எரேமியா 39 : 1 (RCTA)
யூதாவின் அரசனாகிய செதேசியாசின் ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரும், அவனுடைய எல்லாப் படைகளும் யெருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டார்கள்;
எரேமியா 39 : 2 (RCTA)
செதேசியாசின் பதினோராம் ஆண்டின் நான்காம் மாதத்தில் ஐந்தாம் நாள் பட்டணத்தின் கோட்டைக் கதவு உடைப்பட்டது;
எரேமியா 39 : 3 (RCTA)
பபிலோனிய அரசனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்து, நடுவாயிலின் அருகில் உட்கார்ந்தார்கள்; நெரேகல், செரேசெர், கெமேகார்னாயு, சார்சக்கீம், இரப்சாரேஸ், நெரேகேல், செரேசெர், இரெப்மாகு என்பவர்களும், இன்னும் பபிலோனிய அரசனின் படைத்தலைவர்கள் எல்லாரும் அங்கே உட்கார்ந்தார்கள்.
எரேமியா 39 : 4 (RCTA)
யூதாவின் அரசனான செதேசியாசும், அவனுடைய போர்வீரர் அனைவரும் அவர்களைக் கண்டு ஓட்டம் பிடித்தார்கள்; அவர்கள் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கு இடையிலிருக்கும் கதவைத் திறந்து கொண்டு இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி ஓடினார்கள்.
எரேமியா 39 : 5 (RCTA)
கல்தேயருடைய படை அவர்களைப் பின் தொடர்ந்து போய் யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; எமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளையமிறங்கியிருந்த பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் அவனைக் கொண்டு வந்தார்கள்: அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
எரேமியா 39 : 6 (RCTA)
பபிலோனிய மன்னன் செதேசியாசின் இரண்டு பிள்ளைகளையும் இராபிளாத்தாவுக்குக் கொண்டு வந்து அவர்களுடைய தந்தையின் முன்னால் அவர்களைக் கொலை செய்தான்; மேலும் பபிலோனிய அரசன் யூதாவின் பெருங்குடிமக்கள் அனைவரையும் கொன்றான்.
எரேமியா 39 : 7 (RCTA)
பிறகு செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனுக்கு விலங்குகளை மாட்டி அவனைப் பபிலோனுக்கு அனுப்பினான்.
எரேமியா 39 : 8 (RCTA)
அரசனுடைய அரண்மனையையும் குடிமக்களின் வீடுகளையும் கல்தேயர் தீ வைத்துக் கொளுத்தி, யெருசலேமின் மதில்களைத் தகர்த்து விட்டார்கள்.
எரேமியா 39 : 9 (RCTA)
சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் இன்னும் பட்டணத்தில் எஞ்சியிருந்த மக்களையும், தன்னிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த பொதுமக்களையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
எரேமியா 39 : 10 (RCTA)
ஆனால் சேனைத் தலைவனான நபுஜார்தான் என்பவன் ஏதுமற்ற ஏழை மக்கள் சிலரை யூதா நாட்டிலேயே விட்டு வைத்து, அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்துச் சென்றான்.
எரேமியா 39 : 11 (RCTA)
பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் எரெமியாசை குறித்துச் சேனைத் தலைவன் நபுஜார்தானுக்குக் கொடுத்த கட்டளை இதுவே:
எரேமியா 39 : 12 (RCTA)
நீ அவனை வருவித்துக் கண்காணித்துக் கொள். அவனுக்குத் தீங்கொன்றும் நீ செய்யக்கூடாது; ஆனால் அவன் விரும்பவுது போலவே அவனை நடத்து" என்றான்.
எரேமியா 39 : 13 (RCTA)
சேனைத் தலைவன் நபுஜார்தான் அவ்வாறே செய்தான்; அவனும் அவனோடிருந்த நபுஜேஸ்பான் என்னும் உயர் அதிகாரியும், நெரேகஸ்- செரேசெர் என்னும் முக்கிய அதிகாரியும், இன்னும் பபிலோனிய அரசனின் மற்ற தலைவர்கள் யாவரும் ஆளனுப்பி,
எரேமியா 39 : 14 (RCTA)
எரெமியாசைச் சிறைக் கூடத்தின் முற்றத்திலிருந்து விடுதலை செய்து, வீட்டுக்குக் கொண்டு போகும்படி சாவான் மகனாகிய அயிக்காமின் மகன் கொதோலியாசின் பொறுப்பில் அவரை அனுப்பினார்கள்; அவரும் மக்கள் நடுவில் வாழ்ந்து வந்தார்.
எரேமியா 39 : 15 (RCTA)
இனி எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருக்கும் போதே, ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டிருந்தது:
எரேமியா 39 : 16 (RCTA)
நீ போய் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, ' இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இந்த நகரத்திற்கு விரோதமாக நம் வார்த்தைகளை நிறைவேற்றுவோம்; நன்மையை அல்ல, தீமையையே நிறைவேற்றுவோம்; அந்நாளில் நீ இவற்றைக் காண்பாய்.
எரேமியா 39 : 17 (RCTA)
ஆனால் அந்நாளில் நாம் உன்னை மீட்போம்; நீ அஞ்சும் அந்த மனிதர்கள் கையில் உன்னை விட்டுவிட மாட்டோம், என்கிறார் ஆண்டவர்;
எரேமியா 39 : 18 (RCTA)
ஏனெனில் நாம் உன்னைத் திண்ணமாய்க் காப்பாற்றுவோம்; நீ வாளால் மடியமாட்டாய்; உன் உயிர் நலமாய் இருக்கும்; ஏனெனில் நம்மில் நம்பிக்கை வைத்திருந்தாய், என்கிறார் ஆண்டவர்' என்று அவனுக்குச் சொல்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: