யோவான் 1 : 1 (RCTA)
ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
யோவான் 1 : 2 (RCTA)
அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.
யோவான் 1 : 3 (RCTA)
அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின; உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை.
யோவான் 1 : 4 (RCTA)
அவருள் உயிர் இருந்தது; அவ்வுயிரே மனிதருக்கு ஒளி.
யோவான் 1 : 5 (RCTA)
அவ்வொளி இருளில் ஒளிர்ந்தது; இருளோ அதை மேற்கொள்ளவில்லை.
யோவான் 1 : 6 (RCTA)
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் அருளப்பர்.
யோவான் 1 : 7 (RCTA)
அனைவரும் தம்வழியாக விசுவசிக்கும்படி, ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிப்பதற்கு அவர் சாட்சியாக வந்தார்.
யோவான் 1 : 8 (RCTA)
அவர் ஒளியல்லர்; ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிக்க வந்தவரே.
யோவான் 1 : 9 (RCTA)
வார்த்தை உண்மையான ஒளி. ஒவ்வொருவனையும் ஒளிர்விக்கும் அவ்வொளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
யோவான் 1 : 10 (RCTA)
வார்த்தை உலகில் இருந்தார்; அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது; உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.
யோவான் 1 : 11 (RCTA)
தமக்குரிய இடத்திற்கு வந்தார்; அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1 : 12 (RCTA)
ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.
யோவான் 1 : 13 (RCTA)
இவர்கள் இரத்தத்தினாலோ உடல் ஆசையினாலோ ஆண்மகன் கொள்ளும் விருப்பத்தினாலோ பிறவாமல், கடவுளாலேயே பிறந்தவர்கள்.
யோவான் 1 : 14 (RCTA)
வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சிமை ஒரேபேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. ஆகவே அவர் அருளும் உண்மையும் நிறைந்து விளங்கினார்.
யோவான் 1 : 15 (RCTA)
அருளப்பர் அவரைக்குறித்துச் சான்றாக, "எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் முன்னிடம் பெற்றார்; நான் சொன்னது இவரைப்பற்றியே ஏனெனில், எனக்குமுன்பு இருந்தார்." என உரக்கக் கூவினார்.
யோவான் 1 : 16 (RCTA)
அவருடைய நிறைவிலிருந்து நாம் அனைவரும் அருளுக்குமேல் அருளைப் பெற்றுள்ளோம்.
யோவான் 1 : 17 (RCTA)
ஏனெனில், திருச்சட்டம் மோயீசன்வழியாக அளிக்கப்பெற்றது; ஆனால், அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்துவழியாக வந்தன.
யோவான் 1 : 18 (RCTA)
யாரும் கடவுளை என்றுமே கண்டதில்லை; தந்தையின் அணைப்பிலுள்ள ஒரேபேறானவர்தாம் அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 1 : 19 (RCTA)
யெருசலேமிலிருந்து யூதர்கள் குருக்களையும் லேவியரையும் அருளப்பரிடம் அனுப்பியபோது, அவர் கூறிய சான்றாவது: "நீர் யார் ?" என்று அவர்கள் கேட்க,
யோவான் 1 : 20 (RCTA)
அவர், "நான் மெசியா அல்லேன்" என்று ஒப்புக்கொண்டார்; மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
யோவான் 1 : 21 (RCTA)
"பின் என்ன ? நீர் எலியாசோ ?" என்று அவரைக் கேட்க, "நானல்லேன்" என்றார். "நீர் இறைவாக்கினரோ ?" என, "அல்லேன்" என்றார்.
யோவான் 1 : 22 (RCTA)
"எங்களை அனுப்பினவர்களுக்கு மறுமொழி அளிக்கவேண்டுமே; உம்மைப்பற்றி என்ன சொல்லுகிறீர் ? நீர் யார் ?" என்று அவரை வினவினர்.
யோவான் 1 : 23 (RCTA)
"இறைவாக்கினரான இசையாஸ் கூறியபடி: ' ஆண்டவருடைய வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று பாலைவனத்தில் உண்டாகும் கூக்குரல் ' நான்" என்றார்.
யோவான் 1 : 24 (RCTA)
அனுப்பப்பட்டவர் பரிசேயர்.
யோவான் 1 : 25 (RCTA)
அவர்கள், "நீர் மெசியாவோ எலியாசோ இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் ?" என்று அவரைக் கேட்டார்கள்.
யோவான் 1 : 26 (RCTA)
அதற்கு அருளப்பர், "நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.
யோவான் 1 : 27 (RCTA)
அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்" என்றார்.
யோவான் 1 : 28 (RCTA)
இது யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தது. அங்கே அருளப்பர் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.
யோவான் 1 : 29 (RCTA)
மறுநாள், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட அருளப்பர், "இதோ! கடவுளுடைய செம்மறி; இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.
யோவான் 1 : 30 (RCTA)
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் என்னிலும் முன்னிடம் பெற்றவர்; என்று நான் சொன்னது இவரைப்பற்றியே: ஏனெனில், அவர் எனக்குமுன்பே இருந்தார்.
யோவான் 1 : 31 (RCTA)
நானும் இவரை அறியாதிருந்தேன். ஆயினும் இவர் இஸ்ராயேலுக்கு வெளிப்படும்பொருட்டே நான் நீரால் ஞானஸ்நானம் கொடுத்துவந்தேன்" என்றார்.
யோவான் 1 : 32 (RCTA)
மேலும், அருளப்பர் சாட்சியம் கூறியதாவது: "ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்.
யோவான் 1 : 33 (RCTA)
நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், 'ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்' என்றார்.
யோவான் 1 : 34 (RCTA)
நான் கண்டேன். இவரே கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறுகின்றேன்."
யோவான் 1 : 35 (RCTA)
மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,
யோவான் 1 : 36 (RCTA)
இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.
யோவான் 1 : 37 (RCTA)
சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
யோவான் 1 : 38 (RCTA)
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, "என்ன வேண்டும் ?" என்று கேட்டார். அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர். - ராபி என்றால் போதகர் என்று பொருள்படும். - "வந்து பாருங்கள்" என்றார்.
யோவான் 1 : 39 (RCTA)
அவர்கள் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்று அவரோடு தங்கினார்கள். அப்பொழுது பிற்பகல் ஏறக்குறைய நான்கு மணி.
யோவான் 1 : 40 (RCTA)
அருளப்பர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் பெலவேந்திரர் ஒருவர். அவர் சீமோன் இராயப்பரின் சகோதரர்.
யோவான் 1 : 41 (RCTA)
அவர் முதலில் தம் சகோதரராகிய சீமோனைக் கண்டுபிடித்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். - மெசியா என்பதற்கு ' அபிஷுகம் செய்யப்பட்டவர் ' என்பது பொருள்.
யோவான் 1 : 42 (RCTA)
- பின்பு அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார். இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.
யோவான் 1 : 43 (RCTA)
மறுநாள், இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். பிலிப்புவைக் கண்டு, "என்னைப் பின்செல்" என்றார்.
யோவான் 1 : 44 (RCTA)
பிலிப்பு பெத்சாயிதா ஊரினர். அதுவே பெலவேந்திரர், இராயப்பர் இவர்களுடைய ஊர்.
யோவான் 1 : 45 (RCTA)
பிலிப்பு நத்தனயேலைக் கண்டு, "இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலிலே மோயீசனும் யாரைக்குறித்து எழுதினார்களோ அவரைக் கண்டோம். அவர் நாசரேத்தூர் சூசையின் மகன் இயேசு" என்றார்.
யோவான் 1 : 46 (RCTA)
அதற்கு நத்தனயேல், "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.
யோவான் 1 : 47 (RCTA)
நத்தனயேல் தம்மிடம் வருவதைக் கண்டு இயேசு அவரைப்பற்றி, "இதோ! உண்மையான இஸ்ராயேலன். இவன் கபடற்றவன்" என்றார்.
யோவான் 1 : 48 (RCTA)
நத்தனயேல் அவரிடம், "எவ்வாறு என்னை அறிந்தீர் ?" என்று கேட்க, இயேசு அவரைப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைப்பதற்குமுன் நீ அத்திமரத்தின்கீழ் இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்" என்றார்.
யோவான் 1 : 49 (RCTA)
நத்தனயேல் அவரிடம், "ராபி, நீர் கடவுளின் மகன், நீரே இஸ்ராயேலின் அரசர்" என்று சொன்னார்.
யோவான் 1 : 50 (RCTA)
இயேசுவோ அவரை நோக்கி, "உன்னை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதாலா நீ விசுவசிக்கிறாய் ? இதிலும் பெரியவற்றைக் காண்பாய்" என்றுரைத்தார்.
யோவான் 1 : 51 (RCTA)
தொடர்ந்து, "வானம் திறந்திருப்பதையும், கடவுளுடைய தூதர்கள் மனுமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என்று உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51

BG:

Opacity:

Color:


Size:


Font: