எரேமியா 50 : 1 (RCTA)
பபிலோனைப் பற்றியும் கல்தேயரின் நாட்டைப் பற்றியும் ஆண்டவர் இறைவாக்கினரான எரெமியாஸ் வாயிலாக அறிவித்த வாக்கு:
எரேமியா 50 : 2 (RCTA)
பபிலோனின் வீழ்ச்சி- இஸ்ராயேலின் மீட்சி: "புறவினத்தார் நடுவில் பறைசாற்றுங்கள், தெரியப்படுத்துங்கள்; கொடியேற்றுங்கள், அறிவியுங்கள், மறைக்கவேண்டாம்; 'பபிலோன் பிடிப்பட்டது, பேல் அவமானம் அடைந்தான்; மெரோதாக் தோற்றுப் போனான், அதன் படிமங்கள் அவமானமுற்றன, அதன் சிலைகள் கலங்கி நின்றன ' என்று சொல்லுங்கள்,
எரேமியா 50 : 3 (RCTA)
ஏனெனில் வடக்கிலிருந்து அதற்கெதிராய் ஓர் இனம் வரும், அதன் நாட்டைப் பாழாக்கும்; அதில் யாரும் குடியிருக்க மாட்டார்கள், மனிதனும் மிருகமும் அதை விட்டு ஓடிப் போவார்கள்.
எரேமியா 50 : 4 (RCTA)
அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேல் மக்களும் யூதா மக்களும் திரும்பி வருவார்கள்; வரும் போதே அவர்கள் அழுது கொண்டு வருவர், அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரைத் தேடி வருவர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 5 (RCTA)
சீயோனுக்கு வழி கேட்பார்கள், அவர்கள் கண்ணெல்லாம் அதிலேயே இருக்கும்; 'வாருங்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாத உடன்படிக்கையால் ஆண்டவரோடு நாம் சேர்ந்துகொள்வோம்' என்பார்கள்.
எரேமியா 50 : 6 (RCTA)
நம் மக்கள் காணாமற் போன ஆடுகளாய் இருந்தார்கள்; அவர்களின் ஆயர்களே அவர்களை வழிதவறச் செய்தார்கள், மலைகளின் மேல் அலைய அடித்தார்கள், மலையிலிருந்து குன்றுக்கு இறங்கிப் போனார்கள், தங்களுடைய கிடையை முற்றிலும் மறந்து விட்டார்கள்.
எரேமியா 50 : 7 (RCTA)
கண்டவர்கள் அனைவரும் அவர்களை விழுங்கினார்கள் 'நாம் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தான் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தார்கள், உண்மையான கிடையும், தங்கள் தந்தையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய் நடந்தனர்' என்று அவர்களின் பகைவர் சொல்லிக் கொள்வார்கள்.
எரேமியா 50 : 8 (RCTA)
பபிலோனிலிருந்து தப்பி ஓடிப்போங்கள், கல்தேயர் நாட்டிலிருந்து வெளியேறுங்கள், மந்தைக்கு முன் போகும் கடாக்களைப் போலிருங்கள்.
எரேமியா 50 : 9 (RCTA)
இதோ பபிலோனுக்கு எதிராக வட நாட்டிலிருந்து, மக்களினங்கள் பலவற்றைத் தூண்டிக் கொண்டு வருவோம், அவர்கள் அதற்கு எதிராய் அணிவகுத்து நிற்பார்கள், அதுவும் அவர்களால் கைப்பற்றப்படும்; அவர்களின் அம்பு வில் வீரரின் அம்பு போன்றது, வெற்றி பெற்றாலன்றித் திரும்பி வராது.
எரேமியா 50 : 10 (RCTA)
கல்தேயர் நாடு கொள்ளையடிக்கப்படும், அதனைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 11 (RCTA)
"நம் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்காளித்தாலும், அகமகிழ்ந்தாலும், மேய்ச்சலுக்குப் போன காளை போலக் கும்மாளம் அடித்தாலும், வலிமை மிக்க வரிக்குதிரைகள் போலக் கனைத்தாலும்,
எரேமியா 50 : 12 (RCTA)
உங்கள் தாய் மிகுந்த அவமான மடைவாள், உங்களைப் பெற்றவள் வெட்கி நாணுவாள்; இதோ மக்களினத்துள் கடையளாய் இருப்பாள், பாழடைந்ததும் வறண்டதுமான பாலை நிலமாவாள்.
எரேமியா 50 : 13 (RCTA)
ஆண்டவருடைய கோபத்தின் காராணமாய் அது குடியிருப்பாரற்ற காடாகும், அதன் வழியாய்ப் போகிற எவனும் திகைப்பான், அதன் தண்டனைகளை எல்லாம் கண்டு நகைப்பான்.
எரேமியா 50 : 14 (RCTA)
அண்டை நாடுகளில் வாழும் வில் வீரர்களே, நீங்களனைவரும் பபிலோனுக்கு எதிராக அணிவகுங்கள்; அதனை அம்பால் தாக்குங்கள், அம்புமாரி பொழியுங்கள், ஏனெனில் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தது.
எரேமியா 50 : 15 (RCTA)
அதனைச் சுற்றி நாற்புறமும் வந்து ஆர்ப்பரியுங்கள், அது சரணடைந்தது; அதன் அடிப்படைகள் சரிந்தன, மதில்கள் தகர்க்கப்பட்டன; ஏனெனில், இது தான் ஆண்டவர் வழங்கும் பழி: நீங்களும் அதனைப் பழி வாங்குங்கள், அது செய்தது போல நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.
எரேமியா 50 : 16 (RCTA)
பபிலோனிலிருந்து விதைப்பவனைச் சிதறடியுங்கள், அறுவடைக் காலத்தில் எவனும் அரிவாள் பிடிக்க விடாதீர்கள்; கொடியவனின் வாளுக்கு அஞ்சி அவனவன் தன் தன் மக்களிடம் திரும்புவான், அவனவன் தன் தன் சொந்த நாட்டுக்கு ஓடிப்போவான்.
எரேமியா 50 : 17 (RCTA)
இஸ்ராயேல் சிதறிக் கிடக்கும் மந்தை, சிங்கங்கள் அதனை வெளியில் விரட்டின; முதற் கண் அசீரிய அரசன் அதனை விழுங்கினான், பின்னர் பபிலோன் மன்னன் நபுக்கோதனசார் அதன் எலும்புகளை முறித்தான்.
எரேமியா 50 : 18 (RCTA)
ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அசீரிய அரசனை நாம் தண்டித்தது போலவே, இதோ, பபிலோனிய மன்னனையும் அவன் நாட்டையும் தண்டிப்போம்.
எரேமியா 50 : 19 (RCTA)
இஸ்ராயேலையோ அதன் மேய்ச்சலுக்கு அழைத்து வருவோம், செழிப்பான கார்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீம் மலைகளிலும் கலாயாத் நாட்டிலும் அதன் விருப்பம் முற்றிலும் நிறைவுறும்.
எரேமியா 50 : 20 (RCTA)
அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேலின் அக்கிரமத்தைத் தேடிப் பார்ப்பார்கள், ஆனால் ஒன்றும் காணப்படாது; யூதாவில் பாவத்தைத் துருவித் தேடுவார்கள், ஆனால் அதிலே பாவம் இராது; ஏனெனில் நாம் யாரை எஞ்சியவர்களாய் விட்டோமே அவர்களை மன்னிப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 21 (RCTA)
மெராத்தாயீம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு, பெக்கோது குடிகளுக்கு எதிராகப் போருக்கெழு; அவர்களை வெட்டி வீழ்த்து, முற்றிலும் அழித்துவிடு, நாம் உனக்குச் சொல்வதெல்லாம் செய், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 22 (RCTA)
இதோ, நாட்டிலே அமர்க்களத்தின் ஆரவாரம்; பேரழிவின் கூக்குரல் கேட்கின்றது.
எரேமியா 50 : 23 (RCTA)
அனைத்துலகிற்கும் சம்மட்டியாய் இருந்தது நொறுங்கித் தூளானதெவ்வாறு? நாடுகளுக்குள் பபிலோன் பாலைவெளியானதெப்படி?
எரேமியா 50 : 24 (RCTA)
பபிலோனே, உனக்கு வலை வீசினோம், நீ விழுந்தாய்; உனக்குத் தெரியாமலே நீ பிடிபட்டாய்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பினாய்.
எரேமியா 50 : 25 (RCTA)
ஆண்டவர் தமது படைக்கலக் கொட்டிலைத் திறந்து, கோபத்தின் படைக்கலங்களை வெளிக் கொணர்ந்தார்; ஏனெனில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவற்றைக் கொண்டு, கல்தேயர் நாட்டில் செய்ய வேண்டிய அலுவலுண்டு.
எரேமியா 50 : 26 (RCTA)
எப்பக்கமுமிருந்து அதற்கெதிராய்ப் புறப்படுங்கள், அதன் களஞ்சியங்களைத் திறங்கள்; தானியக் குவியல் போலக் குவித்து அதை முற்றிலும் அழியுங்கள், ஒன்றையும் அதில் மீதியாக விட வேண்டாம்.
எரேமியா 50 : 27 (RCTA)
அதன் இளங்காளைகளையெல்லாம் வெட்டுங்கள், அவர்கள் கொலைக்களத்திற்குப் போகட்டும்! அவர்கள் அனைவர்க்கும் ஐயோ கேடு! அவர்கள் நாளும், தண்டனைக் காலமும் வந்து விட்டதே.
எரேமியா 50 : 28 (RCTA)
இதோ, பபிலோன் நாட்டிலிருந்து அவர்கள் தப்பிப் பிழைத்து ஓடுகிறார்கள்; திருக்கோயிலை முன்னிட்டு நம் கடவுளாகிய ஆண்டவர் வாங்கிய பழியைச் சியோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
எரேமியா 50 : 29 (RCTA)
பபிலோனின் அகந்தை: "பபிலோனுக்கு எதிராய் வர வேண்டுமென்று வில் வீரர் அனைவரையும் அழையுங்கள்; அதனைச் சுற்றிலும் வளைத்துக் கொள்ளுங்கள், எவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயலுக்கேற்றவாறு செய்யுங்கள், அது செய்த யாவற்றின்படியும் நீங்கள் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பி நின்றது, இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தது.
எரேமியா 50 : 30 (RCTA)
ஆதலால் அதன் இளைஞர்கள் பொதுவிடங்களில் மடிவார்கள், அதன் வீரர் அனைவரும் அந்நாளில் அழிவார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 31 (RCTA)
அகங்காரியே, இதோ நாம் உனக்கெதிராய் வருகிறோம், ஏனெனில் உன்னுடைய நாள் வந்து விட்டது; உன்னைத் தண்டிக்க வேண்டிய காலம் நெருங்கிற்று, என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
எரேமியா 50 : 32 (RCTA)
அகங்காரி இடறி விழுவான், அவனைத் தூக்கி விட எவனுமிரான்; அவனுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்போம், சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
எரேமியா 50 : 33 (RCTA)
ஆண்டவர்: இஸ்ராயேலின் மீட்பர்: "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், யூதா மக்கள் அவர்களோடு துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களை அடிமைப்படுத்தினவர் அனைவரும் அவர்களைத் தங்களோடு வைத்திருக்கிறார்கள், அவர்களை விட்டு விட மறுக்கிறார்கள்.
எரேமியா 50 : 34 (RCTA)
ஆனால் அவர்களுடைய மீட்பர் வல்லமை மிக்கவர், அவருடைய பெயர் சேனைகளின் ஆண்டவர் என்பதாம்; அவர்களுடைய வழக்கை அவரே நடத்துவார், அப்போது பூமிக்கு அமைதி தந்து பபிலோனின் அமைதியைக் குலைப்பார்.
