ஆதியாகமம் 46 : 1 (RCTA)
பின், இஸ்ராயேல் தனக்குள்ள யாவற்றையும் சேர்த்துக் கொண்டு பயணமாகி, பிரமாணிக்கக் கிணறு என்னும் இடம் வந்து சேர்ந்தான். அவ்விடத்தில் தன் தந்தையாகிய ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தான்.
ஆதியாகமம் 46 : 2 (RCTA)
அன்றிரவு கடவுள் அவனுக்குத் தோன்றி: யாக்கோப், யாக்கோப் என்று அழைப்பதைக் கேட்டு, அவன்: இதோ இருக்கிறேன் என்று பதில் கூறினான்.
ஆதியாகமம் 46 : 3 (RCTA)
கடவுள்: உன் தந்தையின் எல்லாம் வல்ல கடவுள் நாமே. அஞ்சாதே. எகிப்து நாட்டிற்குப் போ. ஏனென்றால், அங்கே உன்னைப் பெருங்குடியாக வளரச் செய்வோம்.
ஆதியாகமம் 46 : 4 (RCTA)
நாம் உன்னோடு அவ்விடத்திற்கு வருவோம். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வரும் போது உன்னை கூட்டி வருவோம். சூசை தன் கையாலே உன் கண்களை மூடுவான் என்றார். யாக்கோபு பிரமாணிக்கக் கிணறு என்னும் இடத்திலிருந்து எழுந்தான்.
ஆதியாகமம் 46 : 5 (RCTA)
அப்பொழுது அவன் புதல்வர்கள், அவனையும் அவன் பிள்ளைகளையும் மனைவிகளையும் முதிர்ந்த வயதினனாகிய அவனுக்குப் பாரவோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டான்.
ஆதியாகமம் 46 : 6 (RCTA)
கானான் நாட்டில் அவன் சம்பாதித்திருந்த சொத்துக்கள் யாவற்றையும் கூடச் சேர்த்துக் கொண்டான். யாக்கோபு அவற்றோடும் தன் இனத்தார் எல்லோரோடும் எகிப்துக்குப் போனான்.
ஆதியாகமம் 46 : 7 (RCTA)
அவன் புதல்வரும் பேரரும் புதல்வியரும் (அவன்) இனத்தார் அனைவரும் அவனோடு போனார்கள்.
ஆதியாகமம் 46 : 8 (RCTA)
இஸ்ராயேல் தன் புதல்வரோடு எகிப்தை அடைந்த போது அவனுடைய புதல்வர்களின் பெயர்களாவன: மூத்த புதல்வன் ரூபன்.
ஆதியாகமம் 46 : 9 (RCTA)
ரூபனின் புதல்வர்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மி என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 10 (RCTA)
சிமையோனின் புதல்வர்: ஜமுயேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோகார், கானானையப் பெண்ணின் மகனான சவுல் என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 11 (RCTA)
லேவியின் புதல்வர்: யெற்சோன், காவாத், மெராரி என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 12 (RCTA)
யூதாவின் புதல்வர்: கேர், ஓனான், சேலா, பாரேஸ், ஜாரா என்பவர்களாம். கேரும் ஓனானும் கானான் நாட்டிலே இறந்து போயினர். எஸ்ரோன், ஆமுல் என்பவர்கள் பாரேஸீக்குப் பிறந்த புதல்வர்களாம்.
ஆதியாகமம் 46 : 13 (RCTA)
இசாக்காரின் புதல்வர்: தோலா, புவா, ஜோப், செமிரோன் என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 14 (RCTA)
சரேத், எலோன், ஜயேலேல் என்பவர்கள் சாபுலோனின் புதல்வர்.
ஆதியாகமம் 46 : 15 (RCTA)
இவர்களை லீயாள் என்பவள் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவிலே பெற்றாள். தீனாள் அவளது புதல்வி, அவளுக்குப் பிறந்த புதல்வர் புதல்வியர் எல்லாரும் முப்பத்து மூன்று பேர்.
ஆதியாகமம் 46 : 16 (RCTA)
காத்தின் புதல்வர்: செப்பியோன், அஃகி, சூனி, எசபோன், கேறி, அரோதி, ஆரேலி என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 17 (RCTA)
அசேரின் புதல்வர்: ஜமினே, ஜெசுவா, ஜெசுவி, பெரியா என்பவர்களாம். சாராள் இவர்களுடைய சகோதரி. எபேரும், மேற்கியேலும் பெரியாவின் புதல்வர்.
ஆதியாகமம் 46 : 18 (RCTA)
இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய லீயாளுக்குக் கொடுத்த ஜெல்பாளுடைய பிள்ளைகள். அவள் இந்தப் பதினாறு பேர்களையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
ஆதியாகமம் 46 : 19 (RCTA)
சூசை, பெஞ்சமின் என்பவர்கள், யாக்கோபின் மனைவி இராக்கேலின் புதல்வர்கள்.
ஆதியாகமம் 46 : 20 (RCTA)
சூசைக்கு எகிப்து நாட்டிலே புதல்வர் பிறந்தனர். எலியோப்பொலிசின் குருவாகிய புத்திபாரே என்பவரின் புதல்வியான ஆஸ்னேட், அவர்களை அவருக்குப் பெற்றனள். அவர்கள்: மனாசே, எபிராயிம் என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 21 (RCTA)
பெஞ்சமினின் புதல்வர்: பேலா, பேக்கோர், அஸ்பேல், ஜெரா, நாமான், எக்கி, ரோஸ், மொபீம், ஓபீம், ஆரேத் என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 22 (RCTA)
இவர்களே இராக்கேல் யாக்கோபுக்குப் பெற்ற பதினான்கு புதல்வர்களாம்.
ஆதியாகமம் 46 : 23 (RCTA)
தானுக்கு ஊசீம் என்னும் (ஒரே புதல்வன்) இருந்தான்.
ஆதியாகமம் 46 : 24 (RCTA)
நெப்தலியின் புதல்வர்: ஜசியேல், கூனி, ஜெசேல், சல்லேம் என்பவர்களாம்.
ஆதியாகமம் 46 : 25 (RCTA)
இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய இராக்கேலுக்குக் கொடுத்த பாளாளின் புதல்வர். இவர்களை அவள் யாக்கோபுக்குப் பெற்றாள். அவர்கள் மொத்தம் ஏழு பேர்களாம்.
ஆதியாகமம் 46 : 26 (RCTA)
யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவிகளைத் தவிர, அவனுடைய சந்தானப் புதல்வராயிருந்து எகிப்தில் குடிபுகுந்தோர் எல்லாரும் அறுபத்தாறு பேர்.
ஆதியாகமம் 46 : 27 (RCTA)
எகிப்து நாட்டிலே சூசைக்குப் பிறந்த புதல்வர்களோ இரண்டுபேர். (ஆகவே,) எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லாரும் எழுபது பேர்களாம்.
ஆதியாகமம் 46 : 28 (RCTA)
யேசேன் நாட்டில் சூசை தம்மை வந்து சந்திக்கவேண்டுமென்று சொல்லும்படி யாக்கோபு யூதாவை அவனுக்குத் தூதராக அனுப்பினார்.
ஆதியாகமம் 46 : 29 (RCTA)
இவன் அவ்விடம் சேர்ந்ததும், சூசை தம் தேரைத் தயார் செய்து, அதன் மேல் ஏறித் தந்தைக்கு எதிர் கொண்டு போய், அவனைக் கண்டவுடன் அவன் கழுத்தின் மீது விழுந்து அணைத்து அணைத்து அழுதார்.
ஆதியாகமம் 46 : 30 (RCTA)
அப்பொழுது தந்தை சூசையை நோக்கி: (அப்பா மகனே!) உன் முகத்தை நான் கண்டு விட்டேன்! எனக்குப் பின் உன்னை உயிருடன் இவ்வுலகில் விட்டுவைப்பேன்! ஆதலால், எனக்கு இப்பொழுதே சாவு வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றான்.
ஆதியாகமம் 46 : 31 (RCTA)
அவரோ, தம் சகோதரரையும், தம் தந்தையின் குடும்பத்தாரையும் பார்த்து: நான் பாரவோனிடம் போய்: கானான் நாட்டிலிருந்து என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
ஆதியாகமம் 46 : 32 (RCTA)
அவர்களோ ஆடு மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும், தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குச் செய்தி சொல்லுவேன்.
ஆதியாகமம் 46 : 33 (RCTA)
அவர் உங்களை வரவழைத்து: உங்கள் தொழில் என்ன என்று வினவும் போது, நீங்கள் மறுமொழியாக:
ஆதியாகமம் 46 : 34 (RCTA)
சிறு வயது முதல் இந்நாள் வரை உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோர்களைப் போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் யேசேன் நாட்டில் குடியிருக்கும்படியாகவே அவ்விதம் சொல்லுங்கள். ஏனென்றால், ஆடு மேய்ப்பவர்களை எகிப்தியர் மிகவும் வெறுக்கின்றனர் என்றார்.
❮
❯