யோசுவா 10 : 1 (RCTA)
எரிக்கோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தது போல், யோசுவா ஆயியிக்கும் அதன் அரசனுக்கும் செய்து அதைப் பிடித்துப் பாழாக்கினதையும், கபயோனியரும் இஸ்ராயேலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டதையும், யெருசலேமின் அரசன் அதோனிசெதேக் கேள்விப்பட்டான்.
யோசுவா 10 : 2 (RCTA)
அப்போது அவன் மிகவும் ஆட்டமுற்றான். ஏனெனில் கபயோன் பெரிய நகர். அது தலை நகராகிய ஆயியைவிட மிகப் பெரியதாயிருந்தது. மேலும், அதன் படைவீரர்கள் எல்லாரும் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்களாய் இருந்தனர்.
யோசுவா 10 : 3 (RCTA)
ஆகையால் யெருசலேம் அரசன் அதோனிசெதேக், எபிரோன் ஊருக்கு அரசனான ஓகாமுக்கும், ஜெரிமோத்தின் அரசனான பாரிக்கும், லாக்கீசு நகர அரசனான ஜாப்பியாவுக்கும், எகிலோனின் அரசனான தாமீருக்கும் ஆள் அனுப்பினான்.
யோசுவா 10 : 4 (RCTA)
துணையோடு நம்மிடம் வந்து சேருங்கள். கபயோன் நம்முடைய பக்கத்தை விட்டு, யோசுவாவோடும் இஸ்ராயேல் மக்களோடும் சேர்ந்து கொண்டபடியால் அதைப் பிடிக்கப் போவோம்" என்று அவர்களுக்குச் சொல்லச் சொன்னான்.
யோசுவா 10 : 5 (RCTA)
அப்படியே யெருசலேமின் அரசன், எ+தி20514பிரோனின் அரசன், ஜெரிமோத்தின் அரசன் ஆகிய அமோறைய ஐந்து அரசர்களும் ஒன்று சேர்ந்து, தங்கள் படைகள் அனைத்தோடும் புறப்பட்டு, கபயோனைச் சுற்றிப் பாளையம் இறங்கி அதை முற்றுகையிட்டனர்.
யோசுவா 10 : 6 (RCTA)
அப்பொழுது முற்றுகையிடப்பட்ட கபயோனின் குடிகள் கல்கலாவிலிருந்த பாளையத்துக்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி, "உம் அடியாரைக் கைவிட்டு விடாமல் விரைவாய் இவ்விடம் வந்து எங்களுக்குத் துணை செய்து காப்பாற்ற வேண்டும். குன்றுகளில் குடியிருக்கிற அமோறையரின் அரசர்கள் எல்லாரும் எங்களுக்கு எதிராய் ஒன்று திரண்டுள்ளனர்" என்று சொல்லச் சொன்னார்கள்.
யோசுவா 10 : 7 (RCTA)
உடனே யோசுவாவும் அவரோடு மிக்க ஆற்றல் வாய்ந்த போர்வீரர் அனைவரும் கல்கலாவிலிருந்து புறப்பட்டனர்.
யோசுவா 10 : 8 (RCTA)
ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களை உன் கையில் ஒப்படைத்தோம். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது" என்று அருளினார்.
யோசுவா 10 : 9 (RCTA)
யோசுவா கல்கலாவிலிருந்து இரவு முழுவதும் நடந்து திடீரென்று அவர்கள் மேல் பாய்ந்தார்.
யோசுவா 10 : 10 (RCTA)
ஆண்டவரோ அவர்களை இஸ்ராயேலருக்கு, அவர்கள் கபயோனிலே அவர்களை முறியடித்துப் பெத்தொரோனுக்குப் போகும் வழியில் அவர்களைப் பின்தொடர்ந்து, அசெக்கா, மசேதா வரை தூரத்திக் கொன்று குவித்தனர்.
யோசுவா 10 : 11 (RCTA)
இப்படி அவர்கள் இஸ்ராயேல் மக்களுக்குத் தப்பும்படி பெத்தொரோனிலிருந்து இறங்கி ஒடிப்போகையில் அவர்கள் அசெக்கா செல்லும்வரை ஆண்டவர் வானத்திலிருந்து பெரிய கற்கள் விழச்செய்தார். இஸ்ராயேல் மக்களின் வாளால் வெட்டுண்டு மடிந்தவர்களை விட அக்கல் மழையால் அடிபட்டுச் செத்தவர்களே அதிகம்.
யோசுவா 10 : 12 (RCTA)
இப்படி இஸ்ராயேல் மக்கள் கையில் ஆண்டவர் அமோறையரை ஒப்படைத்த அந்நாளிலே, யோசுவா அவர்களுக்கு முன்பாக ஆண்டரை நோக்கி வேண்டிக்கொண்டு, "சூரியனே, நீ கபயோனின் முகமாய்ச் செல்லாதே. சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கு முகமாய்ப் போகாதே" என்றார்.
யோசுவா 10 : 13 (RCTA)
எனவே, நீதிபதிகள் ஆகமத்தில் எழுதப் பட்டிருக்கிறதுபோல, சூரியனும் சந்திரனும் நிலைகுலையாமல் இஸ்ராயேலர் தங்கள் எதிரிகளின் மேல் பழிவாங்கித் தீருமட்டும் அசையாது நின்றன. இப்படி ஒருநாள் அளவாகச் சாயத் தாமதித்து, சூரியன் நடுவானிலே நின்றுவிட்டது.
யோசுவா 10 : 14 (RCTA)
இவ்வாறு ஆண்டவர் ஒரு மனிதனின் சொல்லுக்கு அடங்கி இஸ்ராயேலருக்காகப் போர்புரிந்தார். அந்நாளைப்போல் நெடிய நாள் இதற்கு முன் இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.
யோசுவா 10 : 15 (RCTA)
பிறகு யோசுவா இஸ்ராயேலர் அனைவரையும் அழைத்துக் கொண்டு கல்கலாவிலுள்ள பாளையத்துக்குத் திரும்பினார்.
யோசுவா 10 : 16 (RCTA)
அந்த ஐந்து அரசர்களும் தப்பியோடி மசேதா நகரில் உள்ள ஒரு குகையில் ஒளிந்து கொண்டனர்.
யோசுவா 10 : 17 (RCTA)
மசேதா ஊரிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்த ஐவரும் கண்டு பிடிக்கப்பட்டனர் என யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
யோசுவா 10 : 18 (RCTA)
உடனே அவர் தம் தோழர்களை நோக்கி, "நீங்கள் போய்ப் பெரிய கற்களைப் புரட்டிக் குகையின் வாயிலில் வைத்து அடைத்து, இப்படிச் சிறைப்பட்டவர்களுக்குக் காவல் புரியும்படி தக்க ஆட்களை வையுங்கள்.
யோசுவா 10 : 19 (RCTA)
நீங்களோ அங்கே நில்லாது எதிரிகளைத் தொடர்ந்து துரத்துங்கள். பின்னணியில் ஓடுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் கோட்டைகளினுள் நூழையாத படி தடை செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் அவற்றை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று கட்டளையிட்டார்.
யோசுவா 10 : 20 (RCTA)
எனவே, பகைவர் பெரும் தோல்வியுற்றுப் பெரும்பாலோர் வெட்டுண்டு விழுந்தனர். எல்லாருமே அழிந்தொழிந்தனர் அவர்களில் வெகுசிலரே உயிர் தப்பி அரண் சூழ்ந்த நகர்களுக்குள் புகுந்தனர்.
யோசுவா 10 : 21 (RCTA)
பின்பு சேனை எல்லாம் மசேதாவின் கண் பாளையத்தில் தங்கியிருந்து யோசுவாவிடம் திரும்பி வந்தது. வீரர்களில் காயப்பட்டவர்களும் இல்லை. உயிரிழந்தவர்களும் இல்லை என்று கண்டு, இஸ்ராயேல் மக்களுக்கு எதிராய் வாயைத்திறந்து பேச ஒருவனும் துணியவில்லை.
