ஏசாயா 8 : 1 (RCTA)
பின்னர் ஆண்டவர் என்னைப்பார்த்து, "நீ வரைபலகை ஒன்று எடுத்து, அதில் சாதாரண எழுத்துகளில், 'மாஹெர்-ஷலால்-ஹாஷ்-பாஸ்' என எழுது" என்றார்.
ஏசாயா 8 : 2 (RCTA)
இதற்குப் பிரமாணிக்கமுள்ள சாட்சிகளாக ஊரியாஸ் என்னும் அர்ச்சகரையும், பராக்கியாஸ் என்பவனின் மகனான சக்கரியாவையும் ஏற்படுத்தினேன்.
ஏசாயா 8 : 3 (RCTA)
பின்பு நான் இறைவாக்கினளுடன் கூடினேன்; அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றாள். அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு மாஹெர்-ஷலால்-ஹாஷ் -பாஸ் எனப் பெயரிடு.
ஏசாயா 8 : 4 (RCTA)
ஏனெனில் குழந்தை, 'அப்பா, அம்மா' என்று கூப்பிடக் கற்றுக் கொள்வதற்குள் தமஸ்குவின் செல்வங்களும், சமாரியாவின் கொள்ளைப் பொருளும் அசீரிய அரசனுக்கு முன் வாரிக் கொண்டு போகப்படும்" என்று சொன்னார்.
ஏசாயா 8 : 5 (RCTA)
ஆண்டவர் மீண்டும் என்னிடத்தில் பேசினார்:
ஏசாயா 8 : 6 (RCTA)
அமைதியாக ஓடும் சிலோயே நீரை இம்மக்கள் வேண்டாமென மறுத்து விட்டு, இராசீனுக்கும் ரொமேலியின் மகனுக்கும் முன்பாக அஞ்சி நடுங்குவதால்,
ஏசாயா 8 : 7 (RCTA)
இதோ ஆண்டவர் இம் மக்களுக்கு எதிராக, ஆற்றல் மிக்க பேராற்றின் பெருவெள்ளத்தை அதாவது, அசீரியா அரசனையும் அவன் மகிமை அனைத்தையும் திரண்டுவரச் செய்திடுவார்; எல்லாக் கால்வாய்களிலும் அதன் வெள்ளம் பெருகும், கரைகள் அனைத்திலும் புரண்டு பாயும்.
ஏசாயா 8 : 8 (RCTA)
யாண்டும் ஒரே வெள்ளக் காடாய்ப் பெருகியோடி, யூதா நாட்டிலும் பாய்ந்து அதன் கழுத்தை எட்டும்; எம்மானுவேலே, உன் நாட்டின் பரப்பையெல்லாம் அது நிரப்பி நிற்கும்."
ஏசாயா 8 : 9 (RCTA)
மக்களினங்களே, அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் தோல்வியுறுவீர்கள்; தொலை நாடுகளே, நீங்களெல்லோரும் செவி சாயுங்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்;
ஏசாயா 8 : 10 (RCTA)
ஒன்றுகூடி ஆலோசனை செய்யுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராய்த் தான் போகும். நீங்கள் ஆணை பிறப்பியுங்கள், அதுவும் நிலை நிற்காது; ஏனெனில் கடவுள் நம்மோடிருக்கிறார்.
ஏசாயா 8 : 11 (RCTA)
தமது வலிமையுள்ள கையை என் மேல் வைத்து, ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை செய்தார்; இந்த மக்கள் நடக்கின்ற அந்த வழியிலேயே நானும் நடக்காதபடி எனக்குச் சொன்னார்:
ஏசாயா 8 : 12 (RCTA)
இந்த மக்கள் சதித் திட்டம் என்று சொல்வதையெல்லாம், நீங்களும் சதித் திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் அஞ்சுவதற்கு நீங்கள் அஞ்சாதீர்கள், அஞ்சி நடுக்கம் கொள்ளாதீர்கள்.
ஏசாயா 8 : 13 (RCTA)
ஆனால், சேனைகளின் ஆண்டவர் ஒருவரையே பரிசுத்தர் என்று நீங்கள் போற்ற வேண்டும்; அவரைக் கண்டே நீங்கள் அஞ்ச வேண்டும்; அவர் முன்பே நீங்கள் நடுங்க வேண்டும்.
ஏசாயா 8 : 14 (RCTA)
அவரே பரிசுத்த இடமாய் இருப்பார், இஸ்ராயேலின் இரு வீட்டாருக்கும் இடறி விடும் கல்லாகவும் தடுக்கிவிடும் பாறையாகவும் இருப்பார்; யெருசலேம் குடிகளுக்குப் பொறியாகவும் கண்ணியாகவும் இருப்பார்.
ஏசாயா 8 : 15 (RCTA)
அதன் மேல் பல பேர் இடறி வீழ்வர், வீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு அகப்பட்டுக் கொள்வர்.
ஏசாயா 8 : 16 (RCTA)
இந்த அறிக்கையைக் கட்டி வை; என் சீடர்கள் நடுவில் இந்தப் படிப்பினையை முத்திரையிட்டு வை.
ஏசாயா 8 : 17 (RCTA)
யாக்கோபின் வீட்டாருக்குத் தம் முகத்தை மறைத்துக் கொள்ளும் ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவரை நான் நம்பியிருக்கிறேன்.
ஏசாயா 8 : 18 (RCTA)
சீயோன் மலை மேல் கோயில் கொண்டுள்ள சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலில் ஏற்படுத்திய அடையாளங்களாகவும் முன்னறிகுறிகளாகவும், இதோ நானும், ஆண்டவர் எனக்கீந்த பிள்ளைகளும் இருக்கிறோம்.
ஏசாயா 8 : 19 (RCTA)
மை வித்தைக்காரரையும் முணுமுணென்று ஓதிக் குறிசொல்லும் மந்திரவாதிகளையும் குறி கேளுங்கள்" என்று உங்களிடம் அவர்கள் சொல்லுகிறார்களே, குலதெய்வத்தை ஆலோசிப்பதல்லவா மக்களுக்கு முறைமை? வாழ்வோருக்காகச் செத்தவரையல்லவா குறி கேட்பார்கள்?
ஏசாயா 8 : 20 (RCTA)
அதை விடத் திருச் சட்டத்தையும் இறைச் சான்றையும் ஆலோசியுங்கள்; அந்த வாத்த்தைகளின்படி அவர்கள் விடை கூறாவிடில், மறுநாள் ஒளியை அவர்கள் காணமாட்டார்கள்.
ஏசாயா 8 : 21 (RCTA)
பெருந்துன்பத்தோடும் பசியோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வர்; அவர்கள் பசியினால் வாடும் போது, ஆத்திரங் கொண்டு தங்கள் அரசனையும் கடவுளையும் சபிப்பார்கள்; மேலே அண்ணாந்து பார்ப்பார்கள்,
ஏசாயா 8 : 22 (RCTA)
கீழே தரையைக் குனிந்து நோக்குவார்கள், கடுந் துயரும் இருளும் மன வேதனையின் காரிருளும் புலப்படும், எங்கும் இரவே பரவியிருக்கும், மன வேதனையில் இருப்பது காரிருளில் இருப்பதன்றோ?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: