லேவியராகமம் 21 : 1 (RCTA)
மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி: நீ ஆரோனுடைய புதல்வர்களாகிய குருக்களிடம் சொல்லவேண்டியதாவது: குரு தன் ஊராரில் யாரேனும் இறந்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
லேவியராகமம் 21 : 2 (RCTA)
ஆனால், அவனுடைய உறவின் முறையாரும் இனத்தாருமாகிய தந்தை, தாய், மகன், மகள் சகோதரன்,
லேவியராகமம் 21 : 3 (RCTA)
வாழ்க்கைப்படாது தம்முடனிருக்கும் கன்னிப் பெண்ணாகிய சகோதரி முதலியோர் ( இறந்தால் அவர்களுக்கு இழவு கெண்டாட அவனுக்குத் தடையில்லை ).
லேவியராகமம் 21 : 4 (RCTA)
தன் மக்களுள் பெரிய மனிதனுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
லேவியராகமம் 21 : 5 (RCTA)
அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியைச் சிரைக்காமலும், தங்கள் உடலைக் கீறிக் கொள்ளாமலும்,
லேவியராகமம் 21 : 6 (RCTA)
தங்கள் கடவுளுக்கு முன் தூய்மையாயிருந்து, அவருடைய பெயருக்கு இழுக்கு வருவிக்காதிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டவருடைய தகனப்பலிகளையும் செலுத்துகிறவர்களாகையால், தூயோராய் இருக்கக்கடவார்கள்.
லேவியராகமம் 21 : 7 (RCTA)
அவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணையோ, விலைமகளையோ, கணவனால் தள்ளப்பட்டவளையோ மணந்து கொள்ளாதிருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் கடவுளுக்கு அபிசேகமானவர்களாயும், காணிக்கை அப்பங்களைச் செலுத்துகிறவர்களாயும், இருக்கிறார்கள்.
லேவியராகமம் 21 : 8 (RCTA)
ஆகையால், அவர்களைப் பரிசுத்தப் படுத்துகிற ஆண்டவராகிய நாம் பரிசுத்தராயிருக்கிறது போல், அவர்களும் பரிசுத்தராய் இருக்கக் கடவார்கள்.
லேவியராகமம் 21 : 9 (RCTA)
குருவுடைய புதல்வி வேசித்தனம் புரியும் போதே அகப்பட்டுக் கொண்டு தன் தந்தையின் பெயருக்கு இழுக்கு வருவித்தால், அவள் சாம்பலாய்ச் சுட்டெரிக்கப்படக் கடவாள்.
லேவியராகமம் 21 : 10 (RCTA)
தலைமைக்குரு, அதாவது: தன் சகோதரருக்குள்ளே தலையிலும் கைகளிலும் குருத்துவ அபிசேகம் பெற்று, அதற்குரிய உடைகளை அணிகின்றவர், தம் தலைப்பாகையை எடுத்து விடவும் தம் உடைகளைக் கிழித்துப் போடவும் கூடாது.
லேவியராகமம் 21 : 11 (RCTA)
பிணம் கிடக்கும் இடத்திற்கு அவர் கண்டிப்பாய்ப் போகலாகாது. தம் தந்தைக்காகவும் தாய்க்காகவும் அவர் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது.
லேவியராகமம் 21 : 12 (RCTA)
அபிசேகத் தைலம் அவர் மேல் வார்க்கப்பட்டதனால் அவர் ஆண்டவருடைய இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்குப் பரிசுத்த இடங்களிலிருந்து வெளியே போகாமல் இருக்கக் கடவார். நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 21 : 13 (RCTA)
அவர் கன்னிப்பெண்ணை மனைவியாகக் கொள்ளலாமேயன்றி,
லேவியராகமம் 21 : 14 (RCTA)
விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, கற்புக் குலைந்தவளையோ, விலைமகளையோ, மணக்கலாகாது. அன்றியும், அவர் தம் இனத்துப் பெண்ணையே மணந்து கொள்ளக் கடவார்.
லேவியராகமம் 21 : 15 (RCTA)
அவர் தம் இனத்தின் இரத்தத்தை இஸ்ராயேலரில் சாதாரண மக்களுடைய இரத்தத்தோடு கலக்க வேண்டாம். ஏனென்றால் நாம் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் என்றருளினார்.
லேவியராகமம் 21 : 16 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 21 : 17 (RCTA)
நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது: உன் குடும்பத்துச் சந்ததியாருக்குள்ளே அங்கவீனம் உள்ளவன் தன் கடவுளுக்கு அப்பங்களைச் செலுத்தலாகாது.
லேவியராகமம் 21 : 18 (RCTA)
அவன் குருடனானாலும், சப்பாணியானாலும், மிகச்சிறிய அல்லது மிகப் பெரிய அல்லது கோணலான மூக்கை உடையவனானாலும்,
லேவியராகமம் 21 : 19 (RCTA)
கால் ஒடிந்தவனானாலும், கை முறிந்தவனானாலும்,
லேவியராகமம் 21 : 20 (RCTA)
கூனனானாலும் பீளைக் கண்ணனானாலும், பூ விழுந்த கண்ணனானாலும், தீராச் சிரங்குள்ளவனானாலும், எச்சில் தழுப்புள்ளவனானாலும், விதை வீக்கமுள்ளவனானாலும் குருவுக்கடுத்த ஊழியங்களை நடத்தலாகாது.
லேவியராகமம் 21 : 21 (RCTA)
குருவாகிய ஆரோனுடைய சந்ததியாரில் அங்கவீனமுள்ளவன் ஆண்டவருக்குப் பலிகளையும் தன் கடவுளுக்கு அப்பங்களையும் செலுத்த வரலாகாது.
லேவியராகமம் 21 : 22 (RCTA)
ஆயினும், பரிசுத்த இடத்திலே செலுத்தப்படும் அப்பங்களை அவன் உண்ணலாம்.
லேவியராகமம் 21 : 23 (RCTA)
உண்ணலாமென்றாலும், அவன் அங்கவீனமுள்ளவனாதலால், நமது பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடி அவன் திரைக்கு உட்புறத்தில் புகவும் பலிப்பீடத்தண்டை செல்லவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமே என்று திருவுளம்பற்றினார்.
லேவியராகமம் 21 : 24 (RCTA)
ஆகையால், மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த எல்லாவற்றையும் ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் சொன்னார்.
❮
❯