ஆதியாகமம் 9 : 1 (RCTA)
பின் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள்.
ஆதியாகமம் 9 : 2 (RCTA)
பூமியின் எல்லா உயிரினங்களும், வானத்துப் பறவைகள் அனைத்தும் பூமியின் மீது நடமாடுகிற மற்றுமுள்ள யாவும் உங்கள் முன்னிலையில் அஞ்சி நடுங்குவனவாக. (அன்றியும்) கடலிலுள்ள எல்லா மீன்களும் உங்களுக்கு கையளிக்கப் பட்டிருக்கின்றன.
ஆதியாகமம் 9 : 3 (RCTA)
உயிரும் அசைவும் கொண்டுள்ள யாவும் உங்களுக்கு உணவாய் இருப்பனவாக. பசும் புற்பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல் அவையெல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தோம்.
ஆதியாகமம் 9 : 4 (RCTA)
ஆயினும், இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதிருப்பீர்களாக.
ஆதியாகமம் 9 : 5 (RCTA)
ஏனென்றால், உங்கள் உயிரின் இரத்தத்துக்காக எல்லா உயிரினங்களிடத்தும் மனிதனிடத்தும் பழிவாங்குவோம். மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடம் பழிவாங்குவோம்.
ஆதியாகமம் 9 : 6 (RCTA)
மனித இரத்தத்தைச் சிந்துபவன் இரத்தமும் சிந்தப்படும். ஏனென்றால், மனிதன் தெய்வச் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளான்.
ஆதியாகமம் 9 : 7 (RCTA)
நீங்களோ பலுகிப் பெருகிப் பூமியில் பரவி அதனை நிரப்புங்கள் (என்றருளினார்).
ஆதியாகமம் 9 : 8 (RCTA)
மேலும் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் நோக்கி:
ஆதியாகமம் 9 : 9 (RCTA)
இதோ, நாம் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரோடும்,
ஆதியாகமம் 9 : 10 (RCTA)
பெட்டகத்திலிருந்து வெளியேறி உங்கள் அண்டையிலிருக்கிற பறவைகள், வீட்டு மிருகங்கள், மற்றும் பூமியிலுள்ள காட்டு விலங்குகள் முதலிய எல்லா உயிரினங்களோடும் நமது உடன்படிக்கையை நிறுவுவோம்.
ஆதியாகமம் 9 : 11 (RCTA)
உங்களோடு நாம் உடன்படிக்கை செய்வோம். ஆதலால், இனி மாமிசமெல்லாம் வெள்ளப் பெருக்குகளால் ஒருபோதும் அழிக்கப்படா. உண்மையில், பூமியைப் பாழாக்க இனி வெள்ளப் பெருக்கு வராது என்றருளினார்.
ஆதியாகமம் 9 : 12 (RCTA)
மேலும் கடவுள்: நமக்கும் உங்களுக்கும், உங்களுடனிருக்கும் எல்லா உயிரினங்களுக்குமிடையே நித்திய தலைமுறைகளுக்கென்று நாம் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் அடையாளமாவது:
ஆதியாகமம் 9 : 13 (RCTA)
நமது வில்லை மேகங்களிலே வைப்போம். அதுவே நமக்கும் உலகத்துக்குமிடையேயுள்ள உடன்படிக்கையின் அடையாளமாகும்.
ஆதியாகமம் 9 : 14 (RCTA)
ஆதலால், நாம் வானத்தை மேகங்களால் மறைத்திருக்கும் போது நம்முடைய வில் அங்குக் காணப்படும்.
ஆதியாகமம் 9 : 15 (RCTA)
அப்போது உங்களோடும் எல்லா உயிரினங்களோடும் (செய்துகொண்ட) நமது உடன்படிக்கையை நினைவு கூருவோமாகையால், இனி எல்லா உயிர்களையும் அழிக்கும் வெள்ளப் பெருக்கு இராது.
ஆதியாகமம் 9 : 16 (RCTA)
வில் மேகங்களில் தோன்றும். அதைக் கண்டு, கடவுளாகிய நமக்கும், உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்குமிடையே ஏற்பட்ட நித்திய உடன்படிக்கையை நினைத்தருள்வோம் (என்றார்).
ஆதியாகமம் 9 : 17 (RCTA)
கடைசியாகக் கடவுள் நோவாவை நோக்கி: நமக்கும் உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்குமிடையே நாம் செய்துள்ள உடன்படிக்கையின் அடையாளம் அதுவேயாம் என்று சொல்லி முடித்தார்.
ஆதியாகமம் 9 : 18 (RCTA)
பெட்டகத்திலிருந்து வெளியேறிய நோவாவின் புதல்வர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தந்தை.
ஆதியாகமம் 9 : 19 (RCTA)
நோவாவின் மூன்று மக்கள் இவர்களே. இவர்களால் மனித இனம் எல்லாம் உலகம் முழுவதும் பரவிற்று.
ஆதியாகமம் 9 : 20 (RCTA)
நோவா உழவராகிப் பயிரிடத் தொடங்கித் திராட்சை நட்டுத் தோட்டம் அமைத்தார்.
ஆதியாகமம் 9 : 21 (RCTA)
திராட்சை இரசத்தை அவர் குடித்த போது மயக்கம் கொண்டு தம் சுடாரத்துக்குள் ஆடை விலகிய நிலையில் படுத்திருந்தார்.
ஆதியாகமம் 9 : 22 (RCTA)
அப்போது கானானின் தந்தையாகிய காம் தன் தந்தையின் நிருவாணத்தைக் கண்டவுடன், வெளியே இருந்த தன் இரு சகோதரருக்கும், இச் செய்தியைத் தெரிவித்தான்.
ஆதியாகமம் 9 : 23 (RCTA)
அப்போது சேமும் யாப்பேத்தும் ஓர் ஆடையை எடுத்துத் தங்கள் இருவர் தோள் மீதும் போட்டுக் கொண்டு புறங்காட்டி வந்து தங்கள் தந்தையின் நிருவாணத்தை மூடினர். அவர்கள் திரும்பின முகமாய் வந்ததனால் தங்கள் தந்தையின் நிருவாணத்தைப் பார்க்கவில்லை.
ஆதியாகமம் 9 : 24 (RCTA)
இரசத்தால் உண்டான மயக்கம் தெளிந்த போது, நோவா தம் இளைய மகன் தனக்குச் செய்ததைக் கேட்டறிந்ததும்:
ஆதியாகமம் 9 : 25 (RCTA)
கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரரின் அடிமைகளுக்கு அடிமையாய் இருப்பான் என்றார்.
ஆதியாகமம் 9 : 26 (RCTA)
மேலும்: சேமின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. கானான் இவனுக்கு அடிமையாய் இருக்கக் கடவான்.
ஆதியாகமம் 9 : 27 (RCTA)
கடவுள் யாப்பேத்தை விருத்தியாகச் செய்வாராக. அன்றியும் அவன் சேமின் கூடாரங்களில் வாசம் செய்வானாக. கானான் அவனுக்கும் அடிமையாய் இருக்கக் கடவான் என்றார்.
ஆதியாகமம் 9 : 28 (RCTA)
நோவா வெள்ளப் பெருக்கிற்குப் பின் முந்நூற்றைம்பது ஆண்டு வாழ்ந்தார்.
ஆதியாகமம் 9 : 29 (RCTA)
(28b) அவர் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் தொள்ளாயிரத்தைம்பது ஆண்டுகள். பின் இறந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: