யோசுவா 21 : 1 (RCTA)
அக்காலத்தில் லேவி கோத்திரத்து வம்சத் தலைவர்கள் குருவாகிய எலெயசாரிடமும் நூனின் மகன் யோசுவாவிடமும் இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு கோத்திரத்து வம்சத் தலைவர்களிடமும் சென்று,
யோசுவா 21 : 2 (RCTA)
கானான் நாட்டிலுள்ள சீலோவில் அவர்களை நோக்கி, "நாங்கள் வாழத் தகுந்த நகர்களையும், எங்கள் கால்நடைகளை வளர்க்கத் தகுந்த பேட்டைகளையும் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர்.
யோசுவா 21 : 3 (RCTA)
ஆண்டவரின் கட்டளைக்கு இணங்க இஸ்ராயேல் மக்கள் தம் காணியாட்சியிலுள்ள நகர்களையும் அவற்றையடுத்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
யோசுவா 21 : 4 (RCTA)
குருவாயிருந்த ஆரோனின் மக்களான காவாத் வம்சத்திற்குச் சீட்டு விழுந்தது. யூதா, சிமியோன், பெஞ்சமின் என்ற கோத்திரங்களிடமிருந்து பதின்மூன்று நகர்களும்,
யோசுவா 21 : 5 (RCTA)
காவாத்தின் ஏனைய புதல்வருக்கு எபிராயீம், தான் என்ற கோத்திரங்களிடமிருந்தும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திடமிருந்தும், பத்து நகர்களும் கொடுக்கப்பட்டன,
யோசுவா 21 : 6 (RCTA)
பின்பு கெற்சோன் புதல்வருக்குச் சீட்டு விழுந்தது. அதனால் இசாக்கார், ஆசேர், நெப்தலி மனாசேயின் பாதிக்கோத்திரமாகிய இவர்களின் காணியாட்சியிலிருந்து பதின்மூன்று நகர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.
யோசுவா 21 : 7 (RCTA)
மேராரி புதல்வருக்கு, அவரவர் வம்சங்களின்படியே ரூபன், காத், சபுலோன் முதலியவர்களின் காணியாட்சியிலிருந்து பன்னிரு நகர்கள் அளிக்கப்பட்டன,
யோசுவா 21 : 8 (RCTA)
இந்நகர்களையும் இவற்றை அடுத்த பேட்டைகளையும் இஸ்ராயேல் மக்கள், ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருந்த படியே. திருவுளச்சீட்டுப் போட்டு லேவியருக்குக் கொடுத்தனர்,
யோசுவா 21 : 9 (RCTA)
கீழ்வரும் நகர்களை யோசுவா அவர்களுக்கு அளித்தார், இவை யூதா, சிமியோன் என்ற கோத்திரத்துப் புதல்வருக்குச் சொந்தமாயிருந்தன,
யோசுவா 21 : 10 (RCTA)
அதாவது, முதல் சீட்டைப் பெற்றிருந்த காத் வம்சத்தாரும் லேவியின் வழி வந்தோருமான ஆரோன் புதல்வருக்கு:
யோசுவா 21 : 11 (RCTA)
யூதாவின் மலைநாட்டில் ஏனாக்கின் தந்தையுடைய கரியத்தர்பே என்ற நகரையும், அதன் பேட்டைகளையும் கொடுத்தார். இன்று அந்நகரின் பெயர் எபிரோன்.
யோசுவா 21 : 12 (RCTA)
ஆனால், நகரைச் சேர்ந்த நிலங்களையும் சிற்றூர்களையும் ஜெப்போனேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.
யோசுவா 21 : 13 (RCTA)
ஆதலால் அடைக்கல நகராய் இருந்த எபிரோன் நகரையும், அதை அடுத்த பேட்டைகளையும் பெரிய குருவான ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார். லொப்னாம் நகர், அதை அடுத்த பேட்டைகள்,
யோசுவா 21 : 14 (RCTA)
ஜேத்தர், எஸ்தேமோ,
யோசுவா 21 : 15 (RCTA)
ஓலோன்,
யோசுவா 21 : 16 (RCTA)
தாபீர், ஐயின், ஜேத்தா, பெத்சமேஸ், அவற்றை அடுத்த பேட்டைகள் முதலியவற்றையும், மேற்சொன்ன இரு கோத்திரங்களின் நகர்கள் ஒன்பதையும் கொடுத்தார்,
யோசுவா 21 : 17 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்தாருடைய காபாவோன், காபாயே, அனத்தோத்,
யோசுவா 21 : 18 (RCTA)
ஆல்மோன் ஆகிய நகர்கள் நான்கையும் அவற்றைச் சார்ந்த பேட்டைகளையும்,
யோசுவா 21 : 19 (RCTA)
மொத்தம் பதின்மூன்று நகர்களையும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளையும் குருவாயிருந்த ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார்,
யோசுவா 21 : 20 (RCTA)
லேவி கோத்திரத்துக்குக் காத் புதல்வரைச் சேர்ந்த மீதியான வம்சங்களுக்குப் பங்காகத் தரப்பட்ட நகர்களாவன:
யோசுவா 21 : 21 (RCTA)
எபிராயீம் கோத்திரத்திலுள்ள அடைக்கல நகரங்களாவன: எபிராயீம் மலைநாட்டிலுள்ள சிக்கேம் நகரும் அதைச் சேர்ந்த பேட்டைகளும்,
யோசுவா 21 : 22 (RCTA)
காஜேர், கிப்சாயீம், பேத்தரோன் என்ற நகர்களும் அவற்றை அடுத்த பேட்டைகளுமாக நான்கு நகர்களாம்.
யோசுவா 21 : 23 (RCTA)
தான் கோத்திரத்து வீதத்திலே, ஏல்தேக்கோ, கபத்தோன்,
யோசுவா 21 : 24 (RCTA)
அயலோன் கெத்ரேம்மோன் என்ற நான்கு நகர்களும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.
யோசுவா 21 : 25 (RCTA)
மனாசேயின் கோத்திரத்துக் காணியாட்சியில் பேட்டைகள் உட்படத் தானாக், கெத்ரேம்மோன் ஆகிய இரு நகர்களுமாம்.
யோசுவா 21 : 26 (RCTA)
மொத்தம் பேட்டைகளுடன் பத்து நகர்களே தாழ்ந்த நிலையிலிருந்த காத் புதல்வர்களுக்கு அளிக்கப்பட்டன.
யோசுவா 21 : 27 (RCTA)
லேவி கோத்திரத்துக் கெற்சோன் புதல்வர்களுக்கு மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பங்கிலே பாசானிலுள்ள அடைக்கல நகரான கௌலோனும் பொஸ்ராமுமாகிய நகர்கள் இரண்டும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளும்,
யோசுவா 21 : 28 (RCTA)
இசாக்காரின் வீதத்திலே கேசியோன், தாபேரேத், ஜாரமொத்,
யோசுவா 21 : 29 (RCTA)
எங்கனிம் ஆகிய நகர்கள் நான்கும் அவற்றின் பேட்டைகளும்,
யோசுவா 21 : 30 (RCTA)
ஆசேரின் காணியாட்சியிலே மசால், அப்தோன், எல்காத்,
யோசுவா 21 : 31 (RCTA)
ரோகோப் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும்,
யோசுவா 21 : 32 (RCTA)
நெப்தலியின் சொந்த நாட்டிலே கலிலேயாவிலுள்ள கேதேஸ் என்ற அடைக்கல நகர், ஆமோத்தோர், கர்த்தான் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன,
யோசுவா 21 : 33 (RCTA)
மொத்தம், பேட்டைகள் கொண்ட பதின்மூன்று நகர்கள் கேற்சோனின் வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
யோசுவா 21 : 34 (RCTA)
மேலும், யோசுவா தாழ்நிலையிலிருந்த லேவியராகிய மேராரி புதல்வரின் வம்சங்களுக்கு அவரவர் குடும்ப வரிசைப்படி சபுலோனின் வீதத்திலுள்ள நான்கு நகர்களைக் கொடுத்தார். அதாவது: ஜெக்னாம்,
யோசுவா 21 : 35 (RCTA)
கர்த்தா, தம்னா, நாவாலோன் என்பனவும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.
யோசுவா 21 : 36 (RCTA)
மேலும் ரூபன் கோத்திரத்துக்குக் காணியாட்சியைச் சேர்ந்ததும் யோர்தானுக்கு அப்புறத்தில் எரிக்கோவுக்கு எதிரில் உள்ள பாலைவனத்திலிருந்த அடைக்கல நகருமான பொசோருடன்.
யோசுவா 21 : 37 (RCTA)
(36b) மீசோர். யாசேர். எத்சன். மேபாத் என்ற நான்கு நகர்களையும். அவற்றை அடுத்த பேட்டைகளையும்.
யோசுவா 21 : 38 (RCTA)
(37) காத்கோத்திரத்து வீதத்திலே காலாதிலுள்ள அடைக்கல நகர்களாகிய இராமோத், மனாயீம், ஏசெபோன், யாசர் என்ற நான்கு நகர்களையும் அவற்றை அடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்,
யோசுவா 21 : 39 (RCTA)
(38) மேராரியின் புதல்வர்கள் தம் குடும்பப்படியும், தம் வீட்டு வரிசைப்படியும் மொத்தம் பதின்மூன்று நகர்களைப் பெற்றனர்,
யோசுவா 21 : 41 (RCTA)
(39) இவ்வாறு லேவியர்கள் இஸ்ராயேல் மக்களுடைய காணியாட்சியின் நடுவிலே பெற்றுக் கொண்ட நகர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பத்தெட்டு.
யோசுவா 21 : 42 (RCTA)
(40) இவற்றைச் சேர்ந்த ஊர்களும்கூட அவர்களுக்குக் கிடைத்தன.
யோசுவா 21 : 43 (RCTA)
(41) இவ்விதமாய் ஆண்டவர் 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று அவர்களுடைய முன்னோருக்கு வாக்களித்திருந்த நாட்டையெல்லாம் கொடுத்தார். அவர்கள் அதைச் சொந்தமாக்கிக் கொண்டு அவற்றில் வாழ்ந்தனர்.
யோசுவா 21 : 44 (RCTA)
(42) மேலும். ஆண்டவரின் இரக்கப் பெருக்கால் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளோடு போரின்றி அமைதியாய் வாழ்ந்து வந்தனர். அவர்களின் எதிரிகளிலே எவனும் அவர்களை எதிர்த்து நிற்கத் துணியவில்லை. அவர்கள் எலலாரும் இஸ்ராயேலின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ்ந்தனர்.
யோசுவா 21 : 45 (RCTA)
(43) 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று ஆண்டவர் கொடுத்திருந்த வாக்குகளில் ஒன்றும் தவறாது நிறைவேறிற்று.
❮
❯