ஏசாயா 15 : 1 (RCTA)
மோவாபைப் பற்றிய இறைவாக்கு: ஆர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது; கீர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது.
ஏசாயா 15 : 2 (RCTA)
அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும்.
ஏசாயா 15 : 3 (RCTA)
தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
ஏசாயா 15 : 4 (RCTA)
எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது; அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது.
ஏசாயா 15 : 5 (RCTA)
மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷூலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்; லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர்.
ஏசாயா 15 : 6 (RCTA)
நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது.
ஏசாயா 15 : 7 (RCTA)
ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள்.
ஏசாயா 15 : 8 (RCTA)
மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது.
ஏசாயா 15 : 9 (RCTA)
தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்; மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.

1 2 3 4 5 6 7 8 9