யோனா 2 : 1 (RCTA)
(2) யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்:
யோனா 2 : 2 (RCTA)
(3) என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர்.
யோனா 2 : 3 (RCTA)
(4) நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின.
யோனா 2 : 4 (RCTA)
(5) அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன்.
யோனா 2 : 5 (RCTA)
(6) மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.
யோனா 2 : 6 (RCTA)
(7) மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர்.
யோனா 2 : 7 (RCTA)
(8) என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது.
யோனா 2 : 8 (RCTA)
(9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.
யோனா 2 : 9 (RCTA)
(10) நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!"
யோனா 2 : 10 (RCTA)
(11) ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
❮
❯