ஏசாயா 45 : 1 (RCTA)
ஆண்டவர் அபிஷுகம் செய்த சீருசுக்கு முன்பாக மக்களினங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்கள் புறங்காட்டி ஓடச் செய்யவும், அவன் முன் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவும், கோட்டை வாயில்கள் மூடப்படாதிருக்கவும், அவனுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, ஆண்டவர் அவனுக்குக் கூறுவது:
ஏசாயா 45 : 2 (RCTA)
உனக்கு முன்னால் நாம் செல்வோம், உயரமான இடங்களையெல்லாம் தாழ்த்துவோம்; செப்புக் கதவுகளை உடைத்தெறிவோம், இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்திடுவோம்.
ஏசாயா 45 : 3 (RCTA)
உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்பதை நீ அறியும்படி, மக்கள் மறைத்து வைத்துள்ள புதையல்களையும், மறைவிடத்திலிருக்கும் கருவூலங்களையும் கையளிப்போம்.
ஏசாயா 45 : 4 (RCTA)
நம் ஊழியனாகிய யாக்கோபை முன்னிட்டும், நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பொருட்டும், உன்னை நாம் பெயரிட்டு அழைத்தோம்; நம்மை நீ அறியாதவனாயிருந்தும், உனக்குச் சிறப்புப் பெயர் தந்தோம்.
ஏசாயா 45 : 5 (RCTA)
நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை; நம்மையன்றி வேறு கடவுள் கிடையாது; நம்மை நீ அறியாதவனாயிருந்தும், உனக்குச் சிறப்புப் பெயர் தருவோம்.
ஏசாயா 45 : 6 (RCTA)
கதிரவன் தோன்றும் திசையிலிருந்து மறையும் திசை வரையில் வாழ்வோர் அனைவரும், நம்மையன்றி வேறில்லையென அறியுமாறு இவ்வாறு செய்தோம்
ஏசாயா 45 : 7 (RCTA)
நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை, ஒளியை உருவாக்குகிறவரும், இருளைப் படைக்கிறவரும், வாழ்வை வழங்குகிறவரும், தாழ்வைத் தருகிறவரும் நாமே; இவற்றையெல்லாம் செய்கிற நாமே ஆண்டவர்.
ஏசாயா 45 : 8 (RCTA)
வானமே, மேலிருந்து பனிமழை பெய், மேகங்கள் நீதியைப் பொழிக! நிலம் திறக்கப்படுக! மீட்பு முளைப்பதாக! அதனோடு நீதி தளிர்ப்பதாக! ஆண்டவராகிய நாமே அதைச் செயலாற்றுகிறோம்
ஏசாயா 45 : 9 (RCTA)
தன்னை உருவாக்கியவனுடன் வாதாடுகிற மட்கலத்திற்கு ஐயோ கேடு! களிமண் குயவனை நோக்கி, 'நீ என்ன செய்கிறாய்? உன் வேலைப்பாட்டில் கைத்திறமையில்லை' என்று சொல்வதுண்டோ?
ஏசாயா 45 : 10 (RCTA)
தந்தையை நோக்கி, 'எதைப் பிறப்பிக்கிறாய்?' என்றும், தாயைப் பார்த்து, 'எதைப் பெற்றெடுக்கிறாய்?' என்றும் சொல்பவனுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 45 : 11 (RCTA)
இஸ்ராயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமான ஆண்டவர் கூறுகிறார்: நம் பிள்ளைகளைப் பற்றி நம்மைக் கேட்பதும், நம் கைவேலையைக் குறித்து நமக்குக் கட்டளையிடுவதும் உங்கள் வேலையா?
ஏசாயா 45 : 12 (RCTA)
நாமே உலகத்தை உண்டாக்கினோம், அதில் மனிதனைப் படைத்தவரும் நாமே; நம் கைகளே வானத்தை விரித்தன, அதன் படைகளுக்கெல்லாம் கட்டளை தந்தவரும் நாமே.
ஏசாயா 45 : 13 (RCTA)
வெற்றிக்கென்று சீருசை நாமே தூண்டினோம், அவன் பாதைகளையெல்லாம் சீர்ப்படுத்தினோம்; நமது திருநகரைத் திரும்பவும் அவனே கட்டுவான், மீட்புக் கிரயமோ கையூட்டோ இன்றியே நாடுகடத்தப்பட்ட நம் மக்களை விடுதலை செய்வான்" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
ஏசாயா 45 : 14 (RCTA)
இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: "எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும்; உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள்; விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, 'உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை' என்பார்கள்."
ஏசாயா 45 : 15 (RCTA)
மெய்யாகவே மறைவாயிருக்கும் கடவுள் நீரே, இஸ்ராயேலின் கடவுளாகிய மீட்பரும் நீரே;
ஏசாயா 45 : 16 (RCTA)
அதன் பகைவர்கள் யாவரும் வெட்கி நாணிப் போயினர்; சிலைகளைச் செய்தவர்கள் அனைவரும் வெட்கம் நிறைந்து வெளியேறினர்.
ஏசாயா 45 : 17 (RCTA)
முடிவில்லா மீட்பினால் இஸ்ராயேல் ஆண்டவரால் மீட்கப்பட்டது; என்றென்றைக்கும் நீங்கள் கலங்க மாட்டீர்கள், வெட்கமடையவும் மாட்டீர்கள்.
ஏசாயா 45 : 18 (RCTA)
ஏனெனில் வானத்தைப் படைத்த ஆண்டவர் கூறுகிறார்: (அவரே கடவுள், அவர் தான் பூமியை உருவாக்கினார், அதைப் படைத்து நிலை நாட்டினார்; வெறுமையாய் இருக்கும்படி அதை உண்டாக்கவில்லை, அதில் மனிதர் வாழவே அதை உருவாக்கினார்): "நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை;
ஏசாயா 45 : 19 (RCTA)
மறைவிலோ, மண்ணுலகின் இருட்டான இடத்திலோ நாம் பேசினதில்லை; 'வீணாக நம்மைத் தேடுங்கள்' என்று யாக்கோபின் வித்துக்கு நாம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நாம் உண்மையைப் பேசுகிறோம், நேர்மையானவற்றை அறிவிக்கிறோம்.
ஏசாயா 45 : 20 (RCTA)
புறவினத்தாருள் தப்பிப் பிழைத்தவர்களே, ஒன்றுகூடி எல்லாரும் சேர்ந்து வாருங்கள்; மரச் சிலையைத் தூக்கிக் கொண்டு வலம் வருவோரும், மீட்க முடியாத தெய்வத்திடம் வேண்டிக் கொள்வோரும் மதியீனர்கள் ஆவர்.
ஏசாயா 45 : 21 (RCTA)
அறிவியுங்கன், உங்கள் நியாயத்தைக் கூறுங்கள், ஒன்றாய்க் கூடி ஆலோசனை செய்யுங்கள்; முதலிலிருந்தே இதை அறிவித்தவர் யார்? தொடக்கக் காலத்திலேயே தெரிவித்தவர் யார்? ஆண்டவராகிய நாமல்லவோ? நம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை. நீதியுள்ளவரும், மீட்கிறவருமான கடவுள் நம்மையல்லால் வேறு யாருமில்லை.
ஏசாயா 45 : 22 (RCTA)
உலகத்தின் எல்லைகளில் வாழும் மக்களே, நீங்கள் அனைவரும் நம்மிடம் திரும்பி வாருங்கள், நீங்கள் மீட்பு அடைவீர்கள். ஏனெனில் நாமே கடவுள், வேறு எவனுமில்லை.
ஏசாயா 45 : 23 (RCTA)
நம் மேலேயே நாம் ஆணையிட்டோம், நம் வாயிலிருந்து புறப்படுவது உண்மையே, பொய்யா மொழியே: (24) எல்லா முழந்தாளும் நமக்கு மண்டியிடும், எல்லா நாவும் நம் பெயரால் ஆணையிடும்.'
ஏசாயா 45 : 24 (RCTA)
(25) நம்மைப் பற்றி மக்கள் சொல்வது இதுவே: ஆண்டவர் ஒருவரிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கின்றன; அவருக்கு எதிராய் எழுந்தவர் அனைவரும், வெட்கத்தோடு அவர் முன் வருவர்.
ஏசாயா 45 : 25 (RCTA)
(26) இஸ்ராயேலின் வழித்தோன்றல் அனைத்திற்கும் ஆண்டவர் வழியாகவே நீதி வழங்கப்படும்; அவர் வழியாகவே அவர்களுடைய புகழோங்கும்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25