நியாயாதிபதிகள் 8 : 1 (RCTA)
அப்போது எபிராயிமியர் அவனை நோக்கி, "மதியானியரை எதிர்த்துப் போர் புரியச் சென்ற பொழுது நீர் எம்மை அழைக்காமல் போனதன் காரணம் யாது?" என்று வன்மையுடன் முறையிட்டுக் கடுமையாகக் கடிந்து கொண்டனர்.
நியாயாதிபதிகள் 8 : 2 (RCTA)
அதற்கு அவன், "நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ? அபிசேயிரின் திராட்சை இரசத்தை விட எபிராயிமின் திராட்சை இரசம் மேலானது அன்றோ?
நியாயாதிபதிகள் 8 : 3 (RCTA)
ஆண்டவர் உங்கள் கையில் மதியானியத் தலைவரான ஒரேபையும் சேபையும் ஒப்படைத்தார். நீங்கள் செய்ததற்கு முன் நான் செய்தது எம்மட்டோ?" என்றான். அதை அவன் சொன்ன போது அவன் மேல் அவர்கள் கொண்டிருந்த ஆத்திரம் அடங்கிற்று.
நியாயாதிபதிகள் 8 : 4 (RCTA)
பிறகு கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தனர். ஆனால் அவர்கள் களைப்பாய் இருந்ததால் ஓடிவனர்களைத் துரத்த முடியாது போயிற்று.
நியாயாதிபதிகள் 8 : 5 (RCTA)
அப்போது கெதெயோன் சொக்கோத்தூதரை நோக்கி, "என்னோடு இருப்போர் களைப்பாய் இருப்பதால் அவர்களுக்கு நீங்கள் அப்பம் கொடுங்கள். அப்படியானால் நாங்கள் மதியானிய அரசர்களான செபேயையும் சால்மனாவையும் தொடர முடியும்" என்றான்.
நியாயாதிபதிகள் 8 : 6 (RCTA)
அதற்குச் சொக்கோத்தின் தலைவர்கள், "உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்க, சேபே, சால்மனா என்போரின் கைகள் ஏற்கனவே உன் கைவயமாயிற்றே இதைப் பற்றியோ உன் படைக்கு அப்பம் தரவேண்டுமென்று கேட்கிறாய்?" என்றார்கள்.
நியாயாதிபதிகள் 8 : 7 (RCTA)
அதற்கு அவன், "சேபேயையும் சால்மனாவையும் ஆண்டவர் என் கையில் அளிக்கும்போது உங்கள் உடலைப் பாலைவனத்தின் முட்களாலும் நெரிஞ்சிகளாலும் கிழித்து விடுவேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 8 : 8 (RCTA)
அவன் அங்கிருந்து பானவேலுக்கு வந்து அவ்வூராரிடமும் அவ்வாறே கேட்டான். அவர்களும் செக்கோத்தார் கூறியபடியே பதிலளித்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 9 (RCTA)
எனவே அவன் அவர்களையும் நேக்கி, "வெற்றி வீரனாய் நான் சமாதானத்துடன் திரும்பி வருகையில் இக்கோபுரத்தை இடித்துப் போடுவேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 8 : 10 (RCTA)
சேபேயும் சால்மனாவும் தம் சேனைகளோடு இளைப்பாறினார்கள். கிழக்குப்புறத்தில் கூடியிருந்த எல்லா மக்கட் திரளிலும் ஓர் இலட்சத்திருபதினாயிரம் வீரர் மடிய, பதினையாயிரம் பேர் மட்டும் மீதியிருந்தனர்.
நியாயாதிபதிகள் 8 : 11 (RCTA)
கெதெயோன், கூடாரங்களில் வாழ்வோர் இருந்த இடம்வழியாக நோபே, சேக்பாவுக்குக் கிழக்கே சென்று, பாதுகாப்புடன் இருப்பதாகவும், யாதொரு தீங்கும் நேரிடாது என்றும் எண்ணியிருந்த எதிரிகளின் பாளையத்தை முறியடித்தான்.
நியாயாதிபதிகள் 8 : 12 (RCTA)
சேபேயும் சால்மனாவும் ஓடிப்போயினர். கெதெயோன் பின்தொடர்ந்து அவர்களைப் பிடித்து அவர்கள் சேனைகளைக் கலங்கடித்தான்.
நியாயாதிபதிகள் 8 : 13 (RCTA)
சூரியன் உதிக்குமுன் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்போது,
நியாயாதிபதிகள் 8 : 14 (RCTA)
கெதெயோன் செக்கோத்தாரின் இளைஞன் ஒருவனைப் பிடித்து மக்கட் தலைவர்கள், மூப்பர்களின் பெயர்களைக் கேட்டு, அவர்களில் எழுபத்தேழு பேர்ளைக் குறித்துக் கொண்டான்.
நியாயாதிபதிகள் 8 : 15 (RCTA)
கெதெயோன் செக்கோத் ஊராரிடம் வந்து, "இதோ! 'களைப்புற்ற உன் மனிதருக்கு நாங்கள் அப்பம் கொடுப்பதற்குச் சேபே, சால்மனாவின் கைகள் உன் கைவயமாயிற்றோ?' என்று என்னைக் கேலி செய்தீர்களே: இதோ! சேபேயும் சால்மனாவும்" என்றான்.
நியாயாதிபதிகள் 8 : 16 (RCTA)
பிறகு அவன் நகர் மூப்பரைப் பிடித்துப் பாலைவன முட்களையும் நெரிஞ்சிகளையும் கொணர்ந்து செக்கோத்தின் மனிதரை அவற்றால் குத்திக் கிழித்தான்.
நியாயாதிபதிகள் 8 : 17 (RCTA)
பின்பு அவன் பானுவேலின் கோபுரத்தையும் இடித்து அந்நகர் மக்களையும் கொன்றான்.
