யோவான் 10 : 1 (RCTA)
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுப்பட்டிக்குள் வாயில்வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக்குதிப்பவன் திருடன், கொள்ளைக்காரன்.
யோவான் 10 : 2 (RCTA)
வாயில்வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன்;
யோவான் 10 : 3 (RCTA)
அவனுக்கே காவலன் வாயிலைத் திறந்துவிடுகிறான்; ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன. அவன் தன் சொந்த ஆடுகளைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டு வெளியில் ஓட்டுகின்றான்.
யோவான் 10 : 4 (RCTA)
தன் ஆடுகளை வெளியில் கொண்டுபோனபின் அவற்றிற்குமுன் நடந்துபோகிறான். அவனது குரல் அவற்றிற்குத் தெரியுமாதலால் ஆடுகள் அவனைப் பின்தொடர்கின்றன.
யோவான் 10 : 5 (RCTA)
அந்நியனையோ அவைபின்தொடராமல், அவனை விட்டு ஓடிப்போகும். ஏனெனில், அந்நியருடைய குரலை அவை அறிந்துகொள்வதில்லை."
யோவான் 10 : 6 (RCTA)
இதை இயேசு அவர்களுக்கு உவமையாகச் சொன்னார். சொன்னது என்னவென்று அவர்கள் கண்டுணரவில்லை.
யோவான் 10 : 7 (RCTA)
ஆதலால் இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுமந்தைக்கு வாயில் நானே.
யோவான் 10 : 8 (RCTA)
எனக்கு முன்பு வந்தவர்கள் அனைவரும் திருடர், கொள்ளைக்காரர். அவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை.
யோவான் 10 : 9 (RCTA)
நானே வாயில். என் வழியாக நுழைபவன் மீட்புப்பெறுவான். உள்ளே போவான், வெளியே வருவான், மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10 : 10 (RCTA)
திருடுவதற்கும் கொல்லுவதற்கும் அழிப்பதற்குமேயன்றி வேறெதற்கும் திருடன் வருவதில்லை. நானோ, ஆடுகள் உயிர்பெறும்படி வந்தேன்; அதை மிகுதியாய்ப் பெறும்பொருட்டே வந்தேன்.
யோவான் 10 : 11 (RCTA)
நல்ல ஆயன் நானே: நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.
யோவான் 10 : 12 (RCTA)
கூலிக்கு மேய்ப்பவன், ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஆயனாயிராததால்,
யோவான் 10 : 13 (RCTA)
ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான்; ஏனெனில், கூலியாள் கூலியாள்தான்; ஆடுகளின்மீது அவனுக்கு அக்கறையில்லை. ஓநாய் வந்து ஆடுகளை அடித்துக்கொண்டு போகிறது, மந்தையைச் சிதறடிக்கிறது.
யோவான் 10 : 14 (RCTA)
நல்ல ஆயன் நானே.
யோவான் 10 : 15 (RCTA)
தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்; அவையும் என்னை அறிகின்றன. என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்.
யோவான் 10 : 16 (RCTA)
இக்கிடையைச் சேராத வேறு ஆடுகள் எனக்கு உள்ளன. அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்கவேண்டும். அவை என் குரலுக்குச் செவிகொடுக்கும். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உண்டாகும்.
யோவான் 10 : 17 (RCTA)
என் உயிரை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி நான் அதைக் கையளிக்கிறேன்; ஆதலால் தந்தை என்னிடம் அன்புகூர்கிறார்.
யோவான் 10 : 18 (RCTA)
எனது உயிரை என்னிடமிருந்து பறிப்பவன் எவனுமில்லை; நானாகவே என் உயிரைக் கையளிக்கிறேன். உயிரைக் கையளிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு; இதுவே என் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளை."
யோவான் 10 : 19 (RCTA)
இவ்வார்த்தைகளின்பொருட்டு யூதரிடையே பிளவு உண்டாயிற்று.
யோவான் 10 : 20 (RCTA)
அவர்களுள் பலர், "இவன் பேய்பிடித்த வெறியன். இவன் சொல்வதை ஏன் கேட்கிறீர்கள் ?" என்றனர்.
யோவான் 10 : 21 (RCTA)
மற்றவர்களோ, "இவை பேய்பிடித்தவனுடைய வார்த்தைகளல்ல. குருடர்களுக்குப் பேய் பார்வை அளிக்கமுடியுமா ?" என்றனர்.
யோவான் 10 : 22 (RCTA)
யெருசலேமில் கோயில் அபிஷுகத்திருநாள் நடைபெற்றது. அப்பொழுது குளிர்காலம்.
யோவான் 10 : 23 (RCTA)
கோயிலில் சாலமோன்மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.
யோவான் 10 : 24 (RCTA)
யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "எவ்வளவு காலத்திற்கு எங்களைத் தயங்கவைப்பீர் ? நீர் மெசியாவாக இருந்தால் தெளிவாகச் சொல்லிவிடும்" என்று கேட்டனர்.
யோவான் 10 : 25 (RCTA)
அதற்கு இயேசு கூறியது: "நான் சொல்லிவிட்டேன், நீங்கள்தாம் விசுவசிக்கிறதில்லை. என் தந்தையின்பெயரால் நான் புரியும் செயல்களே எனக்குச் சாட்சியம்.
யோவான் 10 : 26 (RCTA)
ஆனால், நீங்கள் என் ஆடுகளைச் சேர்ந்தவர்களாக இராததால், விசுவசிக்கிறதில்லை.
யோவான் 10 : 27 (RCTA)
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன; நானும் அவற்றை அறிவேன். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
யோவான் 10 : 28 (RCTA)
நான் அவற்றிற்கு முடிவில்லாவாழ்வு அளிக்கிறேன்; அவை என்றும் அழியா. எவனும் என் கையிலிருந்து அவற்றைக் கவர்ந்துகொள்வதில்லை.
யோவான் 10 : 29 (RCTA)
அவற்றை எனக்களித்த என் தந்தை அனைவரிலும் பெரியவர்; என் தந்தையின் கையிலிருந்து எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது.
யோவான் 10 : 30 (RCTA)
நானும் தந்தையும் ஒன்றே."
யோவான் 10 : 31 (RCTA)
இதைக் கேட்ட யூதர் அவரைக் கல்லால் எறியும்படி கல் எடுத்தனர்.
யோவான் 10 : 32 (RCTA)
இயேசுவோ, "தந்தையின் ஆற்றலால் மேலான செயல்கள் பல உங்களுக்குச் செய்துகாட்டியிருக்கிறேன். அவற்றில் எச்செயலுக்காக என்னைக் கல்லால் எறியப்போகிறீர்கள் ?" என்று கேட்டார்.
யோவான் 10 : 33 (RCTA)
யூதர்கள் மறுமொழியாக, "மேலான செயல்களுக்காக நாங்கள் உன்னைக் கல்லால் எறியவில்லை. தெய்வ நிந்தனை செய்தற்காகவே அப்படிச் செய்கிறோம். ஏனெனில், நீ மனிதனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக் கொள்கின்றாய்" என்றார்கள்.
யோவான் 10 : 34 (RCTA)
அதற்கு இயேசு கூறியது: " ' நீங்கள் தேவர்கள் என நான் கூறினேன் ' என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளதன்றோ ?
யோவான் 10 : 35 (RCTA)
எனவே, கடவுளின் வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது. மறைநூலோ ஒழிந்துபோக முடியாது.
யோவான் 10 : 36 (RCTA)
அவ்வாறிருக்க, தந்தையால் அர்ச்சிக்கப்பெற்று உலகிற்கு அனுப்பப்பட்ட நான், என்னைக் ' கடவுளின் மகன் ' என்று சொன்னதற்காக, ' தெய்வ நிந்தனை செய்கிறாய் ' என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் ?
யோவான் 10 : 37 (RCTA)
நான் என் தந்தையின் செயல்களைச் செய்யாவிடில், நீங்கள் என்னை விசுவசிக்கவேண்டாம்.
யோவான் 10 : 38 (RCTA)
ஆனால், நான் அவற்றைச் செய்தால் என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்; இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், அவ்வறிவில் நிலைகொள்வீர்கள்."
யோவான் 10 : 39 (RCTA)
இதைக் கேட்டு அவர்கள் அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள். அவரோ அவர்கள் கையிலிருந்து தப்பிச்சென்றார்.
யோவான் 10 : 40 (RCTA)
இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து, அருளப்பர் முதலில் ஞானஸ்நானம் கொடுத்துவந்த இடத்திற்குச் சென்றார்.
யோவான் 10 : 41 (RCTA)
அவர் அங்குத் தங்கியிருந்தபோது, பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், "அருளப்பர் ஓர் அருங்குறியும் செய்யவில்லை; ஆனால் அருளப்பர் இவரைப்பற்றிக் கூறியதெல்லாம் மெய்யாயிற்று" என்று பேசிக்கொண்டார்கள்.
யோவான் 10 : 42 (RCTA)
அங்கே பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42

BG:

Opacity:

Color:


Size:


Font: