நியாயாதிபதிகள் 1 : 1 (RCTA)
யோசுவா இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவனிடம் வேண்டி, "கானானையரை எதிர்த்து எமக்கு முன் சென்று போரை நடத்துபவர் யார்?" என்று கேட்டனர்.
நியாயாதிபதிகள் 1 : 2 (RCTA)
அப்போது ஆண்டவர், "யூதா போகட்டும். இதோ, நாட்டை அவன் கைவயப்படுத்தினோம்" என்றார்.
நியாயாதிபதிகள் 1 : 3 (RCTA)
யூதா தன் சகோதரன் சிமியோனிடம், "நீ என் பக்கம் இருந்து என்னுடன் கானானையரை எதிர்த்துப் போர் புரிய வா. நானும் உன் பக்கம் இருந்து உன் எதிரிகளை எதிர்ப்பேன்" என்றார். அப்படியே சிமியோனும் அவனோடு சென்றான்.
நியாயாதிபதிகள் 1 : 4 (RCTA)
யூதா படையுடன் செல்லவே, கானானையரையும் பெரேனசயரையும் கடவுள் அவனுக்குக் கையளித்தார். அவர்கள் பெசேக் நகரில் பதினாயிரம் பேரைக் கொன்றனர்.
நியாயாதிபதிகள் 1 : 5 (RCTA)
பெசேக்கில் அதொனிபெசேக்கையும் கண்டு அவனையும் எதிர்த்துக் கானானையரையும் பெரேசையரையும் முறியடித்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 6 (RCTA)
அதொனிபெசேக் ஓடிப்போக, அவனை விரட்டிப் பிடித்து அவன் கைகால் விரல் நுனிகளைத் துண்டித்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 7 (RCTA)
அதொனிபெசேக், "எழுபது அரசர்கள் கைகால் விரல் நுனிகள் துண்டிக்கப்பட்டு என் மேசையிலிருந்து சிந்தினவற்றை உண்டனர். நான் பிறருக்குச் செய்துள்ளபடியே இறைவனும் எனக்குச் செய்துள்ளார்" என்றான். அவர்கள் அவனை யெருசலேமுக்குக் கொணர்ந்தனர். அவன் அங்கே இறந்தான்.
நியாயாதிபதிகள் 1 : 8 (RCTA)
யூதாவின் மக்கள் யெருசலேம் நகரைத் தாக்கி அதைப் பிடித்தனர். மக்களை வாளால் வெட்டி நகர் முழுவதையும் தீக்கு இரையாக்கினர்.
நியாயாதிபதிகள் 1 : 9 (RCTA)
அதன்பின் அவர்கள் போய், மலைப்பகுதிகளிலும் தெற்குப்புற ஊர்களிலும், சமவெளிகளிலும் வாழ்ந்து வந்த கானானையரோடு போர்தொடுத்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 10 (RCTA)
பிறகு பழைய காரியாத் அர்பே என்ற எபிரோனில் வாழ்ந்து வந்த கானானையரை எதிர்த்துச் சென்று செசாயி, அயிமான், தோல்மாயி என்பவர்களை யூதா வென்றான்.
நியாயாதிபதிகள் 1 : 11 (RCTA)
அங்கிருந்து புறப்பட்டு, காரியத்சேபேர், அதாவது கல்விமாநகர் என்ற பழம் பெயர் கொண்ட தாபிரின் குடிகளைத் தாக்கினான்.
நியாயாதிபதிகள் 1 : 12 (RCTA)
அப்போது காலேப், "காரியாத்சேபேர் நகரைப் பிடித்து அழிப்பவனுக்கு அக்சாம் என்ற என் மகளை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 1 : 13 (RCTA)
காலேபின் தம்பி செனேசின் மகன் ஒத்தேனியேல் அந்நகரை பிடிக்கவே, அக்சாம் என்ற தன் மகளைக் காலேப் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
நியாயாதிபதிகள் 1 : 14 (RCTA)
அவள் பயணம் போகையில் அவள் கணவன் அவளை நோக்கி, அவள் தந்தையிடம் ஒரு வயல் கேட்கும்படி தூண்டினான். அவள் கழுதை மேலமர்ந்து பெரு மூச்சுவிட்ட போது காலேப் அவளிடம், "என்னவேண்டும்?" என்று கேட்டான்.
நியாயாதிபதிகள் 1 : 15 (RCTA)
அவளோ, "எனக்கு உமது நல்லாசி வேண்டும், வறண்ட நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்வளமான ஒரு நிலத்தையும் தாரும்" என்றாள். காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலுமிருந்து நீர் வளமுள்ள நிலத்தை அவளுக்குக் கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 1 : 16 (RCTA)
மோயீசனின் உறவினனான சீனோயியின் மக்கள் யூதாவின் மக்களுடன் பனைமர ஊரிலிருந்து புறப்பட்டு அவனது பங்குக்குக் கிடைத்த ஆராத் ஊருக்குத் தெற்கேயுள்ள பாலைநிலத்திற்கு வந்து அங்குக் குடியேறினர்.
நியாயாதிபதிகள் 1 : 17 (RCTA)
யூதா தன் சகோதரன் சிமியோனோடு சென்று, இருவரும் சேர்ந்து சேபாத் ஊரில் வாழ்ந்த கானானையர் மேல் பாய்ந்து அவர்களைக் கொன்றனர். அவ்வூருக்கு ஓர்மா அல்லது சாபம் என்ற பெயர் உண்டாயிற்று.
நியாயாதிபதிகள் 1 : 18 (RCTA)
அதன் பிறகு, யூதா காஜாவையும் அதன் சுற்றுப்புறங்களையும், அஸ்காலோனையும், அக்காரோனையும் அதன் சுற்றெல்லைகளையும் கைப்பற்றினான்.
நியாயாதிபதிகள் 1 : 19 (RCTA)
ஆண்டவர் தன் பக்கம் இருந்ததால் யூதா மலைநாடுகளைத் தனதாக்கிக் கொண்டான். ஆனால் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்தோரை அவன் அழிக்க முடியவில்லை. ஏனெனில் நீண்ட வாள் பொருத்தப்பட்ட தேர்கள் பல அவர்களுக்கு இருந்தன.
நியாயாதிபதிகள் 1 : 20 (RCTA)
மோயீசன் கட்டளையிட்டபடி காலேபுக்கு எபிரோனைக் கொடுக்க, அவன் அதில் வாழ்ந்த ஏனாக்கின் மூன்று புதல்வரையும் அழித்தான்.
நியாயாதிபதிகள் 1 : 21 (RCTA)
பெஞ்சமின் மக்கள் யெருசலேமில் வாழ்ந்த ஜெபுசேயரை அழிக்கவில்லை. ஜெபுசேயர் பெஞ்சமின் மக்களோடு யெருசலேமில் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள்.
நியாயாதிபதிகள் 1 : 22 (RCTA)
சூசையின் குடும்பமும் பேத்தல் ஊருக்குச் சென்றது. ஆண்டவரும் அவர்களோடிருந்தார்.
நியாயாதிபதிகள் 1 : 23 (RCTA)
எப்படியென்றால் லூசா என்று முன்பு கூறப்பட்ட நகரை அவர்கள் முற்றுகையிட்ட போது,
நியாயாதிபதிகள் 1 : 24 (RCTA)
அந்நகரினின்று வெளியேறின ஒரு மனிதனைக் கண்டு, அவனை நோக்கி, "நகருக்குள் நுழைய வழி காட்டினால், உன்னைக் காப்பாற்றுவோம்" என்றனர்.
நியாயாதிபதிகள் 1 : 25 (RCTA)
அவன் வழி காண்பித்தான்; அவர்கள் நகரை வாள்முனைக்குப் பலியிட்டனர். ஆனால் அவனையும் அவன் உறவினரையும் ஒன்றும் செய்யவில்லை.
நியாயாதிபதிகள் 1 : 26 (RCTA)
அவனோ தப்பியோடி ஏத்திம் நாடு சென்று அங்கு ஒரு நகரைக் கட்டி எழுப்பி அதற்கு லூசா என்று பெயரும் இட்டான். அது இன்று வரை அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.
நியாயாதிபதிகள் 1 : 27 (RCTA)
மானோசேயும் பெத்சான், தானாக் நகர்களையும் சிற்றூர்களையும், தோர், ஜேபிளாம் மகேதோ நகர்க்குடிகளையும் சிற்றூர்களையும் அழிக்கவில்லை., கானானையரும் அவர்களோடு குடியிருக்கத் தொடங்கினர்.
நியாயாதிபதிகள் 1 : 28 (RCTA)
இஸ்ராயேலரும் வலிமை பெற்ற பின்னர் அவர்களைத் தங்களுக்குக் கப்பம் கட்டச் செய்தனர்; ஆனால் அவர்களை அழிக்கவில்லை.
நியாயாதிபதிகள் 1 : 29 (RCTA)
எபிராயீமும் காசேரில் வாழ்ந்த கானானையரை அழிக்காது அவர்களுடன் வாழ்ந்தான்.
நியாயாதிபதிகள் 1 : 30 (RCTA)
சபுலோன், கேத்திரோன், குடிகளையும் நாலோப் நகரையும் அழிக்கவில்லை; ஆனால் கானானையர் அவனோடு வாழ்ந்து அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 31 (RCTA)
ஆசேரும், ஆக்கோ, சீதோன், அலாப், அக்காசிப், எல்பா, ஆபெக், ரோகோப் நகரத்தாரைக் கொல்லாது,
நியாயாதிபதிகள் 1 : 32 (RCTA)
அந்நாடுகளில் வாழ்ந்து வந்த கானானையர் மத்தியில் வாழ்ந்தான், அவன் அவர்களைக் கொல்லவில்லை.
நியாயாதிபதிகள் 1 : 33 (RCTA)
நெப்தலியும், பெத்சாமெஸ், பெத்தானாத் ஊராரையும் அழிக்கவில்லை. அங்கு வாழ்ந்த கானானையருடன் அவனும் வாழ்ந்து வந்தான்; பெத்சாமித்தாரும் பெத்தானித்தாரும் அவனுக்குக் கப்பங்கட்டி வந்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 34 (RCTA)
அமோறையரோ தான் மக்களைச் சமவெளியில் இறங்க விடாது தடுத்து மலைகளிலேயே நெருக்கினர்.
நியாயாதிபதிகள் 1 : 35 (RCTA)
அயலோன், சாலேபிமிலுள்ள ஆரோஸ் அதாவது களிமண் என்ற மலையில் வாழ்ந்து வந்தான். சூசை குடும்பத்தார் மிக்க வலிமையுற்ற போது அமோறையரைத் தங்களுக்குக் கப்பம் கட்டும்படி செய்தனர்.
நியாயாதிபதிகள் 1 : 36 (RCTA)
அமோறையர் நாட்டின் எல்லைகளாவன: விருச்சிக மலையும் பேத்ரா மலைத்தொடரும் மேட்டு நிலமுமாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36