யாக்கோபு 4 : 1 (RCTA)
உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்கள் உடலில் போராட்டம் விளைவிக்கும் கீழ்த்தர ஆசைகள் அல்லவா?
யாக்கோபு 4 : 2 (RCTA)
பிறர் பொருள்மீது ஆசை வைக்கிறீர்கள்; அதைப் பெறாததால், கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; ஆசைப்படுவதை அடைய முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால் தான்.
யாக்கோபு 4 : 3 (RCTA)
கேட்டாலும் ஏன் அடைவதில்லை? தீய எண்ணத்தோடு கேட்பதாலே. கிடைப்பதைக் கீழ்த்தர ஆசைகளை நிறைவேற்றுவதில் செலவழிக்கவே கேட்கிறீர்கள்.
யாக்கோபு 4 : 4 (RCTA)
விபசாரிகள் போல் வாழ்பவர்களே, உலகத்தோடு நட்பு கொள்வது, கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும், கடவுளுக்குப் பகைவனாகிறான்.
யாக்கோபு 4 : 5 (RCTA)
நம்முள் குடியிருக்கச் செய்த ஆன்மாவை இறைவன் பேராவலோடு நாடுகிறார் என மறைநூல் கூறுவது வீண் என எண்ணுகிறீர்களோ?
யாக்கோபு 4 : 6 (RCTA)
நாம் அதற்கேற்ப வாழ நமக்குத் தேவைக்கு மேலாகவே அருளையும் வழங்குகிறார்; ஆகவேதான், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்; தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ அருளை அளிக்கிறார்" என்று எழுதியுள்ளது.
யாக்கோபு 4 : 7 (RCTA)
ஆகவே கடவுளுக்குப் பணிந்து நடங்கள்.
யாக்கோபு 4 : 8 (RCTA)
அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.
யாக்கோபு 4 : 9 (RCTA)
உங்கள் இழி நிலையை உணர்ந்து புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு அழுகையாக மாறட்டும்; மகிழ்ச்சி துயரமாகட்டும்.
யாக்கோபு 4 : 10 (RCTA)
ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்: அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4 : 11 (RCTA)
சகோதரர்களே, ஒருவரைப்பற்றியொருவர் அவதூறு பேசாதீர்கள். தன் சகோதரனுக்கு எதிராக அவதூறு பேசுபவன் அல்லது தீர்ப்பிடுகிறவன் திருச்சட்டத்திற்கு எதிராகவே பேசுகிறான். அச்சட்டத்திற்கே தீர்ப்பிடுகிறான். சட்டத்திற்கு நீ தீர்ப்பிட்டால், நீ அதை நிறைவேற்றுபவன் அல்ல; தீர்ப்பிடுகிறவன் ஆகிறாய்.
யாக்கோபு 4 : 12 (RCTA)
திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பிடுகிறவரும் ஒருவரே. அவரே ஆக்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறாயின் உன் அயலானுக்குத் தீர்ப்பிட நீ யார்?
யாக்கோபு 4 : 13 (RCTA)
"இன்றோ நாளையோ அந்த நகர்க்குச் செல்வோம், அங்கே ஓராண்டு தங்கி வியாபாரம் செய்வோம்; பணம் சம்பாதிப்போம்" என்றெல்லாம் பேசுகிறீர்களே, சற்றுக் கேளுங்கள்.
யாக்கோபு 4 : 14 (RCTA)
நாளைக்கு உங்கள் வாழ்க்கை என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியாதே. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகையே நீங்கள்.
யாக்கோபு 4 : 15 (RCTA)
ஆகவே அப்படிப் பேசாமல், "ஆண்டவர்க்குத் திருவுளமானால் நாம் உயிர் வாழ்வோம், இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே சரி.
யாக்கோபு 4 : 16 (RCTA)
நீங்கள் இப்போது வீம்பு பாராட்டித் தற்பெருமை கொள்ளுகிறீர்கள்.
யாக்கோபு 4 : 17 (RCTA)
இதுபோன்ற தற்புகழ்ச்சி நல்லதன்று. ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அவனுக்கு அது பாவம்.
❮
❯