ஓசியா 14 : 1 (RCTA)
(2) இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,
ஓசியா 14 : 2 (RCTA)
(3) வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: "அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்; அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள்,
ஓசியா 14 : 3 (RCTA)
(4) குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்; எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, 'எங்கள் இறைவா!' என்று சொல்ல மாட்டோம்; ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள்.
ஓசியா 14 : 4 (RCTA)
(5) அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்; ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது,
ஓசியா 14 : 5 (RCTA)
(6) நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான்.
ஓசியா 14 : 6 (RCTA)
(7) அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்; லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.
ஓசியா 14 : 7 (RCTA)
(8) நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும்
ஓசியா 14 : 8 (RCTA)
(9) இனிமேல் எப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு? நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்; பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்; நீ கனிகொடுப்பது நம்மால் தான்.
ஓசியா 14 : 9 (RCTA)
(10) ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.
❮
❯