யோவேல் 3 : 1 (RCTA)
இதோ, அந்நாட்களில் யூதாவையும் யெருசலேமையும் துன்ப நிலையிலிருந்து முன் போல நன்னிலைக்கு நாம் கொணரும் போது,
யோவேல் 3 : 2 (RCTA)
புறவினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசப்பாத் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவோம்; நம் மக்களும் உரிமைச் சொத்துமான இஸ்ராயேலை முன்னிட்டு, அங்கே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவோம்; ஏனெனில் அவர்கள் நம் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்து, நமக்குரிய நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டனர்;
யோவேல் 3 : 3 (RCTA)
மேலும் நம் மக்கள்மேல் சீட்டுப்போட்டார்கள், சிறுவர்களை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள், சிறுமிகளை மதுவுக்கு விலையாய்க் கொடுத்து, வாங்கிக் குடித்தனர்.
யோவேல் 3 : 4 (RCTA)
தீர், சீதோன் நகரங்களே, பிலிஸ்தியா நாட்டு எல்லாப் பகுதிகளே, நம்மோடு உங்களுக்கு என்ன? நீங்கள் நம்மைப் பழிவாங்குகிறீர்களோ? அப்படி நீங்கள் பழிவாங்கினால் விரைவில் காலம் தாழ்த்தாமல், பழிக்குப் பழி உங்கள் தலை மேலேயே வாங்குவோம்.
யோவேல் 3 : 5 (RCTA)
நீங்கள் நம் வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டீர்கள், விலையுயர்ந்த பொருட்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டு போனீர்கள்.
யோவேல் 3 : 6 (RCTA)
யூதாவின் மக்களையும் யெருசலேம் மக்களையும் கிரேக்க மக்களிடம் விலைக்கு விற்றீர்கள்; இவ்வாறு அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் கொண்டு போகச் செய்து விட்டீர்கள்.
யோவேல் 3 : 7 (RCTA)
ஆனால் நீங்கள் அவர்களை விற்ற நாடுகளிலிருந்து இப்பொழுதே அவர்களைக் கிளம்பி வரச்செய்வோம்; உங்கள் கொடுமை உங்கள் தலை மேலேயே விழச்செய்வோம்.
யோவேல் 3 : 8 (RCTA)
உங்கள் புதல்வர் புதல்வியரை நாம் யூதாவின் மக்களிடம் விற்றுப் போடுவோம், இவர்களோ அவர்களைத் தொலை நாட்டு மக்களான சாபேர்க்கு விற்பர்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியுள்ளார்."
யோவேல் 3 : 9 (RCTA)
புறவினத்தார் நடுவில் இதை முழங்குங்கள்; பரிசுத்தப் போருக்குப் புறப்படுங்கள், வலிமை மிக்க வீரர்களைக் கிளப்புங்கள்; போர்த்திறம் வாய்ந்த அனைவரும் திரண்டு வரட்டும், வந்து போருக்குக் கிளம்பட்டும்.
யோவேல் 3 : 10 (RCTA)
கலப்பைக் கொழுவைப் போர் வாளாக அடித்துக் கொள்ளுங்கள், அரிவாள்களைக் கொண்டு ஈட்டிகள் செய்து கொள்ளுங்கள்; வலுவற்றவனும், "நானொரு போர்வீரன்" என்று சொல்லிக் கொள்ளட்டும்.
யோவேல் 3 : 11 (RCTA)
சுற்றுப்புறத்திலுள்ள மக்களினங்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள், வந்து அங்கே ஒன்றுகூடுங்கள். (ஆண்டவரே உம் படைகளை அனுப்பியருளும்!)
யோவேல் 3 : 12 (RCTA)
மக்களினங்கள் யாவும் கிளம்பி வரட்டும், வந்து யோசப்பாத் பள்ளத்தாக்கில் சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து மக்களினங்கள் அனைத்தையும் தீர்ப்பிட நாம் அங்கே அமர்ந்திருப்போம்.
யோவேல் 3 : 13 (RCTA)
அரிவாளை எடுத்து அறுங்கள், விளைச்சல் முற்றிவிட்டது; வந்து மிதியுங்கள், இரசம் பிழியும் ஆலை நிறைந்துள்ளது; திராட்சை இரசத் தொட்டிகள் பொங்கிவழிகின்றன, அவர்கள் செய்த தீமை மிகுந்து போயிற்று.
யோவேல் 3 : 14 (RCTA)
மக்களினங்கள், மக்கட் கூட்டங்கள் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் நிறைந்துள்ளன; ஏனெனில் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது.
யோவேல் 3 : 15 (RCTA)
கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன, விண்மீன்கள் ஒளிமங்கி விடுகின்றன.
யோவேல் 3 : 16 (RCTA)
சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமில் தமது குரலையெழுப்புகிறார், விண்ணும் மண்ணும் நடுங்குகின்றன; ஆனால் ஆண்டவர் தம் மக்களுக்குப் புகலிடம், இஸ்ராயேல் மக்களுக்குக் காவலரண்.
யோவேல் 3 : 17 (RCTA)
அப்போது, நமது பரிசுத்த மலையான சீயோனில் குடிகொண்டுள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்று அறிவீர்கள்; யெருசலேம் நகரம் பரிசுத்த இடமாயிருக்கும், அந்நியர் அதன் வழியாய் ஒரு போதும் செல்ல மாட்டார்கள்.
யோவேல் 3 : 18 (RCTA)
அந்நாளில் - மலைகள் இனிமையான இரசம் சிந்தும், குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் அருவிகளிலெல்லாம் நீரோடும், ஆண்டவரின் கோயிலிலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும், சித்தீம் என்னும் பள்ளத்தாக்கில் பாயும்.
யோவேல் 3 : 19 (RCTA)
எகிப்து நாடு பாழாகும், இதுமேயா பாலைநிலமாகி விடும்; ஏனெனில் யூதாவின் மக்களை அநியாயமாய்த் துன்புறுத்தின, தங்கள் நாட்டில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தின.
யோவேல் 3 : 20 (RCTA)
யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாகும், யெருசலேமிலும் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் வாழ்வர்.
யோவேல் 3 : 21 (RCTA)
அவர்கள் இரத்தத்திற்கு நாம் பழிவாங்குவோம், குற்றவாளிகளை நாம் தண்டியாமல் விடோம், ஆண்டவர் சீயோனில் குடிகொண்டிருப்பார்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21