எரேமியா 48 : 1 (RCTA)
மோவாபைப் பற்றிய இறைவாக்கு. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "நாபோவுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அது பாழாக்கப்பட்டு அவமானமடைந்தது; காரியத்தாயீம் பிடிபட்டது; அரண் சூழ்ந்த நகரம் மானபங்கப்பட்டு நடுங்கிற்று;
எரேமியா 48 : 2 (RCTA)
மோவாபுக்கு இனிப் புகழில்லை; எசேபோனில் அதற்கெதிராய்த் தீமை சூழ்ந்து, 'வாருங்கள், அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்!' என்று திட்டமிட்டார்கள். மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய், வாள் உன்னைத் தொடர்ந்து வரும்;
எரேமியா 48 : 3 (RCTA)
இதோ, ஓரோனாயீம் நகரினின்று கூக்குரல் கேட்கிறது; 'கொடுமை, பேரழிவு' என்று கேட்கிறது!
எரேமியா 48 : 4 (RCTA)
மோவாபு நசுக்கப் பட்டது; சோவார் வரையில் அவர்கள் அலறல் கேட்கிறது.
எரேமியா 48 : 5 (RCTA)
லுவித்துக்கு ஏறிப் போகும் வழியில் அழுது புலம்புகின்றார்கள்; ஓரோனாயீமுக்கு இறங்கிப் போகும் வழியில் அழிவின் புலம்பலைக் கேட்டார்கள்;
எரேமியா 48 : 6 (RCTA)
தப்பியோடுங்கள், உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; பாலை நிலத்துக் காட்டுக் கழுதை போல் ஓடிப் போங்கள்.
எரேமியா 48 : 7 (RCTA)
உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய், ஆதலால் நீயும் கைப்பற்றப்படுவாய்; உன் தெய்வமான காமோசும், அதன் பூசாரிகளும், தலைவர்களும் அடிமைகளாய்க் கொண்டுப் போகப்படுவர்.
எரேமியா 48 : 8 (RCTA)
பாழாக்குவோன் ஒவ்வொரு பட்டணத்துக்கும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பாது; பள்ளத்தாக்குகள் பாழாகும், சமவெளிகள் அழிக்கப்படும்; ஆண்டவர் சொற்படியே நிறைவேறும்.
எரேமியா 48 : 9 (RCTA)
மோவாபுக்குக் கல்லறை கட்டுங்கள், அது அடியோடு பாழாய்ப் போகும்; அதனுடைய பட்டணங்கள் பாழ்வெளியாகும், குடியிருப்பார் அற்றுப் போகும்.
எரேமியா 48 : 10 (RCTA)
ஆண்டவருடைய அலுவலை அசட்டைத் தனத்துடன் செய்பவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாமல் தன் வாளை அடக்கி வைத்திருப்பவன் சபிக்கப்பட்டவன்.
எரேமியா 48 : 11 (RCTA)
மோவாபு தன் இளமை முதல் அமைதியாய் வாழ்ந்தது, தன் வண்டல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் வார்க்கப்படவில்லை; அடிமையாக நாடுகடத்தப் படவுமில்லை; ஆகவே அதன் சுவை அதைவிட்டுப் போகவில்லை, அதன் நறுமணமும் மாறவில்லை.
எரேமியா 48 : 12 (RCTA)
ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன; கவிழ்க்கிறவர்களை அனுப்புவோம்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதன் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதன் சாடிகளை உடைத்துப் போடுவார்கள்.
எரேமியா 48 : 13 (RCTA)
அப்போது, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் நம்பிக்கையாய் இருந்த பேத்தேலைக் குறித்து வெட்கத்துக்கு உள்ளானது போல, மோவாபு காமோசைக் குறித்து வெட்கத்துக்குள்ளாகும்.
எரேமியா 48 : 14 (RCTA)
நாங்கள் வீரர்கள், போரில் வல்லவர்கள்' என்று நீங்கள் சொல்வதெப்படி?
எரேமியா 48 : 15 (RCTA)
மோவாபையும் அதன் நகரங்களையும் அழிப்பவன் வந்து விட்டான், அதன் மிக சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்தை நோக்கிப் போகிறார்கள்; சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறும் வாக்கு இதுவே.
எரேமியா 48 : 16 (RCTA)
மோவாபின் அழிவு அண்மையில் இருக்கிறது, அதன் கேடு விரைந்து பறந்து வருகிறது.
எரேமியா 48 : 17 (RCTA)
அதனைச் சூழ்ந்திருப்பவர்களே, நீங்கள் அனைவரும் அதனைக் குறித்து அழுது புலம்புங்கள்; அதன் பெயரை அறிந்த அனைவரும் கூடியழுங்கள்; 'வலிமை மிக்க செங்கோல் முறிந்ததெவ்வாறு? மகிமையான கோல் உடைந்ததெப்படி?' என்று சொல்லுங்கள்.
எரேமியா 48 : 18 (RCTA)
தீபோன் என்னும் குடிமகளே! உன் மகிமையை விட்டுக் கீழிறங்கு, வறண்ட நிலத்தில் உட்கார்ந்து கொள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உனக்கெதிராய் வந்து விட்டான், உன் அரண்களைத் தகர்த்து விட்டான்.
எரேமியா 48 : 19 (RCTA)
அரோவேர் என்னும் குடிமகளே! நீ வழியருகே நின்று பார்த்துக் கொண்டிரு: ஓட்டம் பிடிக்கிறவனையும் தப்பியோடுகிறவனையும் நோக்கி, 'என்ன நடந்தது?' என்று கேள்.
எரேமியா 48 : 20 (RCTA)
மோவாபு தோல்வியுற்றதால், மானமிழந்தது! அழுது புலம்புங்கள், கூக்குரலிடுங்கள்; அர்னோனில் நின்று, 'மோவாபு பாழானது!' என்று அறிவியுங்கள்.
எரேமியா 48 : 21 (RCTA)
ஆண்டவருடைய நீதிக்கேற்ற தண்டனை சமவெளி நாட்டின் மேலும் ஏலோனின் மேலும் யாசாவின் மேலும் மேப்பாத்தின் மேலும்,
எரேமியா 48 : 22 (RCTA)
தீபோனின் மேலும் நாபோவின் மேலும் தேபிளாத்தாயிம் மேலும்,
எரேமியா 48 : 23 (RCTA)
காரியத்தாயீம் மேலும் பெட்கமுலின் மேலும் பெத்துமாவேனின் மேலும்,
எரேமியா 48 : 24 (RCTA)
கரியோத்தின் மேலும் போஸ்ராவின் மேலும், தொலைவிலும் அருகிலுமுள்ள மோவாபு நாட்டின் பட்டணங்கள் எல்லாவற்றின் மேலும் வந்து விட்டது.
எரேமியா 48 : 25 (RCTA)
இவ்வாறு, மோவாபின் கொம்பு முறிந்தது, கையும் ஒடிந்தது, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 26 (RCTA)
அவனைப் போதை ஏறி வெறி கொள்ளச் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே பெரியவனாக்கிக் கொண்டான்; தான் வாந்தி எடுத்ததில் மோவாபு புரளுவான்;
எரேமியா 48 : 27 (RCTA)
உன்னுடைய நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தலையை ஆட்டிப் பழித்தாயே, அவன் என்ன, திருடர்கள் கூட்டத்திலா இருந்தான்?
எரேமியா 48 : 28 (RCTA)
மோவாபின் குடிமக்களே, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள், பாறைகளிலே போய்க் குடியேறுங்கள்; உயர்ந்த பாறைகளின் வெடிப்பு பொந்துகளில் கூடு கட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
எரேமியா 48 : 29 (RCTA)
மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு? தன் மேட்டிமை, செருக்கு, இறுமாப்பு, உள்ளத்தின் அகந்தை இவற்றைக் கேள்விப்பட்டோம்.
எரேமியா 48 : 30 (RCTA)
அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய், அதனுடைய செயல்கள் யாவும் பொய்.
எரேமியா 48 : 31 (RCTA)
ஆதலால் மோவாபை முன்னிட்டு அலறியழுவேன், மோவாபு நாடு முழுவதையும் குறித்துப் புலம்புவேன், கிர்கேரஸ் ஊராருக்காகப் பெருமூச்சு விடுவேன்.
எரேமியா 48 : 32 (RCTA)
சபாமாவின் திராட்சைக் கொடியே, யாஜேருக்காக அழுவதை விட மிகுதியாய் உனக்காக அழுகிறேன்; உன்னில் கிளைத்த கொடிகள் கடல் கடந்து படர்ந்தன; யாஜேர் கடல் மட்டும் போய் எட்டின. பாழாக்குவோன் உன் கோடைக்கால கனிகள் மேலும், திராட்சைப் பழ அறுவடை மேலும் பாய்ந்து விட்டான்.
எரேமியா 48 : 33 (RCTA)
மோவாபு நாட்டினின்று, அக்களிப்பும் அக மகிழ்ச்சியும் அற்றுப் போயின; திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப் போயிற்று, பழமிதிப்பவன் எவனுமில்லை; மகிழ்ச்சியின் ஆரவாரமுமில்லை!
எரேமியா 48 : 34 (RCTA)
எசேபோன், எலேயாலே ஆகியவற்றின் கூக்குரல், யாஜா வரையிலும் கேட்டது; அவர்களுடைய கதறல் சேகோரிலிருந்து ஓரோனாயீம், எக்ளாத்- ஷூலீஷியா வரையில் கேட்கப்பட்டது. ஏனெனில், நேம்ரிமின் தண்ணீரும் கெட்டுப் போய் விட்டது.
எரேமியா 48 : 35 (RCTA)
மோவாபில் குன்றுகள் மேல் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுகிறவர்களை ஒழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 36 (RCTA)
ஆதலால் மோவாபுக்காகத் துயரப்பட்டு என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துக்கமான பண்பாடும்; கிர்ரேஸ் ஊராருக்காக என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துயரத்தால் விம்மிப் பாடும்; அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்கள் அழிந்தன.
எரேமியா 48 : 37 (RCTA)
அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டிருக்கும்; தாடிகள் சிரைக்கப்பட்டிருக்கும்; கைகள் கட்டப்பட்டிருக்கும்; இடையில் சாக்குத் துணிகள் உடுத்தியிருப்பர்.
எரேமியா 48 : 38 (RCTA)
மோவாபின் எல்லா வீட்டு மாடிகளிலும், அதன் தெருக்களிலும் அழுகை மயமாய் இருக்கும்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போல மோவாபை உடைத்தெறிந்தோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 39 (RCTA)
மோவாபு எவ்வாறு உடைந்து விட்டது? அவர்கள் கூக்குரலிடுகிறார்களா? மோவாபு நாணித் தலை கவிழ்ந்ததா? சுற்றிலும் இருக்கிற அனைவருடைய பழிப்புக்கும் நகைப்புக்கும் மோவாபு இலக்கானதா?"
எரேமியா 48 : 40 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஒருவன் கழுகைப் போல விரைவாய்ப் பறந்து வந்து, மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரிப்பான்;
எரேமியா 48 : 41 (RCTA)
நகரங்கள் பிடிப்பட்டன, கோட்டைகள் கைப்பற்றப்பட்டன; அந்நாளில் மோவாபு வீரர்களின் இதயம் பிரசவிக்கும் பெண்ணின் இதயத்திற்கொப்பாகும்;
எரேமியா 48 : 42 (RCTA)
மோவாபு அழிக்கப்படும், இனி ஒரு மக்களினமாய் இராது; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே உயர்த்தினான்.
எரேமியா 48 : 43 (RCTA)
மோவாபு நாட்டில் குடியிருப்பவனே, பீதியும் படுகுழியும் வலையுமே உன் முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 44 (RCTA)
பீதிக்குத் தப்புகிறவன் படுகுழியில் விழுவான், படுகுழி விட்டு மேடேறுபவன் வலையில் சிக்குவான்; ஏனெனில் அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின் மேல் வரப்பண்ணுவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 45 (RCTA)
வலைக்குத் தப்பினவர்கள் எசெபோன் நிழலில் தங்கினார்கள், ஆயினும் எசெபோனிலிருந்தும் தீ புறப்பட்டது, சேகோனிலிருந்தும் நெருப்பு கிளம்பிற்று; மோவாபின் தலையை விழுங்கிற்று, அதன் கலகக்காரரின் மண்டையைப் பொசுக்கிற்று.
எரேமியா 48 : 46 (RCTA)
மோவாபே, உனக்கு ஐயோ கேடு! காமோசின் மக்களே, சிதைந்து போனீர்கள்; ஏனெனில் உன் புதல்வர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; உன் புதல்வியர் அடிமைத்தனத்திற்குப் போனார்கள்.
எரேமியா 48 : 47 (RCTA)
ஆயினும், கடைசி நாட்களில் மோவாபை முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்." மோவாபின் மேல் வரும் நீதித் தீர்ப்பின் வாக்கு இத்துடன் முற்றிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: