ஓசியா 3 : 1 (RCTA)
ஆண்டவர் மீண்டும் என்னிடம் சொன்னதாவது: "வேற்றுத் தெய்வங்கள் மேல் பற்றுக்கொண்டு, உலர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்ற இஸ்ராயேல் மக்கள் மேல் ஆண்டவர் எவ்வாறு அன்பு கொண்டுள்ளாரோ, அவ்வாறே வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒருத்தி மேல் நீ காதல் கொள்."
ஓசியா 3 : 2 (RCTA)
அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.
ஓசியா 3 : 3 (RCTA)
பின்பு அவளை நோக்கி, "நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்" என்றேன்.
ஓசியா 3 : 4 (RCTA)
ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் நெடுநாளைக்கு அரசனும் தலைவனுமின்றி, பலியும் பீடமுமின்றி, அர்ச்சகரும் ஆசாரியனுமின்றி இருப்பார்கள்
ஓசியா 3 : 5 (RCTA)
அதற்குப் பிறகு, இஸ்ராயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும், தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள்; இறுதி நாட்களில் ஆண்டவரையும், அவர் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு அணுகி வருவார்கள்.

1 2 3 4 5