ஓசியா 10 : 1 (RCTA)
இஸ்ராயேல் தழைத்து வளர்ந்த ஒரு திராட்சைக் கொடி, அது நிரம்பக் கனிகளைக் கொடுத்தது. எவ்வளவு மிகுதியாக கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாகப் பீடங்களை அமைத்தது; நாடு எவ்வளவுக்குச் சிறப்புற்றதோ அவ்வளவுக்கு சிலைகள் சிறப்புப் பெற்றன.
ஓசியா 10 : 2 (RCTA)
இருமனம் கொண்ட மக்கள் அவர்கள்,ஆதலால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். ஆண்டவரோ அவர்களுடைய பீடங்களைத் தகர்த்திடுவார், அவர்களுடைய சிலைகளை நொறுக்கிடுவார்.
ஓசியா 10 : 3 (RCTA)
அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை, நாமோ ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை, அரசனுந்தான் நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.
ஓசியா 10 : 4 (RCTA)
வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
ஓசியா 10 : 5 (RCTA)
பெத்தாவானில் கன்றின் முன்னிலையில் சமாரியாவின் மக்கள் நடுங்குகின்றார்கள்; அதனுடைய மகிமை இப்பொழுது மறைந்து போயிற்று, ஆகவே அதன் மக்கள் அதைக் குறித்து அழுகின்றனர்; அதன் பூசாரிகளும் அதற்காகப் புலம்புகின்றனர்.
ஓசியா 10 : 6 (RCTA)
ஆம், அந்தக் கன்றின் சிலையே திறைப் பொருளாக அசீரிய மாமன்னனுக்குக் கொண்டுப் போகப்படும்; எப்பிராயீம் இதைப்பற்றி வெட்கப்படும், இஸ்ராயேல் தனது சிலையை நினைத்துத் தலை நாணும்.
ஓசியா 10 : 7 (RCTA)
சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான்.
ஓசியா 10 : 8 (RCTA)
இஸ்ராயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடங்களெல்லாம் அழிக்கப்படும்; அவற்றின் பீடங்கள் மேல் முட்களும் முட்புதர்களும் வளரும், அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள்," குன்றுகளைப் பார்த்து, "எங்கள்மேல் விழுங்கள்" என்பார்கள்.
ஓசியா 10 : 9 (RCTA)
காபாவில் தங்கியிருந்த காலந்தொட்டே நீ பாவஞ் செய்து வந்திருக்கிறாய், இன்னும் தொடர்ந்து செய்து வருகிறாய்; காபாவின்ன அக்கிரமக்காரர் மேல் கடும் போர் எழாமல் போய்விடுமா?
ஓசியா 10 : 10 (RCTA)
நாம் வந்து அவர்களைத் தண்டிப்போம், அவர்களது இருவகையான அக்கிரமத்திற்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்று கூடும்.
ஓசியா 10 : 11 (RCTA)
எப்பிராயீம் புணையடிக்கப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவுக்கு ஒப்பானவன், நாமே அதன் அழகான கழுத்தின் மீது நுகத்தை வைப்போம், எப்பிராயீமை நுகத்தில் பூட்டுவோம், யூதா நிலத்தை உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
ஓசியா 10 : 12 (RCTA)
உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது.
ஓசியா 10 : 13 (RCTA)
நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால்,
ஓசியா 10 : 14 (RCTA)
உங்கள் மக்களிடையே போர்க்குரல் எழும்பும்; சல்மான் போரில் பெத்- ஆர்பெல்லை அழித்தது போல் உங்கள் கோட்டைகள் யாவும் அழிக்கப்படும்; தாய்மாரும் குழந்தைகளும் நொறுக்கப்படுவர்.
ஓசியா 10 : 15 (RCTA)
இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் மாபெரும் அக்கிரமத்திற்காக உங்களுக்கும் இவ்வாறே செய்யப்படும்;

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15