எரேமியா 50 : 35 (RCTA)
கல்தேயர் மேலும், பபிலோனின் குடிமக்கள் மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 36 (RCTA)
நிமித்திகர் மேல் வாள் வரும், அவர்கள் அறிவிலிகளாகி நிற்பார்கள்; போர் வீரர்கள் மேல் வரும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்!
எரேமியா 50 : 37 (RCTA)
குதிரைகள் மேலும், தேர்ப்படை மேலும், அதன் நடுவில் இருக்கும் கூலிப்படைகள் மேலும் வாள் வரும், அவர்கள் பேடிகள் ஆவார்கள்! அதன் எல்லாச் செல்வங்கள் மேலும் வாள் வரும், அவை கொள்ளையடிக்கப்படும்!
எரேமியா 50 : 38 (RCTA)
அதன் நீர் நிலைகள் மேல் வறட்சி வரும், அவை யாவும் வற்றிப் போகும்! ஏனெனில் அது படிமங்கள் மலிந்த நாடு, அவர்களோ சிலைகளைப் பற்றிப் பெருமையாய்ப் பேசுகின்றனர்.
எரேமியா 50 : 39 (RCTA)
ஆதலால் பபிலோனில் காட்டு மிருகங்களும், அவற்றோடு கழுதைப் புலிகளும் வாழும், அங்கே தீக் கோழிகள் குடியிருக்கும்; என்றென்றைக்கும் மக்கள் அங்கே குடியறேப் போவதில்லை, எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்.
எரேமியா 50 : 40 (RCTA)
சோதோம், கொமோரா, அவற்றின் சுற்றுப் புற நகரங்களைக் கடவுள் அழித்த போது நிகழ்ந்தவாறே, அங்கே மனிதன் எவனும் குடியிருக்க மாட்டான், எவனும் தங்கியிருக்க விரும்பான், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 50 : 41 (RCTA)
"இதோ வடக்கிலிருந்து மக்களினம் ஒன்று வருகிறது, வலிமையான மக்களும், மன்னர்கள் பலரும் பூமியின் கோடியிலிருந்து எழும்பி வருகிறார்கள்.
எரேமியா 50 : 42 (RCTA)
அவர்கள் வில்லையும் ஈட்டியையும் பிடித்துள்ளார்கள், அவர்கள் கொடியர்கள், இரக்கமற்றவர்கள்; அவர்களுடைய ஆரவாரம் கடலோசை போல் இரையும்; பபிலோன் என்னும் மகளே, உனக்கெதிராய்ப் போருக்கு அணி வகுத்து குதிரைகள் மேல் ஏறிக் கொண்டு வருகிறார்கள்.
எரேமியா 50 : 43 (RCTA)
பபிலோனிய மன்னன், அவர்கள் வருகின்ற செய்தியைக் கேள்விப்பட்டான், அவனுடைய கைகள் விலவிலத்துப் போயின; நெருக்கடியும் வேதனையும் பிரசவப் பெண்ணைச் சூழ்வது போல் அவனை வளைத்துக் கொள்ளும்.
எரேமியா 50 : 44 (RCTA)
இதோ, சிங்கம் ஒன்று யோர்தான் ஆற்றையடுத்த அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வந்து துரத்துவது போல், அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம். நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடுபவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பவன் எவன்?
எரேமியா 50 : 45 (RCTA)
ஆதலால் பபிலோனுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும் கல்தேயர் நாட்டுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியளவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்;
எரேமியா 50 : 46 (RCTA)
பபிலோன் பிடிப்பட்ட ஆரவாரத்தால் நிலம் நடுங்கும், அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவில் கேட்கும்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

BG:

Opacity:

Color:


Size:


Font: