ஓசியா 7 : 1 (RCTA)
நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
ஓசியா 7 : 2 (RCTA)
அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன.
ஓசியா 7 : 3 (RCTA)
இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசியா 7 : 4 (RCTA)
மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள்.
ஓசியா 7 : 5 (RCTA)
நம் அரசனின் நாளில், தலைவர்கள் குடிவெறியால் போதையேறிக் கிடந்தனர்; அரசனும் கயவர்களோடு சேர்ந்து கொண்டான்.
ஓசியா 7 : 6 (RCTA)
சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும்.
ஓசியா 7 : 7 (RCTA)
அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.
ஓசியா 7 : 8 (RCTA)
எப்பிராயீம் புறவினத்தாருடன் கலந்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான்.
ஓசியா 7 : 9 (RCTA)
அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை.
ஓசியா 7 : 10 (RCTA)
இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லியும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் அவரைத் தேடவில்லை.
ஓசியா 7 : 11 (RCTA)
அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள்.
ஓசியா 7 : 12 (RCTA)
அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.
ஓசியா 7 : 13 (RCTA)
அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே!
ஓசியா 7 : 14 (RCTA)
தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.
ஓசியா 7 : 15 (RCTA)
நாமே அவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தோள்கள் வலிமை பெறச் செய்திருந்தும், நமக்கே விரோதமாய்ச் சதி செய்கிறார்கள்.
ஓசியா 7 : 16 (RCTA)
பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.
❮
❯