லேவியராகமம் 15 : 1 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
லேவியராகமம் 15 : 2 (RCTA)
நீங்கள் இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: மேகவெட்டை உள்ளவன் தீட்டுள்ளவனாவான்.
லேவியராகமம் 15 : 3 (RCTA)
அவனுடைய உடலிலுள்ள மேக வெட்டை இடைவிடாது ஊறிக்கொண்டிருந்தாலும் அடைபட்டிருந்தாலும் அது அவனுக்குத் தீட்டாம்.
லேவியராகமம் 15 : 4 (RCTA)
மேக வெட்டை உள்ளவன் படுக்கிற படுக்கையும், உட்காரும் இடமும் தீட்டுப்பட்டதாகும்.
லேவியராகமம் 15 : 5 (RCTA)
அவனது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான் அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 6 (RCTA)
அவன் உட்கார்ந்திருந்த இடத்திலே உட்கார்ந்தவனோ தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 7 (RCTA)
அவனது உடலைத் தொட்டிருப்பவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 8 (RCTA)
மேகவெட்டையுள்ள மனிதன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 9 (RCTA)
அவன் உட்கார்ந்த சேணமும் தீட்டாயிருக்கும்.
லேவியராகமம் 15 : 10 (RCTA)
மேகவெட்டை உள்ளவனுக்குக் கீழ் இருந்தது எல்லாம் மாலைவரை தீட்டாயிருக்கும். அதில் எதையும் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 11 (RCTA)
அப்படிப்பட்ட நோயுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் மற்றொருவனைத் தொட்டிருப்பானாயின், அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 12 (RCTA)
மேகவெட்டை உள்ளவன் தொட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். மரத்தினால் அமைந்த பாண்டமாயின் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
லேவியராகமம் 15 : 13 (RCTA)
அவ்வித நோயுடையவன் நலமடைந்தானாயின், தான் சுத்தமானபின் ஏழு நாட்களை எண்ணிவருவான். பின் ஊற்று நீரில் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்த பின் சுத்தமுள்ளவனாவான்.
லேவியராகமம் 15 : 14 (RCTA)
எட்டாம் நாளிலோ அவன் இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை எடுத்துக் கொண்டு, ஆண்டவர் திருமுன் சாட்சியக் கூடார வாயிலில் வந்து, அவற்றைக் குருவிடம் கொடுப்பான்.
லேவியராகமம் 15 : 15 (RCTA)
குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு ஒன்றையும் ஒப்புக்கொடுத்த பின் அந்த மேகவெட்டையுள்ளவன் அதினின்று சுத்தமடையும்படி ஆண்டவர் திருமுன் வேண்டக்கடவார்.
லேவியராகமம் 15 : 16 (RCTA)
ஒருவனிடமிருந்து இந்திரியம் கழிந்ததாயின், அவன் நீராடி மாலைவரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
லேவியராகமம் 15 : 17 (RCTA)
மேலும், அவன் அணிந்திருந்த ஆடையையும் தோலாடையையும் தண்ணீரில் தோய்ப்பான். அவையும் மாலைவரை தீட்டுள்ளனவாய் இருக்கும்.
லேவியராகமம் 15 : 18 (RCTA)
அவனோடு படுத்த பெண்ணும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுள்ளவளாயிருப்பாள்.
லேவியராகமம் 15 : 19 (RCTA)
மாதவிடாயுள்ள பெண் தன் இரத்த ஊறலின் பொருட்டு ஏழுநாள் விலக்கமாய் இருக்கக்கடவாள்.
லேவியராகமம் 15 : 20 (RCTA)
அவளைத் தொட்டவன் யாராயினும் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 21 (RCTA)
அன்றியும், விலக்கமாய் இருக்கிற நாட்களில் அவள் எதன்மீது துங்குவாளோ அல்லது உட்காருவாளோ அவை தீட்டுப்பட்டவை.
லேவியராகமம் 15 : 22 (RCTA)
அவளுடைய படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 23 (RCTA)
அவள் உட்கார்ந்த ( மணைமுதலிய ) எப்பொருளையும் தொடுபவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 24 (RCTA)
மாதவிடாய்க் காலத்தில் அவளோடு படுத்த ஆடவன் எழுநாள் தீட்டுள்ளவனாய் இருப்பதுமன்றி, அவன் படுக்கும் எவ்விதப் படுக்கையும் தீட்டுப்படும்.
லேவியராகமம் 15 : 25 (RCTA)
ஒரு பெண் விலக்கமாய் இருக்கவேண்டிய காலமல்லாமல் அவளுடைய இரத்தம் பலநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருந்தால், அது கண்டிருக்கும் நாளெல்லாம் அந்தப் பெண் மாதவிடாய் விலக்கம் போல் விலகியிருக்கக்கடவாள்.
லேவியராகமம் 15 : 26 (RCTA)
அவள் படுக்கும் படுக்கையும், அவள் உட்காரும் அனைத்தும் தீட்டுண்டவை.
லேவியராகமம் 15 : 27 (RCTA)
இவைகளைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
லேவியராகமம் 15 : 28 (RCTA)
இரத்த ஊறல் நின்ற நின்ற பின், அவள் தன் சுத்திகரத்திற்காக ஏழுநாள் எண்ணிக்கொண்டு,
லேவியராகமம் 15 : 29 (RCTA)
எட்டாம் நாளிலே தனக்காக இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சாட்சியக் கூடார வாயிலிலே குருவிடம் கொண்டு வரக் கடவாள்.
லேவியராகமம் 15 : 30 (RCTA)
அவர் பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு மற்றொன்றையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் திருமுன் அவளுக்காகவும் அவளுடைய அசுத்த இரத்த ஊறலுக்காகவும் மன்றாடக் கடவார்.
லேவியராகமம் 15 : 31 (RCTA)
ஆகையால், இஸ்ராயேல் மக்கள் அசுத்தத்திற்கு அஞ்சி, தங்கள் நடுவேயிருக்கும் நமது உறைவிடத்தை அசுத்தப்படுத்தியபின் தங்கள் அசுத்தங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கடவீர்கள்.
லேவியராகமம் 15 : 32 (RCTA)
மேகவெட்டை உள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
லேவியராகமம் 15 : 33 (RCTA)
மாதவிடாயின் பொருட்டு விலக்காய் இருக்கிறவளுக்கும், அல்லது மித மிஞ்சின இரத்த ஊறல் உள்ளவளுக்கும், இப்படிப்பட்டவளோடு படுத்த ஆடவனுக்கும் ஏற்பட்ட சட்டம் இதுவே என்றார்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: