யோவான் 2 : 1 (RCTA)
மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தாள்.
யோவான் 2 : 2 (RCTA)
இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்.
யோவான் 2 : 3 (RCTA)
திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.
யோவான் 2 : 4 (RCTA)
அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.
யோவான் 2 : 5 (RCTA)
அவருடைய தாய் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.
யோவான் 2 : 6 (RCTA)
யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.
யோவான் 2 : 7 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள்.
யோவான் 2 : 8 (RCTA)
பின்பு அவர், "இப்பொழுது முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்" என்றார்.
யோவான் 2 : 9 (RCTA)
அவர்கள் அப்படியே செய்தனர். பந்தி மேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. - ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத் தெரியும். -
யோவான் 2 : 10 (RCTA)
அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின் கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே" என்றான்.
யோவான் 2 : 11 (RCTA)
இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 2 : 12 (RCTA)
இதற்குப்பின், அவரும் அவருடைய தாயும் சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர் நகூமுக்குச் சென்றனர். அங்குச் சில நாட்களே தங்கினர்.
யோவான் 2 : 13 (RCTA)
யூதர்களுடைய பாஸ்காத் திருவிழா நெருங்கியிருந்ததால் இயேசு யெருசலேமுக்குச் சென்றார்.
யோவான் 2 : 14 (RCTA)
கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.
யோவான் 2 : 15 (RCTA)
அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
யோவான் 2 : 16 (RCTA)
புறா விற்பவர்களைப் பார்த்து, "இதெல்லாம் இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்" என்றார்.
யோவான் 2 : 17 (RCTA)
"உமது இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று எழுதியுள்ளதை அவருடைய சீடர் நினைவுகூர்ந்தனர்.
யோவான் 2 : 18 (RCTA)
அப்போது யூதர், "இப்படியெல்லாம் செய்கிறீரே, இதற்கு என்ன அறிகுறி காட்டுகிறீர் ?" என்று அவரைக் கேட்டனர்.
யோவான் 2 : 19 (RCTA)
அதற்கு இயேசு, "இவ்வாலயத்தை இடித்துவிடுங்கள்; மூன்று நாளில் இதை எழுப்புவேன்" என்றார்.
யோவான் 2 : 20 (RCTA)
யூதர்களோ, "இவ்வாலயத்தைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகளாயினவே, நீ மூன்றே நாளில் எழுப்பிவிடுவாயோ ?" என்று கேட்டனர்.
யோவான் 2 : 21 (RCTA)
அவர் குறிப்பிட்டதோ அவரது உடலாகிய ஆலயத்தையே.
யோவான் 2 : 22 (RCTA)
அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தபொழுது, அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும், இயேசு கூறிய வார்த்தைகளையும் விசுவசித்தனர்.
யோவான் 2 : 23 (RCTA)
பாஸ்காத் திருவிழாவின்போது அவர் யெருசலேமிலிருக்கையில், அவர் செய்த அருங்குறிகளைக் கண்டு, பலர் அவருடைய பெயரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 2 : 24 (RCTA)
இயேசுவோ அவர்கள்பால் விசுவாசம் காட்டவில்லை. ஏனெனில், அவர் அனைவரையும் நன்கு அறிந்திருந்தார்.
யோவான் 2 : 25 (RCTA)
மனிதனைப்பற்றி எவரும் அவருக்கு எடுத்துக்கூறத் தேவையில்லை. மனித உள்ளத்திலிருப்பதை அறிந்திருந்தார்.
❮
❯