நியாயாதிபதிகள் 5 : 1 (RCTA)
அந்நாளில் தெபோராவும் அபினேயன் மகன் பாராக்கும் பாடின பாடலாவது:
நியாயாதிபதிகள் 5 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்களுக்காக உங்கள் உயிரையே முழுமனத்தோடு கையளித்தவர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
நியாயாதிபதிகள் 5 : 3 (RCTA)
மன்னர்களே, கேளுங்கள்; மக்கட்தலைவர்களே, செவி கொடுங்கள்: நானே ஆண்டவரைப் புகழ்வேன்; இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் போற்றுவேன்.
நியாயாதிபதிகள் 5 : 4 (RCTA)
ஆண்டவரே, நீர் செயீரினின்று புறப்பட்டு, ஏதோம் நாட்டைக் கடந்த போது நிலம் அதிர்ந்தது; விண்ணும் மேகங்களும் நீரைச் சொரிந்தன.
நியாயாதிபதிகள் 5 : 5 (RCTA)
ஆண்டவர் முன்னிலையில் மலைகள் இளகின. இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைக் கண்டு சீனாய் கூட இளகிற்று.
நியாயாதிபதிகள் 5 : 6 (RCTA)
ஆனாத் புதல்வன் சாம்காரின் காலத்திலும் சாகேல் காலத்திலும் பாதைகள் ஆள் நடமாற்றமின்றிக் கிடந்தன. அதில் வழி நடந்தவரோ வேறு வழிகளில் சென்றனர்.
நியாயாதிபதிகள் 5 : 7 (RCTA)
இஸ்ராயேலுக்குத் தாயாகத் தெபோரா எழும் வரை, இருந்த சிலரும் வாளா இருந்தனர்.
நியாயாதிபதிகள் 5 : 8 (RCTA)
புதுப் போர்களை ஆண்டவர் தேர்ந்துகொண்டார், எதிரிகளின் கோட்டை வாயில்களைத் தகர்த்தெறிந்தார். ஆனால் இஸ்ராயேலின் நாற்பதினாயிரம் படைவீரரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
நியாயாதிபதிகள் 5 : 9 (RCTA)
என் இதயமோ இஸ்ராயேலின் தலைவர்களுக்கே அன்பு செய்கின்றது. உங்களையே ஆபத்துக்கு விரும்பிக் கையளித்தோரே ஆண்டவரைப் புகழுங்கள்.
நியாயாதிபதிகள் 5 : 10 (RCTA)
கொழுத்த கழுதைகள் மேல் சவாரி செய்வோரே, நீதி மன்றத்தில் அமர்வோரே, வழிப் பயணிகளே அவரைப் போற்றுவீர்.
நியாயாதிபதிகள் 5 : 11 (RCTA)
தேர்கள் மோதியுடைந்து எதிரியின் படைகள் நசுக்கப்பட்ட இடங்களில், ஆண்டவருடைய நீதியும் இஸ்ராயேல் வீரர் மேல் அவருக்குள்ள கருணையும் பறைசாற்றப்படும். அப்போது ஆண்டவரின் மக்கள் வாயில்களுக்குச் சென்று அரசைக் கைப்பற்றினர்.
நியாயாதிபதிகள் 5 : 12 (RCTA)
எழுந்திரு, தெபோரா, எழுந்திரு; எழுந்து பாமாலை பாடு. பாராக், எழுந்திரு; அபினோயனின் மகனே, கைதிகளை நீயே கொண்டு போ.
நியாயாதிபதிகள் 5 : 13 (RCTA)
எஞ்சிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஆண்டவரே வலியோர் பக்கம் நின்று போர் புரிந்தார்.
நியாயாதிபதிகள் 5 : 14 (RCTA)
எபிராயிமின் வழிவந்தோரைக் கொண்டு அவர் அமலேக்கை முறியடித்தார். பிறகு பெஞ்சமினரைக் கொண்டு ஓ அமலேக்கே, உன் மக்களை வென்றார். மாக்கீர், சாபுலேனிலிருந்து தலைவர்கள் புறப்பட்டுப் படையைப் போர்க்களம் நடத்திச் சென்றனர்.
நியாயாதிபதிகள் 5 : 15 (RCTA)
இசாக்காரின் படைத்தலைவர்கள் தெபோராவோடிருந்தனர்; படுகுழியில் விழுவது போல் ஆபத்தைத் தேடின பாராக்கைப் பின் தொடர்ந்தனர். ஆனால் ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
நியாயாதிபதிகள் 5 : 16 (RCTA)
மந்தைகளின் அலறலைக் கேட்பதற்காகவா ஈரெல்லைகள் நடுவில் வாழ்கின்றாய்? ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
நியாயாதிபதிகள் 5 : 17 (RCTA)
காலாத் யோர்தான் நதிக்கப்பால் வீணாய்க் காலம் கழித்தான். தான் கப்பல்களில் தன் நேரத்தைச் செலவழித்தான். ஆசேரோ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்து துறைமுகங்களில் தங்கியிருந்தான்.
நியாயாதிபதிகள் 5 : 18 (RCTA)
சாபுலோனும் நெப்தலியும் மெரோமே நாட்டில் தம்மைச் சாவுக்குக் கையளித்தனர்.
நியாயாதிபதிகள் 5 : 19 (RCTA)
அரசர்கள் வந்து போரிட்டனர்,. கானானைய அரசர்கள் மாகெதோ நீர்த்துறை அருகே தானாக்கில் போரிட்டனர். ஆனால் அவர்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
நியாயாதிபதிகள் 5 : 20 (RCTA)
ஏனெனில் வானத்தினின்று அவர்களுக்கு எதிராய்ப் போர் செய்யப்பட்டது, விண்மீன்கள் தத்தம் வரிசையிலும் ஓட்டத்திலும் நின்று சிசாராவை எதிர்த்தன.
நியாயாதிபதிகள் 5 : 21 (RCTA)
சிசோன் நதி அவர்களுடைய சவங்களை அடித்துச் சென்றது; கதுமிம் நதியும் சிசோன் நதியும் அவ்வாறே செய்தன. என் ஆன்மாவே, வலியோரை மிதித்துத் தள்ளு.
நியாயாதிபதிகள் 5 : 22 (RCTA)
அப்பொழுது எதிரிகளில் வலுவுள்ளவர்கள் ஓடிய வேகத்தினாலும், பள்ளங்களில் பாய்ந்த விரைவாலும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் பிளந்து போயின.
நியாயாதிபதிகள் 5 : 23 (RCTA)
ஆண்டவரின் தூதர், 'மேரோஸ் நாட்டைச் சபியுங்கள், அந்நாட்டுக் குடிகளைச் சபியுங்கள்; ஏனெனில், அவர்கள் ஆண்டவருடைய மக்களுக்கு உதவிசெய்யவும் அவர் வீரருக்கு துணைபுரியவும் வரவில்லை' என்றார்.
நியாயாதிபதிகள் 5 : 24 (RCTA)
பெண்களில் சினேயனான ஆபேரின் மனைவி சாகேல் பேறு பெற்றவள். அவள் தன் கூடாரத்தில் ஆசீர்வதிக்கப்படுவாளாக.
நியாயாதிபதிகள் 5 : 25 (RCTA)
அவள் தண்ணீர் கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தாள்; மக்கட் தலைவர்கள் உண்ணும் கோப்பையில் தயிர் கொணர்ந்தாள்.
நியாயாதிபதிகள் 5 : 26 (RCTA)
இடக்கையில் ஆணியைத் தாங்கி, வலக்கையால் தொழிலாளியின் சுத்தியலை ஓங்கிச் சிசாராவின் தலையில் ஆணியிறங்குமிடம் அறிந்து கன்னப் பொட்டில் அடித்தாள்.
நியாயாதிபதிகள் 5 : 27 (RCTA)
அவன் அவளது காலடியில் வீழ்ந்தான், வலுவிழந்தான், இறந்தான். அவளுடைய கால்கள் முன்பாக உருண்டு புரண்டு உயிரிழந்து இரங்கத்தக்க நிலையில் கிடந்தான்.
நியாயாதிபதிகள் 5 : 28 (RCTA)
அவன் தாய் அறைக்குள் நின்று சன்னல் வழியே பார்த்துக் கொண்டு, 'அவனது தேர் இன்னும் திரும்ப வராதது ஏன்? அவன் குதிரைகள் இன்னும் வராதது ஏன்? என்று ஓலமிட்டாள்.
நியாயாதிபதிகள் 5 : 29 (RCTA)
அப்போது அவன் மனைவியருள் எல்லாம், அறிவில் சிறந்தவள் தன் மாமியை நோக்கி,
நியாயாதிபதிகள் 5 : 30 (RCTA)
கொள்ளையடித்த பொருட்களை ஒரு வேளை இப்போது பங்கிட்டுக் கொண்டிருப்பார்; தமக்கெனப் பேரழகி ஒருத்தியைத் தேடிக் கொண்டிருக்கக் கூடும், பல வண்ண ஆடைகள் சிசாராவுக்குக் கொடுக்கப்படலாம். தன்னை அழகு செய்யப் பலவித அணிகலன்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்' என்று பதில் உரைத்தாள்.
நியாயாதிபதிகள் 5 : 31 (RCTA)
ஆண்டவரே உம் எதிரிகள் யாவரும் இப்படி அழியட்டும். உமக்கு அன்பு செய்வோரோ இளஞாயிறு போல் ஒளி வீசட்டும்." (32) பிறகு நாற்பது ஆண்டுகள் நாடு அமைதியுற்றிருந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31