நியாயாதிபதிகள் 8 : 18 (RCTA)
பிறகு அவன் சேபேயையும் சால்மனாவையும் நோக்கி, "தாபோரில் நீங்கள் கொன்ற மனிதர் எப்படிப் பட்டவர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "உன்னைப் போன்றவர்களே; அவர்களில் ஒருவன் இளவரசன்" என்றனர்.
நியாயாதிபதிகள் 8 : 19 (RCTA)
அதற்கு அவன் "அவர்கள் என் சகோதரர், என் தாயின் மக்கள். உண்மையாகவே, நீங்கள் அவர்களைக் கொன்றிராவிட்டால், நானும் உங்களைக் கொல்லாது விட்டுவைப்பேன்" என்று கூறினான்.
நியாயாதிபதிகள் 8 : 20 (RCTA)
தன் மூத்த மகன் ஜேத்தேரை நோக்கி, "நீ எழுந்து அவர்களைக் கொல்" என்றான். அவனோ வாளை உருவவில்லை; சிறு பிள்ளையாய் இருந்ததால் அஞ்சினான்.
நியாயாதிபதிகள் 8 : 21 (RCTA)
அப்போது சேபேயும் சால்மனாவும், "நீயே எழுந்து எம்மேல் விழுந்து கொல்; மனிதனுக்கு, வயதுக்கு ஏற்ப வலிமை சேபேயையும் சால்மனாவையும் வெட்டி, அரச ஒட்டகங்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த குளிசங்களையும் சுரப்பளிகளையும் எடுத்துக் கொண்டான்.
நியாயாதிபதிகள் 8 : 22 (RCTA)
அப்போது இஸ்ராயேலர் எல்லாரும் கெதெயோனை நோக்கி, "நீரே எங்கள் தலைவர். நீரும் உம் மகனும், உம் மகனின் மகனும் எம்மை ஆளுங்கள். ஏனெனில், மதியானியர் கைகளினின்று நீரே எம்மை மீட்டீர்" என்றனர்.
நியாயாதிபதிகள் 8 : 23 (RCTA)
அதற்கு அவன், "நான் உங்களை ஆள மாட்டேன்; ஆனால் ஆண்டவரே உங்களை ஆளட்டும்" என்றான்.
நியாயாதிபதிகள் 8 : 24 (RCTA)
மேலும், அவர்களை நோக்கி, "உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; நீங்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களை எனக்குக் கொடுங்கள்" என்றான். ஏனெனில் இஸ்ராயேலரிடம் பொற்கடுக்கன் அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது.
நியாயாதிபதிகள் 8 : 25 (RCTA)
அப்போது அவர்கள், "மகிழ்வுடன் கொடுப்போம்" என்று சொல்லி, தரையின் மேல் துணியை விரித்துக் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டனர்.
நியாயாதிபதிகள் 8 : 26 (RCTA)
சாந்துக் காறைகள், ஆரங்கள், மதியானிய அரசர் பயன்படுத்திய பொன்னாடைகள், ஒட்டகங்களின் சரப்பளிகளும், இன்னும் கெதெயோன் கேட்டு வாங்கின ஆயிரத்து எழுநூறு பொன் சீக்கல் எடையுள்ள பொற் கடுக்கன்களும் இருந்தன.
நியாயாதிபதிகள் 8 : 27 (RCTA)
அவற்றைக் கொண்டு கெதெயோன் ஓர் எபோத்தைச் செய்து தன் ஊரான எபிராவில் அதை வைத்தான். அதனாலேயே இஸ்ராயேலர் சிலை வழிப்பாட்டுக்காரரானார்கள். கெதெயோனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அதுவே கேடாயிற்று.
நியாயாதிபதிகள் 8 : 28 (RCTA)
மதியானியர் இஸ்ராயேலர் மக்கள் முன்பாகத் திரும்ப தலையெடுக்காதபடி தாழ்த்தப் பட்டனர். கெதெயோன் ஆண்டபோது நாடு நாற்பது ஆண்டு அமைதியுற்றிருந்து.
நியாயாதிபதிகள் 8 : 29 (RCTA)
யோவாசின் மகன் ஜெரோபாவால் தன் வீடு சென்று அங்கே வாழ்ந்து வந்தான்.
நியாயாதிபதிகள் 8 : 30 (RCTA)
அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால், அவனுக்குப் பிறந்தோர் எழுபதுபேர்.
நியாயாதிபதிகள் 8 : 31 (RCTA)
சிக்கேமிலிருந்த அவன் வைப்பாட்டியும் அவனுக்கு அபிலெமேக் என்ற மகனைப் பெற்றாள்.
நியாயாதிபதிகள் 8 : 32 (RCTA)
யோவாசின் மகன் கெதெயோன் முதிர்ந்த வயதில் இறந்து எஸ்ரி வம்சத்து எபிராவிலே தன் தந்தை யோவாசு கல்லறையில் புதைக்கப்பட்டான்.
நியாயாதிபதிகள் 8 : 33 (RCTA)
கெதெயோன் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் மீண்டும் தவறிப் பாவாலை வழிபட்டனர். பாவாலே தம் கடவுள் என்று அவர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
நியாயாதிபதிகள் 8 : 34 (RCTA)
தங்களைச் சூழ்ந்திருந்த எல்லா எதிரிகளின் கையினின்றும் தங்களை மீட்ட ஆண்டவரை அவர்கள் மறந்தார்கள்.
நியாயாதிபதிகள் 8 : 35 (RCTA)
ஜெரோபாவால் என்ற கெதேயோன் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த நன்மைகளுக்குத் தக்கபடி அவனுடைய வீட்டாருக்கு அவர்கள் கருணை காட்டவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35