லேவியராகமம் 24 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 24 : 2 (RCTA)
விளக்குகள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்படி மிகச் சுத்தமும் தெளிவுமுள்ள ஒலிவ எண்ணெயை உங்களிடம் கொண்டு வர வேண்டுமென்று இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
லேவியராகமம் 24 : 3 (RCTA)
உடன்படிக்கைக் கூடாரத்தில் சாட்சியத் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அவற்றை எப்பொழுதும் மாலை முதல் காலைவரை எரியும்படி ஆண்டவர் திருமுன் ஏற்றக் கடவான். இது உங்கள் தலைமுறை தோறும் செய்யவேண்டிய நித்திய சட்டமாம்.
லேவியராகமம் 24 : 4 (RCTA)
அவை ஆண்டவர் முன்னிலையில் எரியும்படி மிகத்தூய்மையான கிளை விளக்கின் மேல் எப்பொழுதும் வைக்கப்படும்.
லேவியராகமம் 24 : 5 (RCTA)
மேலும், மிருதுவான மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக. ஒவ்வொரு அப்பமும் ( மரக்காலிலே ) பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
லேவியராகமம் 24 : 6 (RCTA)
அவற்றை நீ ஆண்டவர் திருமுன் தூய்மையான மேசையின் மீது பக்கத்திற்கு ஆறாக இருபக்கமும் அடுக்கிவைப்பாய்.
லேவியராகமம் 24 : 7 (RCTA)
அவ்வப்பங்கள் ஆண்டவருக்குச் செய்யப்பட்ட காணிக்கையின் நினைவுச் சின்னமாய் இருக்கத் தக்கனவாய் அவற்றின் மீது மிகவும் சத்தமான தூபவகைகளைப் போடக் கடவாய்.
லேவியராகமம் 24 : 8 (RCTA)
நித்திய உடன்படிக்கையாக இஸ்ராயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்த அப்பங்களை ஓய்வு நாள் தோறும் ஆண்டவர் முன்னிலையில் மாற்றக்கடவாய்.
லேவியராகமம் 24 : 9 (RCTA)
அவை ஆரோனையும் அவன் புதல்வரையும் சேரும். அவர்கள் அவற்றைப் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவார்கள். ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளிலே மிகவும் பரிசுத்தமான அது நித்திய உரிமையாக அவர்களுடையதாய் இருக்கும் என்றார்.
லேவியராகமம் 24 : 10 (RCTA)
அக்காலத்தில் இஸ்ராயேல் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் இஸ்ராயேலரோடு குடியிருந்த எகிப்திய ஆடவன் ஒருவனுக்கும் பிறந்தவன் வெளியே வந்து, பாளையத்திலே ஓர் இஸ்ராயேலனோடு சண்டையிட்டு,
லேவியராகமம் 24 : 11 (RCTA)
ஆண்டவருடைய ( திருப் ) பெயரையும் ஆண்டவரையும் பழித்துப் பேசினான். அவனை மோயீசனிடம் கொண்டுவந்தார்கள். ( அவனுடைய தாயின் பெயர் சலுமித், அவள்தான் கோத்திரத்தானான தாபிரியின் புதல்வி.
லேவியராகமம் 24 : 12 (RCTA)
ஆண்டவருடைய திருவுளத்தை அறியும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.
லேவியராகமம் 24 : 13 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 24 : 14 (RCTA)
இந்தத் தெய்வ நிந்தனையாளனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போங்கள். அவன் பழித்துப் பேசின வார்த்தையைக் கேட்டவர்கள் அனைவரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்கள். பிறகு சபையார் யாவரும் அவனைக் கல்லாலெறிந்து சாகடிக்கக் கடவார்கள்.
லேவியராகமம் 24 : 15 (RCTA)
மேலும் நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: தன் கடவுளைப் பழிப்பவன் தன் பாவத்தைச் சுமந்து கொள்வான்.
லேவியராகமம் 24 : 16 (RCTA)
ஆண்டவருடைய பெயரைப் பழிப்பவன் கொலை செய்யப்படுவான். அவன் குடிமகனாயினும் சரி, அந்நியனாயினும் சரி சபையார் எல்லாரும் அவனைக் கல்லால் எறியவேண்டும். ஆண்டவருடைய பெயரைப் பழித்தவன் கொலை செய்யப்படுவான்.
லேவியராகமம் 24 : 17 (RCTA)
ஒரு மனிதனைக் கொலை செய்தவன் கொலை செய்யப்படுவான்.
லேவியராகமம் 24 : 18 (RCTA)
ஒரு விலங்கைக் கொன்றவன் பதிலுக்குக் வேறொன்றைக் கொடுக்கக்கடவான். அதாவது: விலங்குக்கு விலங்கு கொடுத்து ஈடுசெய்யக்கடவான்.
லேவியராகமம் 24 : 19 (RCTA)
தன் ஊராரில் ஒருவனுக்கு எவன் தீங்கிழைத்தானே, அவன் செய்தபடியே அவனுக்குச் செய்யப்படும்.
லேவியராகமம் 24 : 20 (RCTA)
முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்: ஒருவன் தன் அயலானுக்கு எவ்விதத் தீமையைச் செய்தானோ அவ்விதத் தீமையே அவனுக்கும் செய்யப்படும்.
லேவியராகமம் 24 : 21 (RCTA)
விலங்கைக் கொன்றவன் வேறொன்றைக் கொடுப்பான். மனிதனைக் கொன்றவனோ கொலை செய்யப்படுவான்.
லேவியராகமம் 24 : 22 (RCTA)
உங்களிலே அந்நியனுக்கும் குடிமகனுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும். ஏனென்றால், நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
லேவியராகமம் 24 : 23 (RCTA)
அவ்விதமே மோயீசன் இஸ்ராயேல் மக்களோடு பேசின பின், ஆண்டவரைப் பழித்தவனைப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்க் கல்லாலெறிந்து கொன்றனர். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்தனர்.
❮
❯