லேவியராகமம் 18 : 1 (RCTA)
மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 18 : 2 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
லேவியராகமம் 18 : 3 (RCTA)
நீங்கள் முன் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி ஒழுகவும் வேண்டாம்; நாம் உங்களை அழைத்துப் போகிற கானான் நாட்டாரின் நடத்தைக்கு ஒத்த வண்ணம் நடக்கவும் வேண்டாம். அவர்களுடைய முறைமைகளைக் கைக்கொள்ளவும் வேண்டாம்.
லேவியராகமம் 18 : 4 (RCTA)
நமது நீதி முறைகளின்படி நடந்து, நம்முடைய கட்டளைகளை நிறைவேற்றி, நம்முடைய சட்ட நெறியின்படி ஒழுகக் கடவீர்களாக. ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள்.
லேவியராகமம் 18 : 5 (RCTA)
நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொள்ளக்கடவீர்கள். அவைகளின்படி நடப்பவன் அவைகளால் வாழ்வு பெறுவான்.
லேவியராகமம் 18 : 6 (RCTA)
எந்த மனிதனாயினும் தனக்கு நெருங்கின உறவுள்ள பெண்ணைச் சார்ந்து, அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 7 (RCTA)
நாம் ஆண்டவர். உன் தந்தையின் நிருவாணத்தையும் உன் தாயின் நிருவாணத்தையும் நீ வெளிப்படுத்த வேண்டாம். அவள் உன் தாயென்று (மதித்து), அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 8 (RCTA)
உன் தந்தையினுடைய மனைவியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன் தந்தையின் நிருவாணமே.
லேவியராகமம் 18 : 9 (RCTA)
உன் தந்தைக்கோ தாய்க்கோ வீட்டிலேயாவது வெளியிலேயாவது பிறந்த புதல்வியாகிய உன் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 10 (RCTA)
உன் புதல்வனுடைய மகளின் நிருவாணத்தையோ, உன் புதல்வியின் மகளுடைய நிருவாணத்தையோ வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன்னுடைய நிருவாணமே.
லேவியராகமம் 18 : 11 (RCTA)
உன் தந்தையினுடைய மனைவியின் வயிற்றில் அவனுக்குப் பிறந்த புதல்வி அவள் உனக்குச் சகோதரியே.
லேவியராகமம் 18 : 12 (RCTA)
உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தந்தையின் மாமிசமும் ஒன்றுதான்.
லேவியராகமம் 18 : 13 (RCTA)
உன் தாயின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தாயின் மாமிசமும் ஒன்றுதான்.
லேவியராகமம் 18 : 14 (RCTA)
உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. அவன் மனைவியோடு சேரலும் ஆகாது. ஏனென்றால், அவளுக்கும் உனக்கும் உறவு உண்டு.
லேவியராகமம் 18 : 15 (RCTA)
உன் மருமகளுடைய நிருவாணத்தையும் வெட்கத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவள் உன் மகனின் மனைவி.
லேவியராகமம் 18 : 16 (RCTA)
உன் சகோதரனுடைய மனைவியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய நிருவாணம் உன் சகோதரனுடைய நிருவாணமே.
லேவியராகமம் 18 : 17 (RCTA)
உன் மனைவியினுடைய நிருவாணத்தை ஒருவருக்கும் காட்டலாகாது. அவள் புதல்வியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய புதல்வனின் மகளின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், இவர்கள் அவளுக்கு நெருங்கிய உறவு .
லேவியராகமம் 18 : 18 (RCTA)
அது முறை கேடு. உன் மனைவி இருக்கையில், அவளோடு கூட அவளுடைய சகோதரியையும் மனைவியாகக் கொண்டு அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 19 (RCTA)
மாத விடாயுள்ள பெண்ணோடு சேர்ந்து, அவள் அசுத்தத்தை வெளிப்படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 20 (RCTA)
பிறனுடைய மனைவியோடு படுத்தலாகாது. அவளோடு சேர்ந்து, இரத்தக் கலப்பினால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது.
லேவியராகமம் 18 : 21 (RCTA)
உன் பிள்ளைகளில் எவனையும் மொலோக் விக்கிரகத்திற்கு நேர்ந்து கொள்ளும்படி கொடுக்கவும் கூடாது; உன் கடவுளுடைய திருப்பெயரை இழிவு படுத்தவும் கூடாது.
லேவியராகமம் 18 : 22 (RCTA)
நாமே ஆண்டவர். பெண்ணோடு சேர்க்கை கொள்வது போல் ஆணோடு சேர்க்கை கொள்ளாதே. அது வெறுப்புக்குரிய தீச் செயல்.
லேவியராகமம் 18 : 23 (RCTA)
எந்த மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதனால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. மிருகத்தோடு புணரும்படி எந்தப் பெண்ணும் அதற்குத் தன் மடியை வெளிப்படுத்தலாகாது. அது பெரும் தீச்செயல் அல்லவா ?
லேவியராகமம் 18 : 24 (RCTA)
நாம் உங்கள் முன்னின்று துரத்தப் போகிற எல்லா இனத்தாரும் இப்படிப்பட்டவைகளால் தங்களை மாசுபடுத்தியிருக்கிறார்கள். நீங்கள் அவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள்.
லேவியராகமம் 18 : 25 (RCTA)
அப்படிப்பட்ட தீச்செயல்களால் அவர்களுடைய நாடும் தீட்டுப்படுத்தப் பட்டது. ஆதலால், அதன் பாவங்களை நாம் விசாரிப்போம். இந்நாடும் தன் குடிகளைக் கக்கிப்போடும்படி செய்வோம்.
லேவியராகமம் 18 : 26 (RCTA)
நீங்களோ நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொண்டு, வெறுப்புக்குரிய அத்தீச் செயல்களில் ஒன்றையும் செய்யாதீர்கள். குடிமகனும் அந்நியனும் அவற்றை விலக்கக் கடவார்கள்.
லேவியராகமம் 18 : 27 (RCTA)
உங்களுக்கு முன்னிருந்த இந்நாட்டுக் குடிகள் வெறுக்கத்தக்க மேற்சொன்ன தீச்செயல்களையெல்லாம் செய்து தங்கள் நாட்டைத் தீட்டுப் படுத்தினார்கள்.
லேவியராகமம் 18 : 28 (RCTA)
ஆகையால், நீங்கள் அப்படிப் பட்டவைகளைச் செய்தால், நாடு முன்பே தன் குடிகளைக் கக்கினது போல் உங்களையும் கக்கிப் போடுமென்று எச்சரிக்கையாய் இருங்கள்.
லேவியராகமம் 18 : 29 (RCTA)
மேற் சொன்ன வெறுப்புக் குரிய தீச் செயல்களில் எவற்றையேனும் செய்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக் கடவான்.
லேவியராகமம் 18 : 30 (RCTA)
நமது கட்டளைகளைக் கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் இருந்தவர்கள் செய்த தீச்செயல்களை நீங்களும் செய்து, அவற்றாலே தீட்டுப்படாத படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றார்.
❮
❯