ஆதியாகமம் 48 : 1 (RCTA)
இதன் பின்னர், அவர் தம் தந்தையின் உடல் நலம் சரி இல்லை என்று சூசைக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், தம் இரு புதல்வர்களாகிய மனாசேயையும் எபிராயிமையும் அழைத்துக் கொண்டு பயணமானார்.
ஆதியாகமம் 48 : 2 (RCTA)
இதோ உம் புதல்வர் சூசை உம்மிடம் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் சொல்லவே, அவன் திடம் கொண்டு எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தான்.
ஆதியாகமம் 48 : 3 (RCTA)
பின், தன் கிட்ட வந்த (சூசையை) நோக்கி: எல்லாம் வல்ல கடவுள் கானான் நாட்டிலுள்ள லூசாவிலே எனக்குக் காட்சியளித்து என்னை ஆசீர்வதித்து:
ஆதியாகமம் 48 : 4 (RCTA)
நாம் உன்னைப் பலுகிப் பெருகச் செய்வோம். உன்னைக் கூட்டமான பெருங்குடியாகச் செய்வோம். இந்நாட்டை உனக்கும், உனக்குப் பின் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகத் தருவோம் என்றருளினார்.
ஆதியாகமம் 48 : 5 (RCTA)
ஆகையால், நான் எகிப்துக்கு வந்து உன்னிடம் சேருவதற்கு முன்னே உனக்கு இந்நாட்டிலே பிறந்த இரண்டு மக்களும் எனக்குப் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன் சிமையோன் போன்று எபிராயிமும் மனாசேயும் என்னுடையவர்கள் என்று எண்ணப்படுவார்கள்.
ஆதியாகமம் 48 : 6 (RCTA)
இவர்களுக்குப் பின் நீ பெறும் மற்ற புதல்வர்களோ, உன்னுடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தத்தம் சகோதரருடைய பெயரால் அழைக்கப்பட்டு, அவரவர்களுக்கு உரிய உரிமையில் பங்கு பெறுவார்கள்.
ஆதியாகமம் 48 : 7 (RCTA)
ஏனென்றால், நான் மெசொப்பொத்தாமியாவைவிட்டு வருகையில், வழியிலே எனது இராக்கேல் கானான் நாட்டில் இறந்தாள். அப்பொழுது வசந்த காலம். நான் எபிறாத்தாவுக்கு அண்மையில் இருந்தேன். பெத்லகேம் என்று அழைக்கப்படுகிற எபிறாத்தா ஊருக்குப் போகும் பாதை ஓரத்திலே அவளை அடக்கம் செய்தேன் என்றான்.
ஆதியாகமம் 48 : 8 (RCTA)
பின் அவன் சூசையின் புதல்வர்களைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டதற்கு, சூசை:
ஆதியாகமம் 48 : 9 (RCTA)
இவர்கள் இந்நாட்டிலே கடவுள் எனக்குத் தந்தருளின புதல்வர்கள் என்று சொல்ல, அவன்: அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்றான்.
ஆதியாகமம் 48 : 10 (RCTA)
உள்ளபடி, முதிர் வயதினால் இஸ்ராயேலின் கண்கள் மங்கலாய் இருந்தன. எனவே, அவன் நன்கு பார்க்கக் கூடாதவனாய் இருந்தான். அவர்களைத் தன் அருகிலே சேர்ப்பித்த போது, அவன் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டான்.
ஆதியாகமம் 48 : 11 (RCTA)
பின் தன் மகனை நோக்கி: நான் உன்னையும் காணும் பேறு பெற்றேன்; உன் புதல்வர்களையும் காணும்படி கடவுள் அருள் செய்துள்ளார் என்றான்.
ஆதியாகமம் 48 : 12 (RCTA)
சூசை யாக்கோபின் மடியிலிருந்த தன் பிள்ளைகளைப் பின்னிடச் செய்து, தாமே தரைமட்டும் குனிந்து வணங்கினார்.
ஆதியாகமம் 48 : 13 (RCTA)
பின், சூசை எபிராயிமைத் தம் வலப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் இடக் கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் வலக்கைக்கு நேராகவும் நிறுத்தினார்.
ஆதியாகமம் 48 : 14 (RCTA)
யாக்கோபோ, தன் இரு கைகளையும் குறுக்கீடாக அமைத்துக் கொண்டு, வலக்கையை இளையவன் எபிராயிம் தலை மேலும், இடக் கையை மூத்தவன் மனாசே தலை மேலும் வேண்டுமென்றே வைத்து, சூசையின் புதல்வர்களை ஆசீர்வதித்தான்.
ஆதியாகமம் 48 : 15 (RCTA)
எப்படியென்றால்: என் தந்தையரான ஆபிரகாம் ஈசாக் எவருடைய திருமுன் நடந்தொழுகி வந்தனரோ, இளமை முதல் இந்நாள் வரை என்னைப் பேணிக் காத்து வருகின்ற அந்தக் கடவுளும், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட வானவனும்,
ஆதியாகமம் 48 : 16 (RCTA)
இச்சிறுவர்களை ஆசீர்வதிப்பாராக. மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம் ஈசாக்கின் பெயர்களும் இவர்களுக்கு இடப்படுவனவாக. பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகக் கடவார்கள் என்றான்.
ஆதியாகமம் 48 : 17 (RCTA)
தந்தை தன் வலக் கையை எபிராயிம் தலை மேல் வைத்திருந்தது கண்டு, சூசை மனவருத்தம் கொண்டு, எபிராயிம் தலை மேலிருந்த தன் தந்தையின் கையை, மனாசேயின் தலைமேல் வைக்கும்படி, எடுக்க முயன்று:
ஆதியாகமம் 48 : 18 (RCTA)
தந்தையே, இது தகுதியல்லவே. இவன் தான் மூத்தவன். இவன் தலையின் மேல் உமது வலக் கையை வைக்க வேண்டும் என்றார்.
ஆதியாகமம் 48 : 19 (RCTA)
அதற்கு அவன் இசையாமல்: தெரியும், மகனே, எனக்குத் தெரியும். இவன் பெருங்குடியாகப் பலுகுவான் என்பது மெய்யே. ஆனால், இவன் தம்பி இவனிலும் பெரியவனாவான். அவன் சந்ததியார் திரளான மக்களாகப் பெருகுவார்கள் என்று சொல்லி,
ஆதியாகமம் 48 : 20 (RCTA)
அவர்களை அப்பொழுதே ஆசிர்வதித்து: உன்னில் இஸ்ராயேல் ஆசீர்வதிக்கப்படுவதுமன்றி, கடவுள் எபிராயிமுக்கும் மனாசேக்கும் செய்ததுபோல் உனக்கும் செய்யக் கடவராக என்று சொல்லவும்படும் என்றான். அவ்விதமாய் எபிராயிமை மனாசேக்கு முன்னிடத்தில் வைத்தான்.
ஆதியாகமம் 48 : 21 (RCTA)
பின், அவன் தன் மகன் சூசையை நோக்கி: இதோ நான் சாகப் போகிறேன். ஆண்டவர் உங்களோடு இருப்பார். அவர் உங்கள் மூதாதையருடைய நாட்டிற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார்.
ஆதியாகமம் 48 : 22 (RCTA)
உன் சகோதரருக்குக் கொடுத்ததைக் காட்டிலும் உனக்கு நான் ஒரு பாகம் அதிகமாய்க் கொடுக்கிறேன். அதை நான் என் வாளினாலும் என் வில்லினாலும் அமோறையர் கையிலிருந்து சம்பாதித்தேன் என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: