நியாயாதிபதிகள் 2 : 1 (RCTA)
கல்கலாவினின்று ஆண்டவருடைய தூதர் அழுகிறவர்களின் இடத்திற்குப் போய், "எகிப்து நாட்டினின்று உங்களை மீட்டு, உங்கள் முன்னோர்க்கு நான் வாக்களித்த நாட்டில் சேர்த்தேன். மேலும், உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறேன் என்றும் வாக்களித்தேன்,
நியாயாதிபதிகள் 2 : 2 (RCTA)
ஆனால், அதனை முன்னிட்டு நீங்கள் இந்நாட்டாரோடு யாதொரு உடன்படிக்கையும் செய்யக் கூடாது என்றும், அவர்களின் பலிபீடங்களைத் தகர்த்துடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தேன். இப்படி நான் கட்டளையிட்டிருந்த போதிலும் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. ஏன் இப்படிச் செய்தீர்கள்?
நியாயாதிபதிகள் 2 : 3 (RCTA)
எனவே உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழிக்கமாட்டேன். அவர்களே உங்கள் எதிரிகளாயும், அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கேடுமாய் இருப்பார்கள்" என்றார்.
நியாயாதிபதிகள் 2 : 4 (RCTA)
ஆண்டவருடைய தூதர் இஸ்ராயேலர் எல்லாரும் கேட்க இச் சொற்களைக் கூறின போது அவர்கள் கூக்குரலிட்டு அழுதார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 5 (RCTA)
அவ்விடத்திற்கு அழுகிறவர்கள் இடம் அல்லது கண்ணீரின் இடம் என்று பெயர் வழங்கிற்று. அவர்கள் அவ்விடத்திலேயே ஆண்டவருக்குப் பலி செலுத்தினர்.
நியாயாதிபதிகள் 2 : 6 (RCTA)
யோசுவா மக்களை அனுப்பிவிட்டார். இஸ்ராயேல் மக்களும் தத்தம் பாகத்தை உரிமையாக்கிக் கொள்ளப்போனார்கள்.
நியாயாதிபதிகள் 2 : 7 (RCTA)
அவரது வாழ்நாள் முழுவதும், அவருக்குப்பின் நெடுநாள் வந்தவர்களும் ஆண்டவர் இஸ்ராயேலருக்குச் செய்து வந்த அனைத்தையும் அறிந்திருந்தவர்களுமான மூப்பர்களின் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலர் ஆண்டவரை வழிபட்டு வந்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 8 (RCTA)
ஆண்டவரின் அடியானும் நூனின் மகனுமான யோசுவா தம் நூற்றிப் பத்தாம் வயதில் இறந்தார்.
நியாயாதிபதிகள் 2 : 9 (RCTA)
காவாஸ் மலைக்கு வடபுறத்து எபிராயீம் மலைமேல் அவரது சொந்தப் பங்கான தாம்னாத்சேரேயின் எல்லையில் அவரைப் புதைத்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 10 (RCTA)
அந்தத் தலைமுறையார் எல்லாரும் தங்கள் முன்னோர் பதம் சேர்ந்தனர். பின்னர், ஆண்டவரையும் அவர் இஸ்ராயேலுக்குச் செய்திருந்த நன்மைகளையும் அறியாதிருந்த வேறு மக்கள் தோன்றினர்.
நியாயாதிபதிகள் 2 : 11 (RCTA)
அப்போது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் புரிந்து பாவாலிமைத் தொழுதனர்.
நியாயாதிபதிகள் 2 : 12 (RCTA)
எகிப்து நாட்டிலிருந்து தம் முன்னோரை மீட்டவரும், தம் தந்தையரின் ஆண்டவருமான கடவுளை விட்டுவிட்டு அன்னிய தேவர்களையும், தம்மைச் சுற்றிலும் இருந்த மக்களின் தெய்வங்களையும் பின்பற்றி வழிபட்டனர். இதனால் ஆண்டவருக்குக் கோபமூட்டினர்.
நியாயாதிபதிகள் 2 : 13 (RCTA)
அவரை இகழ்ந்து, பாவாலையும் அஸ்தரோத்தையும் தொழுதனர்.
நியாயாதிபதிகள் 2 : 14 (RCTA)
எனவே ஆண்டவர் இஸ்ராயேலர் மேல் கோபம் கொண்டு கொள்ளைக்காரர் கைகளில் அவர்களை ஒப்படைக்க, இவர்களும் அவர்களைப் பிடித்துத் தங்களைச் சுற்றிலுமிருந்த எதிரிகளுக்கு விற்று விட்டனர். பகைவர்களை எதிர்க்க அவர்களால் முடியவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 15 (RCTA)
ஆனால், அவர்கள் எங்குப் போன போதிலும், ஆண்டவர் வாக்களித்திருந்தபடி அவர் கைகள் அவர்கள் மேல் இருந்ததால் அவர்கள் மிகவும் துன்புற்றனர்.
நியாயாதிபதிகள் 2 : 16 (RCTA)
அவர்களைத் துன்புறுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை மீட்க ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பினார். ஆனால் இவர்களுக்குச் செவிமடுக்கக் கூட அவர்கள் விரும்பவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 17 (RCTA)
அன்னிய தெய்வங்களுடன் விபசாரம் செய்து அவற்றை வழிப்பட்டனர். வெகு விரைவில் அவர்கள் தங்கள் முன்னோரின் வழிகளை விட்டு விட்டு, ஆண்டவரின் கற்பனைகளைக் கேட்டிருந்தும் அவற்றிற்கு முற்றிலும் மாறாய் நடந்தனர்.
நியாயாதிபதிகள் 2 : 18 (RCTA)
ஆண்டவர் நீதிபதிகளை எழுப்பி, அவர்களின் காலத்திலே இரக்கத்தால் மனம் உருகி, துன்புறுவோரின் பெருமூச்சுக்களுக்குச் செவிமடுத்து, அவர்களைத் துன்புறுத்திக் கொன்றவர்களிடமிருந்து மீட்டு வந்தார்.
நியாயாதிபதிகள் 2 : 19 (RCTA)
நீதிபதி இறந்த போதோ இஸ்ராயேலர் திரும்பவும் தீயோராகித் தம் முன்னோர் செய்த கேடுகளை விட இழிவான காரியங்களைச் செய்து, அன்னிய தெய்வங்களைப் பின்பற்றி வழிபட்டு வந்தனர். அவர்கள் மேன்மேலும் பாவம் செய்து கொண்டேயிருந்தனர். தங்கள் முன்னோரின் முரட்டு வழியையும் விட்டுவிடவில்லை.
நியாயாதிபதிகள் 2 : 20 (RCTA)
தமது கோபம் இஸ்ராயேல் மக்கள் மேல் எழ, ஆண்டவர், "இம்மக்களின் முன்னோருடன் நாம் செய்திருந்த உடன்படிக்கையை மீறினதாலும், நம் சொற்களை இவர்கள் அவமதித்துப் பின்பற்றாத படியாலும்,
நியாயாதிபதிகள் 2 : 21 (RCTA)
யோசுவா சாகும்போது அழிக்காது விட்டு விட்ட இம்மக்களை நாமும் அழிக்கமாட்டோம்.
நியாயாதிபதிகள் 2 : 22 (RCTA)
இப்படிச் செய்து, இஸ்ராயேர் தங்கள் முன்னோர் பின்பற்றினது போலவே ஆண்டவரின் வழியைத் தாங்களும் பின்பற்றி அவ்வழியில் நடக்கிறார்கள் என்று சோதித்துப் பார்ப்போம்" என்றார்.
நியாயாதிபதிகள் 2 : 23 (RCTA)
எனவே, அந்த நாடுகளை ஆண்டவர் உடனே அழிக்க மனமின்றி அவற்றை யோசுவா கையில் ஒப்படைக்காமலே விட்டுவிட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: