எரேமியா 8 : 1 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: அக்காலத்தில் யூதாவின் மன்னர்களுடைய எலும்புகளும், அர்ச்சகர்களுடைய எலும்புகளும், இறைவாக்கினர்களின் எலும்புகளும், யெருசலேமில் வசித்தவர்களின் எலும்புகளும் கல்லறைகளினின்று வெளியே எறியப்படும்;
எரேமியா 8 : 2 (RCTA)
தாங்கள் நேசித்து, சேவித்துப் பின்பற்றி, அறிவுரை தேடி வணங்கிய சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் முன்னிலையில் அவர்களுடைய எலும்புகள் எறியப்பட்டு உலரும்; யாரும் அவற்றைச் சேர்த்துத் திரும்பப் புதைக்க மாட்டார்கள்; அவை தரையில் குப்பை போலக் கிடக்கும்.
எரேமியா 8 : 3 (RCTA)
மிகவும் தீயதான இந்தத் தலைமுறையில் எஞ்சியிருப்பவர்கள், மனிதர் நடமாட்டமில்லாத ஒதுக்கிடங்களில் நம்மால் தள்ளப்பட்டுக் கிடக்கும் போது, வாழ்வை விடச் சாவே மேல் என்று நினைப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 8 : 4 (RCTA)
"நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இடறி விழுந்தவன் திரும்ப எழுந்திருக்கிறதில்லையா? வழி தப்பினவன் திரும்ப ஊர் வந்து சேர்வதில்லையா?
எரேமியா 8 : 5 (RCTA)
ஏன் இந்த யெருசலேம் மக்கள் மட்டும் இவ்வாறு அருவருப்போடு நம்மை விட்டு அகன்று நிற்கின்றனர்? பொய்யைக் கடைபிடித்தார்கள்; ஆதலால், நம்மிடம் திரும்பி வர அவர்களுக்கு விருப்பமில்லை.
எரேமியா 8 : 6 (RCTA)
நான் உற்று நோக்கினேன், கவனித்துக் கேட்டேன்; நன்றாய்ப் பேசுபவர் ஒருவருமில்லை; 'நான் என்ன செய்தேன்?' என்று சொல்லுகிறார்களேயன்றி, தன் குற்றத்திற்காக மனம் வருந்துபவர் யாருமில்லை; போர்க்களத்தில் தலைதெறிக்க ஓடும் குதிரையைப் போலத் தங்கள் பாவ நெறியையே பின்பற்றுகிறார்கள்.
எரேமியா 8 : 7 (RCTA)
வானத்தில் உள்ள கொக்கு தன் நேரத்தை அறிகிறது; புறாவும் தகைவிலானும் நாரையும் தங்கள் வருகையின் காலத்தை அறிந்துள்ளன; ஆனால் நம் மக்கள் ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
எரேமியா 8 : 8 (RCTA)
"நாங்கள் ஞானிகள்; ஆண்டவரின் திருச்சட்டம் எங்களோடு இருக்கிறது என்று நீங்கள் எவ்வாறு சொல்லத் துணிகிறீர்கள்? மறை நூல் அறிஞர்களின் போலி எழுத்தாணி பொய்களை அல்லவா எழுதிற்று?
எரேமியா 8 : 9 (RCTA)
ஞானிகள் வெட்கி வெருண்டு போவார்கள்; திகைப்புக்குள்ளாகி அகப்படுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; அவர்களுக்கு ஞானமென்பது கொஞ்சமுமில்லை.
எரேமியா 8 : 10 (RCTA)
"ஆதலால் நாம் அவர்களுடைய மனைவியரை அந்நியர்க்குக் கையளிப்போம்; அவர்களுடைய கழனிகளை வேற்றினத்தார்க்கு உரிமையாகக் கொடுப்போம்; ஏனெனில், சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரை அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள்.
எரேமியா 8 : 11 (RCTA)
சமாதானம் என்பதே இல்லாத போது, சமாதானம், சமாதானம் என்று சொல்லி, நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
எரேமியா 8 : 12 (RCTA)
அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா? இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை; வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது; ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள்; அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 8 : 13 (RCTA)
"ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களை ஒருமிக்கச் சேர்க்கும் போது, திராட்சைக் கொடிகளில் பழங்கள் இருக்கமாட்டா; அத்தி மரங்களில் கனிகள் கிடைக்கமாட்டா; இலைகள் உதிர்ந்து போம்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவை, அவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்விடும்."
எரேமியா 8 : 14 (RCTA)
அவர்கள்: "நாம் இங்கு உட்கார்ந்திருப்பானேன்? வாருங்கள், கோட்டைகள் அமைந்த நகருக்குப் போவோம்; அங்கு நாம் அழிந்து போவோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அழியும்படி விட்டார், நஞ்சு கலந்த நீரைக் குடிக்கத் தந்தார்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்தோம்.
எரேமியா 8 : 15 (RCTA)
நாம் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்; அதனால் நன்மையொன்றும் விளையவில்லை; நலம் வரும் என்று காத்திருந்தோம்; பதிலுக்குக் திகிலே வந்து நேருகின்றது" என்கிறார்கள்.
எரேமியா 8 : 16 (RCTA)
அதற்கு ஆண்டவர் கூறுகிறார்: "தாண் நகர்ப் பக்கத்திலிருந்து குதிரைகளின் கனைப்பு கேட்கின்றது; போர்க் குதிரைகளின் பேரொலியால் நாடெல்லாம் நடுங்குகின்றது; அவர்கள் வந்து, நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும், நகரத்தையும் அதன் குடிகளையும் விழுங்குவார்கள்.
எரேமியா 8 : 17 (RCTA)
இதோ, உங்களுக்கு எதிராய்ப் பாம்புகளையும் நாகங்களையும் அனுப்புவோம்; அவை எவ்வகை மந்திரத்துக்கும் தந்திரத்துக்கும் மயங்கா; உங்களைக் கண்டிப்பாய்க் கடிக்கும்."
எரேமியா 8 : 18 (RCTA)
உன் துயரத்திற்கு மேற்பட்ட துயரமுண்டோ? என் மனம் மெலிந்து வாடுகின்றதே.
எரேமியா 8 : 19 (RCTA)
எனது இனத்தாரின் அழுகையும் கூக்குரலும் நாட்டின் ஒரு முனை முதல் மறு முனை வரை கேட்கின்றதே! "சீயோனில் ஆண்டவர் இல்லையோ? அங்கே அதன் அரசன் இல்லையோ?" "செதுக்கிய படிமங்களாலும் அந்நிய சிலைகளாலும் நமக்கு அவர்கள் கோபமூட்டியது ஏன்?"
எரேமியா 8 : 20 (RCTA)
அறுவடைக் காலம் முடிந்தது; முதுவேனிற் காலமும் கடந்தது; நாம் இன்னும் விடுதலையடையவில்லை."
எரேமியா 8 : 21 (RCTA)
என் இனத்தாரின் காயத்துக்காக என் இதயம் காயப்பட்டது; நானோ அழுகிறேன்; திகிலுக்கு ஆளாகிறேன்.
எரேமியா 8 : 22 (RCTA)
கலாயாத் நாட்டில் அதற்குத் தைலம் இல்லையோ? அங்கே மருத்துவன் இல்லையோ? பின்னர், என் இனத்தார்க்கு உடல் நலம் ஏன் தரப்படவில்லை?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: