்கு அடிமைகளாய் இருப்பார்கள்.
லேவியராகமம் 25 : 45 (RCTA)
உங்கள் நடுவே அந்நியராய்க் குடியிருக்கிறவர்களிலும், உங்கள் மத்தியில் அவர்கள் வயிற்றிலே பிறந்தவர்களிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொள்வீர்கள்.
லேவியராகமம் 25 : 46 (RCTA)
அவர்களை நீங்கள் எப்போதும் உங்கள் பொறுப்பில் வைத்துக் காப்பதுமன்றிச் சுதந்தர உரிமையாக அவர்களை உங்கள் வழி வருவோர்க்கும் கையளிக்கக் கூடும். ஆனால், உங்கள் சகோதரராகிய இஸ்ராயேலரைக் கொடுமையாய் நடத்தக் கூடாது.
லேவியராகமம் 25 : 47 (RCTA)
உங்களிடத்தில் இருக்கிற அந்நியனும் அகதியும் செல்வனானபின் வறியவனான உன் சகோதரன் அவனுக்கோ அவன் குடும்பத்தாரில் எவனுக்கோ விலைப்பட்டுப் போனானாயின்,
லேவியராகமம் 25 : 48 (RCTA)
விலைப் பட்டுப் போனபின் அவன் திரும்பவும் மீட்கப் படக்கூடும். அவன் சகோதரரில் எவனும்,
லேவியராகமம் 25 : 49 (RCTA)
அவன் தந்தையோடு பிறந்தவனேனும் இவனுடைய மகனேனும் அவன் குடும்பத்திலுள்ள உறவினரில் ஒருவனேனும் அவனை மீட்கலாம்.
லேவியராகமம் 25 : 50 (RCTA)
அவன் தான் விற்கப்பட்ட நாள் முதல் ஜுபிலி ஆண்டு வலை சென்ற ஆண்டுத் தொகை எத்தனையென்று கணத்கிட வேண்டும். அவனுடைய விலைத் தொகையோ கூலிக்காரனுடைய காலக் கணக்குப் படியும், அவன் வேலை செய்த ஆண்டுக் கணக்குப் படியும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
லேவியராகமம் 25 : 51 (RCTA)
ஜுபிலி ஆண்டு வரை இன்னும் பல ஆண்டுகள் இருக்குமாயின், அவன் அவற்றிற்குத் தக்கபடி விலைத் தொகை கொடுத்து ஈடு செய்யப் கடவான்.
லேவியராகமம் 25 : 52 (RCTA)
ஜுபிலி ஆண்டுவரை மீதியாய் இருக்கிற ஆண்டுகள் கொஞ்சமாயின், அவன் தன் தலைவனோடு கணக்குப்பார்த்து, வேறுபடும் ஆண்டுகளுக்குத் தக்கபடி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து ஈடு செய்யக் கடவான்.
லேவியராகமம் 25 : 53 (RCTA)
ஆனால், தான் அதற்குள்ளே வேலை செய்து வந்துள்ளமையால் தனக்கு வந்து சேர வேண்டிய கூலிப் பணத்தைக் கழித்துக் கொள்வான். அவன் இவனை உன் முன்னிலையில் கொடுமையாய் நடத்த வேண்டாம்.
லேவியராகமம் 25 : 54 (RCTA)
இப்படி இவன் மீட்கப்படக் கூடாதாயின், இவனும் இவனோடு இவன் பிள்ளைகளும் ஜுபிலி ஆண்டிலே விடுதலை அடைவார்கள்.
லேவியராகமம் 25 : 55 (RCTA)
ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் நமக்கே ஊழியக்காரராம். நாமல்லவோ எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டு வந்தோம்.
❮
❯