யோவான் 7 : 1 (RCTA)
இந்நிகழ்ச்சிக்குப்பின், இயேசு கலிலேயாவிலே நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யோவான் 7 : 2 (RCTA)
யூதர்களின் கூடாரத் திருவிழா அண்மையிலிருந்தது.
யோவான் 7 : 3 (RCTA)
அவருடைய சகோதரர் அவரை நோக்கி, " ' யூதேயாவிலுள்ள உம் சீடரும் நீர் புரியும் செயல்களைக் காணும்படி, இவ்விடத்தைவிட்டு அங்கே செல்லும்.
யோவான் 7 : 4 (RCTA)
ஏனெனில், பொதுமக்கள் கவனத்தைக் கவர விரும்புகிறவன் எவனும், மறைவில் செயலாற்றுவதில்லை. நீர் இதெல்லாம் செய்துவருவதால், உம்மை உலகிற்கு வெளிப்படுத்தலாமே! " என்றனர்.
யோவான் 7 : 5 (RCTA)
ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரில் விசுவாசங்கொள்ளவில்லை.
யோவான் 7 : 6 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "எனக்குக் குறித்த நேரம் இன்னும் வரவில்லை. உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
யோவான் 7 : 7 (RCTA)
உலகம் உங்களை வெறுக்கமுடியாது, என்னையோ வெறுக்கிறது. ஏனெனில், அதனுடைய செயல்கள் தீயவை என்பதற்கு நான் சாட்சியாய் நிற்கிறேன்.
யோவான் 7 : 8 (RCTA)
இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை" என்றார்.
யோவான் 7 : 9 (RCTA)
இப்படிச் சொல்லிக் கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
யோவான் 7 : 10 (RCTA)
அவருடைய சகோதரர் திருவிழாவுக்குப் போனபின், அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாகச் சென்றார்.
யோவான் 7 : 11 (RCTA)
திருவிழாவின்போது யூதர், "அவர் எங்கே ?" என்று அவரைத் தேடினர்.
யோவான் 7 : 12 (RCTA)
சிலர், "அவர் நல்லவர்" என்றனர். சிலரோ, "இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்" என்றனர். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இப்படி அவரைப்பற்றி முணுமுணுவென்று பேசிக்கொண்டனர்.
யோவான் 7 : 13 (RCTA)
யூதர்களுக்கு அஞ்சி அவரைப்பற்றி எவனும் வெளிப்படையாகப் பேசவில்லை.
யோவான் 7 : 14 (RCTA)
பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார்.
யோவான் 7 : 15 (RCTA)
அதைக் கேட்ட யூதர்கள், "யாரிடமும் பாடம் கேட்காத இவனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது ?" என்று வியந்தார்கள்.
யோவான் 7 : 16 (RCTA)
இயேசுவோ, "என் போதனை என்னுடையதன்று, என்னை அனுப்பினவருடையதே.
யோவான் 7 : 17 (RCTA)
அவருடைய விருப்பத்தின்படி நடக்க விரும்புகிறவன் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா, நானாகவே இதைச் சொல்லுகிறேனா என்பதை அறிந்துகொள்வான்.
யோவான் 7 : 18 (RCTA)
தானாகவே பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான். தன்னை அனுப்பினவருடைய மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவன்; அவனிடத்தில் அநீதியில்லை.
யோவான் 7 : 19 (RCTA)
மோயீசனிடமிருந்து வந்த திருச்சட்டம் உங்களுக்கில்லையா ? இருப்பினும், உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை!
யோவான் 7 : 20 (RCTA)
"நீங்கள் என்னைக் கொல்லத் தேடுவானேன் ?" என்றார். அதற்கு மக்கள், "உனக்குப் பேய்பிடித்துவிட்டதா! எவன் உன்னைக் கொல்லத்தேடுகிறான் ?" என்றனர்.
யோவான் 7 : 21 (RCTA)
அதற்கு இயேசு மறுமொழியாக, "ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலுக்காக நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
யோவான் 7 : 22 (RCTA)
மோயீசன் உங்களுக்கு விருத்தசேதனக் கட்டளை தந்தாரே. - உண்மையில், அதைத் தந்தவர் மோயீசன் அல்லர்; அது நம் முன்னோர் காலத்திலிருந்தே உள்ளது. - அந்த விருத்தசேதனத்தை நீங்கள் ஓய்வுநாளில்கூடச் செய்கிறதில்லையா ?
யோவான் 7 : 23 (RCTA)
மோயீசன் தந்த அச்சட்டத்தை மீறாதிருக்கும்படி ஓய்வுநாளிலும் நீங்கள் விருத்தசேதனம் செய்திருக்கிறீர்களென்றால், அதே ஓய்வு நாளில் நான் முழு மனிதனையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் நீங்கள் கோபம் கொள்வதேன் ?
யோவான் 7 : 24 (RCTA)
வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பிடாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பிடுங்கள்" என்றார்.
யோவான் 7 : 25 (RCTA)
யெருசலேம் நகரத்தார் சிலர், "இவரையன்றோ கொல்லத் தேடுகின்றனர் ?
யோவான் 7 : 26 (RCTA)
இதோ! இவர் வெளிப்படையாய்ப் பேசுகிறார். யாரும் ஒன்றும் சொல்லக் காணோமே! இவர் மெசியாவென்று தலைவர்கள் உண்மையிலே அறிந்துகொண்டார்களோ ?
யோவான் 7 : 27 (RCTA)
மெசியா தோன்றும்பொழுதோ, அவர் எங்கிருந்து வருவார் என்பது ஒருவனுக்கும் தெரியாது. ஆனால், இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்றனர்.
யோவான் 7 : 28 (RCTA)
ஆகவே, இயேசு கோயிலிலே போதிக்கையில் உரக்கச் சொன்னதாவது: "ஆம், ஆம், என்னை அறிவீர்கள்தான். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் அறிவீர்கள். ஆயினும், நானாகவே வரவில்லை: என்னை அனுப்பினவரோ உண்மையுள்ளவர். நீங்கள் அவரை அறியவில்லை.
யோவான் 7 : 29 (RCTA)
நானோ அவரை அறிவேன். ஏனெனில், நான் அவரிடமிருந்து வருகிறேன்; என்னை அனுப்பியவரும் அவரே."
யோவான் 7 : 30 (RCTA)
இதைக் கேட்டு, யூதர்கள் அவரைப் பிடிக்க நினைத்தனர். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைத் தொடவில்லை.
யோவான் 7 : 31 (RCTA)
கூட்டத்தில் பலர், "மெசியா வரும்பொழுது இவர் செய்வதைவிட அதிக அருங்குறிகளைச் செய்வாரா ?" என்று சொல்லிக்கொண்டு, அவரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 7 : 32 (RCTA)
அவரைப்பற்றி மக்கள் இவ்வாறு முணுமுணுத்துப் பேசுவதைப் பரிசேயர்கள் கேள்வியுற்றனர். ஆகையால் அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடிக்கக் காவலர்களை அனுப்பினர்.
யோவான் 7 : 33 (RCTA)
இயேசுவோ: "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின், என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
யோவான் 7 : 34 (RCTA)
என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நானிருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது" என்றார்.
யோவான் 7 : 35 (RCTA)
அப்போது யூதர்கள், "நாம் அவனைக் காணமுடியாதவாறு எங்கே செல்லப்போகிறான்? கிரேக்கர்களிடையே சிதறிவாழ்வோரிடம் போய், கிரேக்கர்களுக்குப் போதிக்கப் போகிறானோ?
யோவான் 7 : 36 (RCTA)
' என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்குமிடத்திற்கு, உங்களால் வரமுடியாது ' என்று சொன்னானே; இதற்குப் பொருள் என்ன ?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
யோவான் 7 : 37 (RCTA)
திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!
யோவான் 7 : 38 (RCTA)
மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.
யோவான் 7 : 39 (RCTA)
தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார். ஆவியானவரோ இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு இன்னும் மகிமைபெறவில்லை.
யோவான் 7 : 40 (RCTA)
கூட்டத்தில் சிலர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ' உண்மையாகவே இவர்தான் வரப்போகும் இறைவாக்கினர் ' என்றனர்.
யோவான் 7 : 41 (RCTA)
சிலர், ' இவர் மெசியா ' என்றனர். வேறு சிலரோ, ' கலிலேயா நாட்டிலிருந்தா மெசியா வருவார் ?
யோவான் 7 : 42 (RCTA)
தாவீதின் மரபிலிருந்தும், தாவீது குடியிருந்த பெத்லெகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என மறைநூல் கூறவில்லையா ? ' என்றனர்.
யோவான் 7 : 43 (RCTA)
இப்படி அவரைக்குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
யோவான் 7 : 44 (RCTA)
அவர்களுள் சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், எவனும் அவரைத் தொடவில்லை.
யோவான் 7 : 45 (RCTA)
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பிய காவலர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலரிடம், "அவனை ஏன் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டனர்.
யோவான் 7 : 46 (RCTA)
காவலரோ, "எவரும் அவரைப்போல் என்றுமே பேசினதில்லை! என்றனர்.
யோவான் 7 : 47 (RCTA)
அதற்குப் பரிசேயர்கள், "நீங்களும் ஏமாந்துபோனீர்களோ ?
யோவான் 7 : 48 (RCTA)
தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை விசுவசித்தவர்கள் யாரேனும் உண்டா ?
யோவான் 7 : 49 (RCTA)
திருச்சட்டமறியாத இக்கூட்டமோ சாபத்துக்குள்ளானது" என்றார்கள்.
யோவான் 7 : 50 (RCTA)
அவர்களுள் ஒருவர் நிக்கொதேமு. - அவரே முன்னொரு நாள் இயேசுவிடம் வந்தவர். - அவர் அவர்களைப் பார்த்து,
யோவான் 7 : 51 (RCTA)
"ஒருவன் செய்கிறது இன்னதென்று முதலில் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு அறிந்துகொள்ளாமல், நம் சட்டம் அவனுக்குத் தீர்ப்பளிக்குமா ?" என்றார்.
யோவான் 7 : 52 (RCTA)
அவர்களோ அவரிடம், "நீரும் கலிலேயரோ? மறைநூலை ஆராய்ந்துபாரும். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் தோன்றுவதில்லை என்பது தெரியவரும்" என்றனர்.
யோவான் 7 : 53 (RCTA)
அனைவரும் வீடு திரும்பினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53

BG:

Opacity:

Color:


Size:


Font: