ஏசாயா 4 : 1 (RCTA)
அந் நாளில் ஓர் ஆணை ஏழு பெண்கள் பிடித்துக் கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிடுவோம், நாங்களே எங்கள் உடைகளைத் தேடிக் கொள்வோம், உமது பேர் எங்களுக்கு வழங்கச் செய்யும், எங்கள் நிந்தை நீங்கச் செய்தால் போதும்" என்பார்கள்.
ஏசாயா 4 : 2 (RCTA)
அந் நாளில் ஆண்டவரின் தளிர் அழகும் மகிமையும் வாய்ந்திருக்கும்; நாட்டில் விளையும் நற்கனி, இஸ்ராயேலில் எஞ்சியோரின் மகிமையும் பெருமையுமாயிருக்கும்.
ஏசாயா 4 : 3 (RCTA)
சீயோனில் எஞ்சி யிருப்பவர்களும் யெருசலேமில் விடப்பட்டவர்களும் புனிதர்கள் என்றே சொல்லப்படுவர்; யெருசலேமில் வாழ்வதற்கெனப் பேரெழுதப்பட்டவன் ஒவ்வொருவனும் புனிதன் எனப்படுவான்.
ஏசாயா 4 : 4 (RCTA)
ஆண்டவர் சீயோன் மகளின் அசுத்தத்தையும், யெருசலேமின் இரத்தக் கறைகளையும், நீதியின் ஆவியாலும் நெருப்பின் ஆவியாலும், அதினின்று கழுவித் தூய்மைப் படுத்துவார்;
ஏசாயா 4 : 5 (RCTA)
பின்னர், சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், ஆங்கே கூடிவரும் சபைகள் மேலும், பகலில் மேகமும் இரவில் புகைப் படலமும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச்சுடரும் ஆண்டவர் தாமே படைத்தருள்வார்; ஏனெனில், அனைத்திற்கும் மேலே ஆண்டவரின் மகிமை கவிகையாகவும் கூடாரமாகவும் இருக்கும்;
ஏசாயா 4 : 6 (RCTA)
அது பகலில் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், மழைக்கும் காற்றுக்கும் தப்பிக்கப் புகலிடமும் பாதுகாப்புமாயிருக்கும்.
❮
❯