யோசுவா 15 : 1 (RCTA)
யூதாவின் புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த பங்கு வீதமாவது: ஏதோமுக்குத் தெற்கேயுள்ள சீன் என்ற பாலைவனம் துவக்கித் தென்புறத்துக் கடைசி எல்லை வரையாகும்.
யோசுவா 15 : 2 (RCTA)
அது உப்புக்கடலின் கடைகோடியாகிய தென்புறத்திலுள்ள முனையில் துவக்கும்.
யோசுவா 15 : 3 (RCTA)
அங்கிருந்து விருச்சிக மலைக்கும், அங்கிருந்து சீனுக்கும் போய், காதேஸ்பார்னேய்க்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு எழும்பிக் கல்காவைச் சுற்றிப்போன பின்பு,
யோசுவா 15 : 4 (RCTA)
அஸ்மோனாவை அடைந்து எகிப்தின் ஆற்றுக்குச் சென்று பெரிய கடலில் போய் முடியும். இது தென் எல்லையாகும்.
யோசுவா 15 : 5 (RCTA)
கீழ்ப்புற எல்லையாவது: உப்புக்கடல் துவக்கி, யோர்தானின் முகத்துவாரம் வரை, வட எல்லை கடலின் முனை துவக்கி மேற்சொல்லப்பட்ட யோர்தான் நதி வரை.
யோசுவா 15 : 6 (RCTA)
அவ்வெல்லை பெத்- அகிலாவுக்கு ஏறி வடக்கேயுள்ள பெத்- ஆராபாவைக் கடந்து ரூபனின் மகன் போயேனின் கல்லுக்கு ஏறிப்போகும்.
யோசுவா 15 : 7 (RCTA)
பின்னர் ஆக்கோர்ப் பள்ளத்தாக்கிலிருக்கிற தெபறு எல்லைகளை அடைந்து வடக்கேயுள்ள கல்காவுக்கு நேராய்ப் போகும்: கல்கா, அதொம்மிம் மலைக்கு எதிரே ஆற்றின் தென்புறத்தில் இருக்கிறது. பிறகு சூரியன் ஊற்று என்று அழைக்கப்பட்ட நீர்த்திடலைக் கடந்து ரோகல் என்ற கிணற்றுக்குச் சென்று,
யோசுவா 15 : 8 (RCTA)
அங்கிருந்து என்னொமின் மகனுடைய பள்ளத்தாக்கு வழியே போய், எபுசேயர் நாட்டிற்குத் தெற்கே சென்று யெருசலேம் நகரை அடைந்தபின், மேற்கிலிருக்கிற கெனோக்கு எதிரே இருக்கிற மலை மேல் ஏறி வடக்கிலுள்ள ராபாயிம் பள்ளத்தாக்கைத் தாண்டி,
யோசுவா 15 : 9 (RCTA)
அம்மலையின் உச்சியிலிருந்து நெப்தோவா எனப்படும் நீருற்றுக்குப் போய் எபிரோன் மலையின் ஊர்களுக்குச் சென்று பாலாவாகிய காரியத்தியாரீம், அதாவது, காடுகளின் நகரை அடையும்.
யோசுவா 15 : 10 (RCTA)
பாலாவை விட்டு மேற்கே செயீர் மலை வரை சுற்றிப் போய், பிறகு, வடக்கே கெஸ்லோன் முகமாயுள்ள யாரீம் மலைப்பக்கத்தில் சென்று பெத்சதமேசில் இறங்கித் தம்மனாவுக்குப் போய்,
யோசுவா 15 : 11 (RCTA)
வடக்கே சென்று அக்கரோனின் பக்கத்திலே திரும்பிச் சேக்கிரோனானை நோக்கி இறங்கி, அங்கிருந்து பாலா மலையைத் தாண்டி ஜெப்னெல் போய் மேற்கேயுள்ள பெரிய கடலோரத்தில் முடியும்.
யோசுவா 15 : 12 (RCTA)
யூதா புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் நியமிக்கப்பட்ட எல்லைகள் அவையே.
யோசுவா 15 : 13 (RCTA)
ஆண்டவருடைய கட்டளையின்படியே ஜெப்போனேயின் மகன் காலேபுக்கு, யூதாவின் புதல்வருடைய பூமியின் நடுவே ஏனாக்கின் தந்தையினுடைய காணியாட்சியாகிய காரியாத்அர்பே என்ற எபிரோனை யோசுவா கொடுத்தார்.
யோசுவா 15 : 14 (RCTA)
காலேபோ அங்கே ஏனாக்கின் வம்சத்தாரான சேசாய், அகிமான், தோல்மாய் என்ற ஏனாக்கின் மூன்று புதல்வரையும் கொன்று போட்டான்.
யோசுவா 15 : 15 (RCTA)
அங்கிருந்து தாபீரின் குடிகளிடம் இறங்கிப் போனான். முதன் முதல் அந்தத் தாபீருக்குப் பெயர் கரியாத்- செப்பேர், அதாவது கல்விமாநகர் என்பது.
யோசுவா 15 : 16 (RCTA)
பொழுது காலேப், "கரியாத்- செப்பேரைப் பிடிப்பவனுக்கு என் மகள் அக்சாமை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.
யோசுவா 15 : 17 (RCTA)
அதன்படி காலேபின் தம்பி கெனேசினி மகன் ஒத்தோனியேல் நகரைப் பிடித்தான். ஆகையால் தன் மகள் அக்சாமை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
யோசுவா 15 : 18 (RCTA)
அவர்கள் ஒன்றாய்ப் புறப்பட்டுச் செல்லும் வழியில், " உன் தந்தையிடம் ஒரு வயலைக் கேள்" என்று அவள் கணவன் அக்சாமைத் தூண்டினான். எனவே அவள் கழுதையின் மேல் சவாரி போகையில் பெருமூச்சு விடத் தொடங்கினாள். அதைக்கேட்டுக் காலேப் அவளை நோக்கி," ஏன்?" என்று வினவினான்.
யோசுவா 15 : 19 (RCTA)
அதற்கு அவள், "எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். அதாவது, தென்புறத்திலிருக்கும் வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர் அன்றே ? அத்தோடு நீர்வளமுள்ள ஒரு நிலத்தையும் எனக்குத் தரவேண்டும்" என்றாள். அப்பொழுது காலேப் அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்வளமுள்ள மற்றொரு நிலத்தைக் கொடுத்தான்.
யோசுவா 15 : 20 (RCTA)
யூதா புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த சொத்து அதுவே.
யோசுவா 15 : 21 (RCTA)
தென்கோடியில் இருக்கும் ஏதோமின் எல்லை ஓரமாக யூதா புதல்வரின் கோத்திரத்துக்குக் கிடைத்த நகர்களாவன: கப்சையேல்,
யோசுவா 15 : 22 (RCTA)
ஏதேர், ஜாகூர், கீனா, திமோனா, அததா,
யோசுவா 15 : 23 (RCTA)
காதேஸ், ஆசோர்,
யோசுவா 15 : 24 (RCTA)
ஜெத்னம், சிவ்,
யோசுவா 15 : 25 (RCTA)
தெலேம், பாலோத், புது ஆசோர்,
யோசுவா 15 : 26 (RCTA)
ஆசோர் எனும் கரியொதெஸ்னோன், ஆமம், சாமா,
யோசுவா 15 : 27 (RCTA)
மொலாதா, ஆசேர்கதா, அசெமொன்,
யோசுவா 15 : 28 (RCTA)
பெத்பெலத், ஆசேர்சுவல், பெர்சபே, பசியொத்தியா,
யோசுவா 15 : 29 (RCTA)
பாஆலா, ஜிம்,
யோசுவா 15 : 30 (RCTA)
ஏசேம், எல்தொலாத்,
யோசுவா 15 : 31 (RCTA)
செசில், அர்மா, சிசெலக், மெதேமெனா,
யோசுவா 15 : 32 (RCTA)
சென்சென்னா, லெபாவொத், சேலிம், ஆயென், ரெம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 33 (RCTA)
சமவெளியில் எஸ்தாவோல், சாரேயா,
யோசுவா 15 : 34 (RCTA)
ஆசேனா, சானோயே, என்கன்னிம், தப்பவா,
யோசுவா 15 : 35 (RCTA)
ஏனாயிம், ஜெரிமோத், அதுல்லம், சொக்கோ,
யோசுவா 15 : 36 (RCTA)
அஜேக்கா, சராயீம், அதித்தாயீம், கெதெரா, கெதெரோத்தாயிம் ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 37 (RCTA)
சானான், அதசா,
யோசுவா 15 : 38 (RCTA)
மக்தல்கத், தெலெயான், மசேப்பா, ஜெக்தல்,
யோசுவா 15 : 39 (RCTA)
லாக்கிசு, பாஸ்காத்,
யோசுவா 15 : 40 (RCTA)
ஏகிலோன், கெப்போன்,
யோசுவா 15 : 41 (RCTA)
லெகெமன், கெத்லீஸ், கிதெரொத், பெத்தாகன், நா ஆமா, மகேதா
யோசுவா 15 : 42 (RCTA)
ஆகிய பதினாறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 43 (RCTA)
லபனா, ஏத்தேர், ஆகான், ஜெப்தா, எஸ்னா, நெசீப்,
யோசுவா 15 : 44 (RCTA)
கைலா, அக்சீப், மரேசா ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 45 (RCTA)
அக்கரோனும் அதன் ஊர்களும் சிற்றூர்களும்.
யோசுவா 15 : 46 (RCTA)
அக்கரோன் துவக்கி கடல் வரை அசோத்தின் வழியிலுள்ள எல்லா ஊர்களும் சிற்றூர்களும்.
யோசுவா 15 : 47 (RCTA)
அசோத்தும் அதைச் சார்ந்த ஊர்களும் சிற்றூர்களும், காஜாவும், எகிப்தின் நதிவரை பரந்து கிடக்கும் ஊர்களும் சிற்றூர்களும். பிறகு பெரிய கடலே எல்லை.
யோசுவா 15 : 48 (RCTA)
மலையில்: சாமீர் ஜெத்தர், சொக்கொத்,
யோசுவா 15 : 49 (RCTA)
தன்னா, கரியத்சென்னா எனப்படும் தாபீர்.
யோசுவா 15 : 50 (RCTA)
அனப், இஸ்தேமோ, ஆனீம்,
யோசுவா 15 : 51 (RCTA)
கோசன், ஓலன், கிலோ ஆகிய பதினொரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 52 (RCTA)
அராப், ரூமா, ஏசான்,
யோசுவா 15 : 53 (RCTA)
ஜானும், பெத்தாப்புவா, அப்பேக்கா,
யோசுவா 15 : 54 (RCTA)
அத்மாத்தா, கரியத் அர்பே அதாவது எபிரோன், சியோர் ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 55 (RCTA)
மாயோன், கார்மேல், சீப்,
யோசுவா 15 : 56 (RCTA)
ஜோத்தா, ஜெஸ்ராயேல், ஜீக்கதம்,
யோசுவா 15 : 57 (RCTA)
சனோவே, அக்காயின் கபவா, தம்னா ஆகிய பத்து நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 58 (RCTA)
ஆலும், பேசூர், கெதோர்,
யோசுவா 15 : 59 (RCTA)
மரேத், பெத்தனோத், எல்தேக்கோன் ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 60 (RCTA)
கரியத்பவால் அதாவது கரியத்தியரிம் ஆகிய காடுகளின் நகர், அரேபா ஆகிய இரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 61 (RCTA)
பாலைவனத்தில் பெத்தரபா, மெத்தின்,
யோசுவா 15 : 62 (RCTA)
சக்கக்கா, நெப்சன், உப்புநகர், என்காதி ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
யோசுவா 15 : 63 (RCTA)
யெருசலேமில் குடியிருந்த ஜெபுசையரை யூதா புதல்வர் அழித்தொழிக்க முடியாது போயிற்று. ஆகையால் இன்று வரை ஜெபுசையர் யூதா புதல்வரோடு யெருசலேமில் வாழ்ந்து வருகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63