லேவியராகமம் 2 : 1 (RCTA)
ஒரு மனிதன் ஆண்டவருக்குப் பலியாகக் காணிக்கையை ஒப்புக்கொடுக்கிற போது, அவனது காணிக்கை மிருதுவான மாவாயிருந்தால், அவன் அதன்மேல் எண்ணெய் வார்த்துத் தூபவகைகளையும் இட்டு, ஆரோனின் புதல்வர்களாகிய குருக்களிடம் கொண்டு போவான்.
லேவியராகமம் 2 : 2 (RCTA)
அவர்களில் ஒருவன் மிருதுவான மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடியும் தூபவகை முழுவதையும் எடுத்துக் கொண்டு, பீடத்தின் மீது நினைவுச் சின்னமாகவும் ஆண்டவருக்கு நறுமணமாகவும் வைப்பானாக.
லேவியராகமம் 2 : 3 (RCTA)
பலிப்பொருளில் எஞ்சி இருப்பது ஆரோனையும் அவன் புதல்வர்களையும் சேரும். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைப் பாகமாகையால் அது மிகப் புனிதமானது.
லேவியராகமம் 2 : 4 (RCTA)
நீ படைப்பது அடுப்பில் ஏற்றிச் சமைத்த போசனப் பலியானால், அது எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களாகவும், எண்ணெய் பூசப்பட்ட புளியாத பணியாரங்களாகவும் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 2 : 5 (RCTA)
நீ படைப்பது தட்டையான சட்டியில் பொரிக்கப்பட்ட போசனப் பலியானால், அது எண்ணெயில் பிசைந்த புளியாத மிருதுவான மாவாய் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 2 : 6 (RCTA)
அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெயை வார்ப்பாய்.
லேவியராகமம் 2 : 7 (RCTA)
ஆனால், நீ படைப்பது பொரிக்கும் சட்டியில் செய்யப்பட்ட போசனப் பலியானால், அதுவும் எண்ணெயில் பிசைந்ததாய் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 2 : 8 (RCTA)
அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வரும் போது குருவின் கையில் அதைக் கொடுத்து விடுவாய்.
லேவியராகமம் 2 : 9 (RCTA)
அவர் அதை ஒப்புக்கொடுத்த பின், பலியிலிருந்து ஒரு பங்கைத் தமக்கு எடுத்துக் கொண்டு, பலிப்பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய் ( அதை ) எரிப்பார்.
லேவியராகமம் 2 : 10 (RCTA)
மீதியானதெல்லாம் ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் சொந்தமாகிவிடும். அது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கையாகையால் அது மிகவும் புனிதமானது.
லேவியராகமம் 2 : 11 (RCTA)
ஆண்டவருக்குப் படைக்கப்படுவதெல்லாம் புளியாத மாவினால் தயாரிக்கப்படுவதுமன்றி, புளித்த மாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் ஆண்டவருக்குத் தகனப் பலியாக எரிக்கக் கூடாது.
லேவியராகமம் 2 : 12 (RCTA)
நீங்கள் அத்தகைய பொருட்களை முதற் பலன்களாகவும் சந்திப்புக்களாகவும் ஒப்புக் கொடுக்கலாம். ஆனால், அவற்றைப் பீடத்தின் மேல் நறுமணமாக வைக்கலாகாது
லேவியராகமம் 2 : 13 (RCTA)
நீ ஒப்புக்கொடுக்கும் எந்தப் போசனப் பலியையும் உப்பினாலே சுவைப்படுத்தக் கடவாய். உன் கடவுளுடைய உடன்படிக்கையின் உப்பை உன் பலியினின்று நீக்காதே. நீ படைக்கும் எல்லாவற்றோடும் உப்பையும் படைக்கக்கடவாய்.
லேவியராகமம் 2 : 14 (RCTA)
நீ உன் முதற் பலன்களில் இன்னும் பச்சையான கதிர்களைப் போசனப் பலியாக ஆண்டவருக்குச் செலுத்த வந்தாலோ, அவைகளை நெருப்பிலே வாட்டி வறுத்த பின் மாவாக அரைத்தே ஆண்டவருக்குச் செலுத்தக் கடவாய்.
லேவியராகமம் 2 : 15 (RCTA)
அவை ஆண்டவருக்கான காணிக்கையாதலால், அவற்றின்மேல் எண்ணெயையும் வார்த்துத் தூப வகைகளையும் இடுவாய்.
லேவியராகமம் 2 : 16 (RCTA)
குருவோ அதினின்று, அரைக்கப்பட்ட கோதுமையிலும் எண்ணெயிலும் ஒரு பாகத்தையும் தூபவகை எல்லாவற்றையும் நினைவுச் சின்னமாகச் சுட்டெரிப்பார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16