ஓசியா 4 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; நாட்டுக் குடிகளோடு ஆண்டவர் வழக்காடப் போகிறார்: உண்மையோ பரிவோ நாட்டில் இல்லை, கடவுளை அறியும் அறிவு கூட இல்லை.
ஓசியா 4 : 2 (RCTA)
பொய்யாணை, புளுகு, கொலை, களவு, விபசாரம் ஆகியவை நாட்டில் மலிந்துள்ளன; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.
ஓசியா 4 : 3 (RCTA)
ஆதலால், நாடு புலம்புகிறது, அதில் வாழ்கின்ற உயிர்கள் யாவும், வயல் வெளி மிருகங்களும் வானத்துப் பறவைகளும் ஒருங்கே சோர்வடைந்திருக்கின்றன; கடல் வாழ் மீன்களும் அழிந்து போகின்றன.
ஓசியா 4 : 4 (RCTA)
ஆயினும் எவனும் வழக்காட வேண்டா, எவனும் குற்றஞ்சாட்ட வேண்டா; அர்ச்சகனே, உன்னைத்தான் குற்றஞ்சாட்டுகிறோம்.
ஓசியா 4 : 5 (RCTA)
பகலிலே நீ இடறி விழுகிறாய், இரவில் தீர்க்கத்தரிசியும் உன்னோடு இடறி விழுகிறான்; உன் தாயை நாம் அழித்து விடுவோம்.
ஓசியா 4 : 6 (RCTA)
அறிவின்மையால் நம் மக்கள் அழிகிறார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தது போல, நீ நமக்கு அர்ச்சகனாய் இராதபடி நாமும் உன்னைப் புறக்கணிப்போம். உன் கடவுளின் திருச்சட்டத்தை நீ மறந்து விட்டதால் நாமும் உம் மக்களை மறந்து விடுவோம்.
ஓசியா 4 : 7 (RCTA)
எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம்.
ஓசியா 4 : 8 (RCTA)
நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள்.
ஓசியா 4 : 9 (RCTA)
அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.
ஓசியா 4 : 10 (RCTA)
அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நிறைவடைய மாட்டார்கள், வேசித்தனம் செய்தாலும் அவர்கள் பலுகமாட்டார்கள்; ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரை அவர்கள் கைவிட்டார்கள்.
ஓசியா 4 : 11 (RCTA)
திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது.
ஓசியா 4 : 12 (RCTA)
நம் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர், அவர்கள் கோல் மறைமொழிகள் கூறிடும்! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அகன்றனர்.
ஓசியா 4 : 13 (RCTA)
மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.
ஓசியா 4 : 14 (RCTA)
உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்யினும், உங்கள் மனைவியர் விபசாரம் புரிந்தாலும் நாம் அவர்களைத் தண்டிக்கமாட்டோம்; ஏனெனில் ஆண்களே வேசிகளோடு திரிகிறார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலியிடுகிறார்கள்; இவ்வாறு அறிவற்ற அம்மக்கள் அழிந்து போகிறார்கள்.
ஓசியா 4 : 15 (RCTA)
இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; "ஆண்டவர் மேல் ஆணை" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா.
ஓசியா 4 : 16 (RCTA)
கட்டுக்கடங்காத இளம் பசுபோல் இஸ்ராயேல் மக்கள் பிடிவாதமாய் இருக்க, அவர்களை ஆண்டவர் பரந்த புல் வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல மேய்க்க முடியுமா?
ஓசியா 4 : 17 (RCTA)
எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு.
ஓசியா 4 : 18 (RCTA)
குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; தங்களுடைய மகிமையைக் காட்டிலும் மானக்கேட்டையே மிகுதியாய் விரும்புகிறார்கள்;
ஓசியா 4 : 19 (RCTA)
காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் மூடிக் கொண்டது, தாங்கள் இட்ட பலிகளைக் குறித்துத் தலை நாணுவர்.
❮
❯