எரேமியா 6 : 1 (RCTA)
பென்யமீன் மக்களே, யெருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தேக்குவாவில் எக்காளம் ஊதுங்கள்; பெத்தகாரமில் கொடியேற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து பெருந் தீமையும் அழிவும் எழும்பி வருகின்றன.
எரேமியா 6 : 2 (RCTA)
அழகியும் செல்வமாய் வளர்ந்தவளுமான சீயோன் மகளை அழிக்கப் போகிறோம்.
எரேமியா 6 : 3 (RCTA)
ஆயர்கள் தங்கள் ஆடுகளோடு அவளுக்கு எதிராய் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் தங்கள் கூடாரங்களை அடிப்பார்கள்; தத்தம் இடத்தில் ஆடுகளை மேய்ப்பார்கள்.
எரேமியா 6 : 4 (RCTA)
அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள், பட்டப் பகலிலேயே தாக்குவோம்!" "நமக்கு ஐயோ கேடு! பொழுது சாய்ந்தது, மாலை நேரத்து நிழல் நீண்டு வளர்கின்றதே!"
எரேமியா 6 : 5 (RCTA)
எழுந்திருங்கள், இரவில் மதில்களில் ஏறுவோம், அவளுடைய அரண்மனைகளை அழித்திடுவோம்!"
எரேமியா 6 : 6 (RCTA)
ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அதன் மரங்களை வெட்டுங்கள்; யெருசலேமைச் சுற்றிக் கொத்தளம் எழுப்புங்கள்; அது தண்டிக்கப்பட வேண்டிய பட்டணம்; அதனுள் காணப்படுவது கொடுமை தவிர வேறில்லை.
எரேமியா 6 : 7 (RCTA)
மணற்கேணி தண்ணீரைச் சுரந்து கொண்டிருப்பது போல், அந்நகரம் தன்னிடம் தீமையைச் சுரந்து கொண்டிருக்கின்றது; அதில் அக்கிரமும் அழிவும் நிரம்ப உள்ளன; நோயும் காயங்களும் எப்பொழுதும் என் கண்முன் உள்ளன.
எரேமியா 6 : 8 (RCTA)
யெருசலேமே, எச்சரிக்கையாய் நடந்துகொள்; இல்லையேல், நாம் உன்னை விட்டு அகன்று போவோம்; உன்னைப் பாழாக்கி மனிதர் வாழா இடமாக்குவோம்."
எரேமியா 6 : 9 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திராட்சைக் கொடியில் தப்புப் பழம் தேடிப் பறிப்பதைப் போல், இஸ்ராயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச் சேர்."
எரேமியா 6 : 10 (RCTA)
ஆதலால் நான் யாரிடம் பேசுவேன்? எனக்கு காது கொடுக்கும்படி யாருக்கு எச்சரிக்கை தருவேன்? இதோ, அவர்கள் செவிகள் பரிசுத்தமாக்கப் படவில்லை; அவர்களோ செவிடர்களாய் இருக்கிறார்கள். இதோ, ஆண்டவரின் வாக்கியத்தை நிந்தித்தார்கள்; அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எரேமியா 6 : 11 (RCTA)
ஆகையால் ஆண்டவரின் கோபத்தால் நான் நிறைந்துள்ளேன், அதை அடக்கி அடக்கிச் சோர்ந்து போனேன். "தெருவில் இருக்கும் சிறுவர்கள் மேலும், இளைஞர்கள் கூடியுள்ள கூட்டங்கள் மேலும், அந்தக் கோபத்தைக் கொட்டு; கணவனும் மனைவியும் பிடிபடுவார்கள்; முதியோரும் வயது சென்றவர்களும் அகப்படுவார்கள்.
எரேமியா 6 : 12 (RCTA)
அவர்களுடைய வீடுகளும் நிலங்களும் மனைவியரும் அந்நியர்கள் கைப்பற்ற விடப்படுவர்; ஏனெனில், நாட்டு மக்கள் மேல் நம் கையை நீட்டப் போகிறோம்." என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 6 : 13 (RCTA)
சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரையில் அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள். சமாதானம் என்பதே இல்லாத போது,
எரேமியா 6 : 14 (RCTA)
சமாதானம், சமாதானம்' என்று சொல்லி நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
எரேமியா 6 : 15 (RCTA)
அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை. வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள், அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 6 : 16 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "வழிகளில் நின்று பாருங்கள், உங்கள் பழைய நெறிகள் எவை, எது நல்ல வழி என்று கேட்டு, அதில் செல்லுங்கள். அப்போது உங்கள் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கும். அவர்களோ, ' அவ்வழியே செல்ல மாட்டோம் ' என்கிறார்கள்.
எரேமியா 6 : 17 (RCTA)
நாம் உங்களுக்குக் காவலாளரை ஏற்படுத்தியிருக்கிறோம்; 'எக்காளம் ஊதுவதைக் கேட்கத் தயாராயிருங்கள் ' என்று சொல்ல, அவர்கள், 'நாங்கள் கேட்கமாட்டோம்' என்றார்கள்.
எரேமியா 6 : 18 (RCTA)
ஆகையால் மக்களே, மக்கள் கூட்டமே, அவர்களுக்கு என்ன நேரப் போகிறதெனப் பாருங்கள்.
எரேமியா 6 : 19 (RCTA)
பூமியே, நீயும் கவனி; இம்மக்கள் மேல் அவர்களுடைய தீய எண்ணங்களின் பயனான தீமைகளை இதோ பொழியப் போகிறோம்; ஏனெனில் அவர்கள் நம் வார்த்தைகளைப் பொருட்படுத்த வில்லை. நமது சட்டத்தைப் புறக்கணித்துத் தள்ளி விட்டார்கள்.
எரேமியா 6 : 20 (RCTA)
நீங்கள் சாபா நாட்டுத் தூபத்தையும், நறுமண நாணலையும் நமக்கு அர்ப்பணம் செய்வானேன்? உங்கள் தகனப் பலிகள் நமக்கேற்கவில்லை, உங்கள் மிருகப் பலிகளும் நமக்கு உகந்தவையல்ல.
எரேமியா 6 : 21 (RCTA)
ஆகவே ஆண்டவர் கூறுகிறார்: 'இதோ இம்மக்கள் முன் இடறு கற்களை வைத்து இடறச் செய்வோம், அவற்றின் நடுவில் பெற்றோரும் பின்ளைகளும், அயலானும் நண்பனும் ஒருமிக்க மடிவார்கள்."
எரேமியா 6 : 22 (RCTA)
ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: இதோ, வடக்கிலிருந்து ஒரு மக்களினம் வரும், பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு மக்கட் கூட்டம் எழும்பி வரும்.
எரேமியா 6 : 23 (RCTA)
அம்பும் கேடயமும் அவர்களுக்குப் படைக்கலங்கள், அவர்கள் இரக்கமற்ற கொடிய மக்கள்; அவர்களின் இரைச்சல் கடலின் இரைச்சலைப் போன்றது. சீயோன் மகளே, அவர்கள் குதிரைகள் மேல் ஏறி உனக்கெதிராய்ப் போருக்கு வருகின்றார்கள்.
எரேமியா 6 : 24 (RCTA)
அவர்கள் வரும் செய்தியை நாம் அறிந்த அளவில் நம் கைகள் விலவிலத்துப் போயின. துயரமும் கர்ப்பவதியின் வேதனையும் நம்மைச் சூழ்ந்து கொண்டன.
எரேமியா 6 : 25 (RCTA)
நீங்கள் கழனிகளைப் பார்க்கப் போக வேண்டாம், வழிகளிலும் செல்லாதீர்கள். ஏனெனில் எப்பக்கத்திலும் எதிரியின் வாள் தயாராயிருக்கிறது; சுற்றிலும் திகில் உலாவுகின்றது.
எரேமியா 6 : 26 (RCTA)
என் மக்களே, மயிராடையை அணிந்து கொள்ளுங்கள்; சாம்பலில் புரண்டு வருந்துங்கள்; இறந்த ஒரே மகனுக்காக அழுவது போலப் புலம்பி அழுங்கள். ஏனெனில் கொலைஞன் திடீரென வந்து நம்மைச் சூழ்ந்து கொள்வான்.
எரேமியா 6 : 27 (RCTA)
(எரெமியாசே), நாம் உன்னை நம் மக்களில் பலசாலியாகவும் பரிசோதிப்பவனாகவும் ஏற்படுத்தியிருக்கின்றோம்; நீ அஞ்சாது நன்றாகப் பார்த்து அறிவாய், அவர்களுடைய நெறியை ஆராயக்கடவாய்.
எரேமியா 6 : 28 (RCTA)
தலைவர்கள் எல்லாரும் முரட்டுத்தனமுள்ள கலகக்காரர்கள்; அவர்களுடைய மனம் செம்பையும் இரும்பையும் போன்றது. அவர்கள் எல்லாரும் கெட்ட வழியில் நடக்கிறார்கள்.
எரேமியா 6 : 29 (RCTA)
துருத்திகள் இடைவிடாது ஊதுகின்றனர்; காரீயம் நெருப்பினால் முற்றிலும் உருகிற்று. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பது வீண். ஏனெனில் தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
எரேமியா 6 : 30 (RCTA)
தள்ளுபடியான வெள்ளி என்று அவர்களைச் சொல்லுங்கள்; ஏனெனில் ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்தார்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30