லேவியராகமம் 19 : 1 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 19 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நாம் பரிசுத்தராய் இருப்பதால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
லேவியராகமம் 19 : 3 (RCTA)
உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் தந்தைக்கும் தாய்க்கும் அஞ்சக்கடவான். நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 4 (RCTA)
விக்கிரகங்களை நாடவும் வேண்டாம். வார்ப்பினால் செய்யப்பட்ட தெய்வங்களை உங்களுக்கெனச் செய்து கொள்ளவும் வேண்டாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 5 (RCTA)
ஆண்டவர் ( உங்கள் மீது ) இரக்கம் கொள்ளும்படி நீங்கள் சமாதானப் பலியை அவருக்குச் செலுத்தினால்,
லேவியராகமம் 19 : 6 (RCTA)
அது பலியிடப்பட்ட அந்நாளிலேயே அல்லது அடுத்த நாளிலே அதை உண்பீர்கள். மூன்றாம் நாளில் எஞ்சியிருப்பதை நெருப்பில் எரிக்கக் கடவீர்கள்.
லேவியராகமம் 19 : 7 (RCTA)
இரண்டு நாளுக்குப் பின் அதை உண்பவன் அவமரியாதையுள்ளவனும், தெய்வ துரோகியுமாவான்.
லேவியராகமம் 19 : 8 (RCTA)
ஆண்டவருக்குப் பரிசுத்தமானதை மாசு படுத்தினானாகையால் அவன் தன் தீச் செயலைச் சுமந்து, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
லேவியராகமம் 19 : 9 (RCTA)
உன் நிலத்திலுள்ள பயிரை அறுக்கும் போது நீ பூமி மட்டத்தோடே அறுக்க வேண்டாம்; சிதறிக் கிடக்கிற கதிர்களையும் பொறுக்க வேண்டாம்.
லேவியராகமம் 19 : 10 (RCTA)
அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழக்குலைகளையோ பழங்களையோ பொறுக்கவேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடு. நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 11 (RCTA)
களவு செய்யாதீர்கள். பொய் சொல்லாதீர்கள் எவனும் தன் பிறனை வஞ்சிக்கலாகாது.
லேவியராகமம் 19 : 12 (RCTA)
நமது பெயரைச் சொல்லிப் பொய்யாணையிடாதே; உன் கடவுளின் பெயரை அவமரியாதை செய்யாதே நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 13 (RCTA)
உன் பிறன் மீது அபாண்டம் சொல்லாமலும், அவனை வலுவந்தத்தால் வருத்தாமலும் இருப்பாயாக. உன் கூலியாளின் வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வியற்காலைவரை உன்னிடம் வைத்திராதே.
லேவியராகமம் 19 : 14 (RCTA)
செவிடனைத் திட்டாமலும், குருடன் முன் இடறுகள் வைக்காமலும், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவாயாக. ஏனென்றால், நாமே ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 15 (RCTA)
அநீதி செய்யாதே. வழக்கிலே நீதிக்கு மாறாய்த் தீர்ப்பிடாதே. ஒருவன் ஏழையென்று கண்டு, அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் பணக்காரனென்று பார்த்து முகத்தாட்சனியம் காட்டாதே. முறையோடு உன் பிறனுக்கு நீதி வழங்கு.
லேவியராகமம் 19 : 16 (RCTA)
நீ மக்களுக்குள்ளே குற்றம் சாட்டிக் கோள் சொல்லித் திரியாதே. உன் பிறனுடைய இரத்தப் பழிக்கு உள்ளாகாதே நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 17 (RCTA)
உன் சகோதரனை உன் இதயத்தில் பகைக்காதே. ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு வெளிப்படையாய் அவனுக்கு அறிவுரை சொல்.
லேவியராகமம் 19 : 18 (RCTA)
பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 19 (RCTA)
நமது சட்டங்களைக் கைக்கொள். உன் மிருகங்களை வேற்றின மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே.
லேவியராகமம் 19 : 20 (RCTA)
அடிமைப பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல.
லேவியராகமம் 19 : 21 (RCTA)
ஆனால், அவன் தன் குற்றத்துக்காகச் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு ஓர் ஆட்டுக்கிடாயைக் கொண்டு வருவான்.
லேவியராகமம் 19 : 22 (RCTA)
குரு அவனுக்காகவும் அவன் பாவத்திற்காகவும் இறைவன் திருமுன் வேண்டுவார். அப்பொழுது ஆண்டவர் அவன் மேல் இரக்கம் கொள்வார்.
லேவியராகமம் 19 : 23 (RCTA)
அவன் பாவமும் மன்னிக்கப்படும். நீங்கள் உங்கள் நாட்டில் புகுந்து, கனி தரும் மரங்களை நட்ட பின், அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதிருக்கும். அம் மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளவைகளாதலால், அவற்றை உண்ண வேண்டாம்.
லேவியராகமம் 19 : 24 (RCTA)
நான்காம் ஆண்டில் அவற்றின் கனிகளெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாக அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்படும்,
லேவியராகமம் 19 : 25 (RCTA)
பிறகு ஐந்தாம் ஆண்டில் நீங்கள் அவற்றின் கனிகளைப் பறித்து உண்ணலாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 26 (RCTA)
யாதொன்றையும் இரத்தத்தோடு உண்ண வேண்டாம். சகுனம் பார்க்கவும் வேண்டாம்; கனவுகளுக்குப் பொருள் தேடவும் வேண்டாம்.
லேவியராகமம் 19 : 27 (RCTA)
உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம்.
லேவியராகமம் 19 : 28 (RCTA)
இழவை முன்னிட்டு உங்கள் சதையை வெட்டாமலும், உடலிலே எவ்விதமான சித்திரத்தையேனும் அடையாளத்தையேனும் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக. நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 29 (RCTA)
நாடு அசுத்தமாகாதபடிக்கும், பாவக் கொடுமையால் நிறைந்து போகாதபடிக்கும் நீ உன் புதல்வியை வேசித்தனத்திற்கு உட்படுத்தாதே.
லேவியராகமம் 19 : 30 (RCTA)
நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். கடவுளின் மூலத்தானத்தைக் குறித்துப் பயபக்தியாய் இருக்க வேண்டும். நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 31 (RCTA)
நீங்கள் தீட்டுப்படாதபடிக்கும் பில்லிசூனியக்காரரை நாடவும் குறி சொல்லும் சகுனக்காரரிடம் யாதொன்றைக் கேட்கவும் வேண்டாம்.
லேவியராகமம் 19 : 32 (RCTA)
நரை கொண்டவன் வரக்கண்டால் நீ எழுந்திரு. முதிர் வயதுள்ளவனை மதித்து நட. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சியிரு. நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 33 (RCTA)
யாரேனும் ஓர் அந்நியன் உங்கள் ஊரில் உங்களோடு குடியிருந்தால், நீங்கள் அவனைப் பழிக்க வேண்டாம்.
லேவியராகமம் 19 : 34 (RCTA)
அப்படிப்பட்டவனைக் குடிமகன்போல் எண்ணி, நீங்கள் உங்களுக்கு அன்பு செய்வது போல் அவனுக்கும் அன்பு செய்ய வேண்டும். நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தீர்களன்றோ ? நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 19 : 35 (RCTA)
நீதித் தீர்ப்பிலும், நிறுத்தலிலும், அளத்தலிலும் அநியாயம் செய்யாதீர்கள்.
லேவியராகமம் 19 : 36 (RCTA)
முத்திரைத் துலாக்கோலும், முத்திரை எடைக்கல்லும், முத்திரை மரக்காலும், முத்திரைப் படியும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்ட உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
லேவியராகமம் 19 : 37 (RCTA)
நம்முடைய எல்லாக் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக் கொண்டு, அவற்றின்படி நடவுங்கள். நாம் ஆண்டவர் ( என்றார் ).
❮
❯