யோசுவா 10 : 22 (RCTA)
அப்பொழுது யோசுவா, "குகையின் வாயைத்திறந்து அதில் ஒளிந்து கொண்டிருக்கும் ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
யோசுவா 10 : 23 (RCTA)
அவருடைய பணியாளர் அப்படியே செய்து, யெருசலேமின் அரசன், எபிரோனின் அரசன், ஜெரிமோத்தின் அரசன், லாக்கீசின் அரசன், எகிலோனின் அரசன் ஆகிய அந்த ஐந்து அரசர்களையும் குகையிலிருந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
யோசுவா 10 : 24 (RCTA)
அவர்கள் கொண்டுவரப்பட்டபோது, யோசுவா இஸ்ராயேலின் மனிதர்களை எல்லாம் அழைப்பித்துத் தம்முடன் இருந்த படைத்தலைவர்களை நோக்கி, "நீங்கள் அருகில் சென்று இவ்வரசர்களுடைய கழுத்துகளின்மேல் காலை வையுங்கள்" என்றார். அவர்கள் அவ்விதமே போய், தரையில் விழுந்து கிடந்தவர்களின் கழுத்துகளின் மேல் தங்கள் காலை வைத்து மிதிக்கத் தொடங்கினர்.
யோசுவா 10 : 25 (RCTA)
மறுபடியும் யோசுவா அவர்களை நோக்கி, "உங்களுக்கு அச்சமும் நடுக்கமும் வேண்டாம். திடமாயும் உறுதியாயும் இருங்கள். நீங்கள் எவரெவரோடு போர்புரிய வேண்டுமோ அவர்களை எல்லாம் ஆண்டவர் இப்படியே செய்வார்" என்றார்.
யோசுவா 10 : 26 (RCTA)
அதன்பின் யோசுவா அவர்களைக் குத்திக்கொன்று ஐந்து மரங்களில் தொங்கவிட்டார். மாலை வரை அவர்களின் உடல்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.
யோசுவா 10 : 27 (RCTA)
சூரியன் மறையும் வேளையில் யோசுவா மரங்களிலிருந்து உடல்களை இறக்கத் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் முன்பு ஒளிந்து கொண்டிருந்த அக்குகையிலேயே அவர்களைப் போட்டுப் பெரும் கற்களால் குகையின் வாயை அடைத்தனர். அந்தப் பாறைகள் இன்றுவரை அங்கே இருக்கின்றன.
யோசுவா 10 : 28 (RCTA)
அன்று யோசுவா தம் ஆற்றலால் மசேதா நகரைப் பிடித்து அதன் அரசனையும் எல்லாக் குடிகளையும் தன் வாளுக்கு இரையாக்கினார். அதன் உடைமைகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் அழித்து விட்டார். முன்பு எரிக்கோவின் அரசனுக்கு அவர் செய்ததுபோல் மசேதாவின் அரசனுக்கும் செய்தார்.
யோசுவா 10 : 29 (RCTA)
பிறகு மசேதாவிலிருந்து யோசுவா இஸ்ராயேலர் அனைவரோடும் லெப்னாவுக்குப் போய்ப் போர் புரிந்தார்.
யோசுவா 10 : 30 (RCTA)
ஆண்டவர் அதையும் அதன் அரசனையும் இஸ்ராயேலர் கையில் ஒப்படைத்தார். இவர்கள் தங்கள் வீரத்தினால் அதைப் பிடித்து அதிலிருந்த குடிகளை எல்லாம் வெட்டி வீழ்த்தினர். ஊரை முழுவதும் அழித்துவிட்டு எரிக்கோ அரசனுக்குச் செய்திருந்தபடியே லெப்னா அரசனுக்கும் செய்தனர்.
யோசுவா 10 : 31 (RCTA)
லெப்னாவிலிருந்து யோசுவா இஸ்ராயேலர் அனைவரோடும் லாக்கீசுக்குப் புறப்பட்டுப்போனார். நகரைச் சூழும்படி சேனைக்குக் கட்டளையிட்டு முற்றுகையிட்டார்.
யோசுவா 10 : 32 (RCTA)
ஆண்டவர் லாக்கீசை இஸ்ராயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்கள் போர்புரிந்து இரண்டாம் நாளில் அதைப்பிடித்து, லெப்னாவுக்குச் செய்தது போல் குடிகளையும் எல்லா உயிர்களையும் வாளினால் அழித்தார்கள்.
யோசுவா 10 : 33 (RCTA)
அக்காலத்தில் காஜேர் அரசனாகிய கொராம், லாக்கீசுக்குத் துணைசெய்ய வந்திருந்தான். யோசுவா அவனையும் அவனுடைய எல்லா மக்களையும் ஒருவனையும் மீதியாக வைக்காதபடி, வெட்டி வீழ்த்தினார்.
யோசுவா 10 : 34 (RCTA)
லாக்கீசிலிருந்து யோசுவா எகிலோனுக்குப் புறப்பட்டு அந்நகரையும் முற்றுகையிட்டார்.
யோசுவா 10 : 35 (RCTA)
போர் புரிந்து அதை அன்றே பிடித்து, லாக்கீசில் செய்தது போல் அதிலுள்ள எல்லா உயிர்களையும் வாளால் வெட்டி அழித்தார்.
யோசுவா 10 : 36 (RCTA)
அதன் பின்பு யோசுவா எகிலோனிலிருந்து எல்லா இஸ்ராயேலருடனும் புறப்பட்டு எபிரோனை எதிர்த்துப் போர் புரிந்தார்.
யோசுவா 10 : 37 (RCTA)
அதையும் பிடித்து, அதன் அரசனையும் அதற்கடுத்த எல்லாக் கோட்டைகளையும் கைப்பற்றி, அதில் குடியிருந்த எல்லா உயிர்களையும், ஒன்றும் தப்ப விடாமல் வாளுக்கு இரையாக்கினார். எகிலோனுக்குச் செய்ததுபோல் எபிரோனுக்கும் செய்து, அங்குக் கண்ட எல்லா உயிர்களையும் கொன்று குவித்தார்.
யோசுவா 10 : 38 (RCTA)
பிறகு அவர் தாபீருக்குத் திரும்பி வந்தார்.
யோசுவா 10 : 39 (RCTA)
கையில் வாள் ஏந்தியவராய் அதைப் பிடித்துப் பாழாக்கினார்; அதையும் அதன் அரசனையும், சுற்றிலுமிருந்த அரண்களையும் கைப்பற்றி, எல்லா உயிர்களையும் வாளுக்கு இரையாக்கி ஊர் முழுவதையும் அழித்தொழித்தார். எபிரோனுக்கும் லேப்னாவுக்கும் அவற்றின் அரசர்களுக்கும் செய்திருந்தது போல் தாபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்.
யோசுவா 10 : 40 (RCTA)
இப்படியே யோசுவா மலைநாடு அனைத்தையும் தென்நாட்டையும் சமவெளியையும் அசெதோத்தையும் அதன் அரசர்களையும் அழித்துப் பாழாக்கினார். ஒருவனையும் தப்பவிடாமல் அவற்றில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் கட்டளையிட்டிருந்தபடி கொன்று குவித்தார்.
யோசுவா 10 : 41 (RCTA)
காதேஸ்பர்னே துவக்கிக் காசா வரை, கபயோன் முதல் கோசன் நாடு அனைத்தையும்,
யோசுவா 10 : 42 (RCTA)
அங்கிருந்த அரசர்கள் அனைவரையும் அவர்களுக்குக் கீழிருந்த நாடுகளையும் ஒரே எடுப்பிலே பிடித்துப் பாழாக்கினார். ஏனென்றால், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் அவர் சார்பில் போர் புரிந்தார்.
யோசுவா 10 : 43 (RCTA)
பின்பு அவர் எல்லா இஸ்ராயேலரோடும் கல்கலாவிலிருந்த பாளையத்துக்குத் திரும்பினார்.
❮
❯