எபிரேயர் 6 : 1 (RCTA)
ஆகையால் கிறிஸ்துவைப்பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையைவிடுத்து, முதிர்நிலைக்குச் செல்வோம் சாவுக்குரிய செயல்களிலிருந்து மனந்திரும்புதல்,
எபிரேயர் 6 : 2 (RCTA)
கடவுளில் விசுவாசம், கழுவுதல் சடங்குகளையும் கைகளை விரித்தலையும் பற்றிய போதனை, இறந்தோர் உயிர்த்தெழுதல், முடிவில்லா வாழ்வுக்கான தீர்ப்பு ஆகியவற்றைப் போதித்து மறுபடியும் அடிப்படை இடவேண்டியதில்லை.
எபிரேயர் 6 : 3 (RCTA)
கடவுளுக்கு விருப்பமானால் இம் முதிர் நிலைப் படிப்பினையை இனி விளக்குவோம்.
எபிரேயர் 6 : 4 (RCTA)
ஒருமுறை ஒளியைப் பெற்று வானகக் கொடையைச் சுவைத்தவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கு பெற்றவர்கள்,
எபிரேயர் 6 : 5 (RCTA)
கடவுளின் நற்போதனையையும், வரவிருக்கும் உலகத்தைச் சார்ந்த ஆற்றல்களையும் துய்த்தவர்கள்,
எபிரேயர் 6 : 6 (RCTA)
நெறி பிறழ்ந்து விடின், அவர்கள் மீண்டும் மனந்திரும்பிப் புத்துணர்வு பெறச் செய்வது அரிது.
எபிரேயர் 6 : 7 (RCTA)
ஏனெனில், அவர்கள் கடவுளுடைய மகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து அவரை வெளிப்படையாக இகழ்பவர்களாகின்றனர்.
எபிரேயர் 6 : 8 (RCTA)
பெய்யும் மழைநீரை உள்ளிழுத்துக் குடியானவர்களுக்குப் பயன்தரும் முறையில் பயிரை முளைப்பிக்கும் நிலம் கடவுளுடைய ஆசி பெறும். மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பித்தால் அந்நிலம் பயனற்றது. அது பெறுவது சாபமே. தீக்கிரையாவதே அதன் முடிவு.
எபிரேயர் 6 : 9 (RCTA)
அன்புக்குரியவர்களே, இவ்வாறு நாம் பேசினபோதிலும், உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் அவ்வளவு கேடான நிலையில் இல்லை; மீட்பின் வழியில்தான் இருக்கின்றீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.
எபிரேயர் 6 : 10 (RCTA)
ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்லர். இறைமக்களுக்கு நீங்கள் முன்பு செய்த பணிவிடையிலும், இப்போது செய்துவரும் பணிவிடையிலும் கடவுளின் பெயருக்கு அன்பு காட்டிச் செய்ததை அவர் மறக்கமாட்டார்.
எபிரேயர் 6 : 11 (RCTA)
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முற்றும் உறுதி பெறும்படி உங்களுள் ஒவ்வொருவனும் இறுதிவரை அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று விரும்புகிறோம்.
எபிரேயர் 6 : 12 (RCTA)
நீங்கள் சோம்பலுக்கு இடம் தராமல் விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குறுதிகளை உரிமையாக்கிக் கொண்டவர்களைப் பின்பற்ற வேண்டும்.
எபிரேயர் 6 : 13 (RCTA)
அந்த வாக்குறுதிகளைக் கடவுள் ஆபிரகாமுக்கு அளித்தபோது, ஆணையிட்டழைப்பதற்குத் தம்மைவிட மேலானவர் ஒருவரும் இல்லாததால், தாமே தம் பெயரால் ஆணையிட்டு, "என்மேல் ஆணை: என் ஆசி உன்மீதிருக்கும்.
எபிரேயர் 6 : 14 (RCTA)
உன்னைப் பெருந்திரளாய்ப் பெருகச் செய்வேன் " என்றார்.
எபிரேயர் 6 : 15 (RCTA)
இதன்படி ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்தபின், கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.
எபிரேயர் 6 : 16 (RCTA)
தங்களைவிட மேலான ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அந்த முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.
எபிரேயர் 6 : 17 (RCTA)
அப்படியிருக்க, கடவுள் தமது வாக்குறுதியின் உரிமையாளர்களுக்குத் தம் திட்டத்தின் மாறாத்தன்மையை இன்னும் தெளிவாய்க் காண்பிக்க விரும்பி, ஆணையிட்டுத் தாமே பிணையம் நின்றார்.
எபிரேயர் 6 : 18 (RCTA)
கடவுள் நம்மை ஏமாற்ற முடியாதவாறு, மாறாத்தன்மை கொண்ட இரு பிணைப்புக்கள் இவ்வாறு ஏற்பட்டன. இங்ஙனம் இறைவன் தம்முடைய அடைக்கலத்தைத் தேடும் நமக்கு நம் கண்முன் நிற்கும் நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்குப் பேரூக்கம் அளிக்க விரும்பினார்.
எபிரேயர் 6 : 19 (RCTA)
அந்த நம்பிக்கைதான் நம் ஆன்மாவுக்கு நங்கூரம்போல் உள்ளது. அது உறுதியானது. நிலையானது. அந்த நம்பிக்கை திரைச்சீலைக்கு அப்பாலும் எட்டியிருக்கிறது.
எபிரேயர் 6 : 20 (RCTA)
மெல்கிசேதேக் முறைமைப்படி இயேசு என்றென்றும் தலைமைக் குருவாகி, நம் சார்பாக நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச் சீலையைக் கடந்து சென்றிருக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: